ஜபம்-பதிவு-788
(சாவேயில்லாத
சிகண்டி-122)
பாஞ்சால மன்னன்
துருபதன்
தன்னுடைய மகள்
சிகண்டினிக்கு
இளவரசிக்குத்
தேவையான அனைத்து
கலைகளையும்
பயிற்றுவித்தான்.
கல்வி, அரசியல்,
பொருளாதாரம்,
இலக்கியம்,
நீதிநூல்கள், வரலாறு,
சோதிட சாஸ்திரம்,
பஞ்ச பட்சி
சாஸ்திரம்,
சர சாஸ்திரம்
ஆகியவற்றையும்,
வாள் பயிற்சி,
வில் பயிற்சி,
ஈட்டி எறிதல்,
குதிரை ஏற்றம்,
யானை ஏற்றம்
உட்பட
போர்க்கலைகள்
அனைத்தையும்
கசடறக் கற்றுத்
தேர்ந்தாள்
சிகண்டினி,
சிகண்டினி
ஆண் வேடம்
போட்டுக் கொண்டு
சென்று துரோணரிடம்
சீடனாகச் சேர்ந்து
கற்க வேண்டிய
அனைத்து
வித்தைகளையும்
கற்றுத் தேர்ந்தாள்.
துரோணரிடம்
கல்வி கற்றவர்களில்
அனைத்து
கலைகளிலும்
சிறந்து
விளங்கியவள்
சிகண்டினி மட்டுமே.
சிகண்டினி
வில் எடுத்தால்
அவளை
எதிர்த்து யாரும்
நிற்க முடியாது
என்று
போற்றப்பட்டாள்
உலகத்திலேயே
சிகண்டினிக்கு
இணையாக
வில்லைக்
கையாளும் திறமை
பெற்றவர்கள்
யாரும் கிடையாது
என்ற சிறப்பைப்
பெற்றாள்
சிகண்டினி
வில் எடுத்தால்
அவளை எதிர்த்து
யாரும் போரிட
முடியாது என்று
அனைவராலும்
அழைக்கப்பட்டாள்
வில் வித்தையில்
சிகண்டினியின்
திறமையைக்
கண்டவர்கள்,
சிகண்டினியை
வெல்வதற்கு
உலகத்தில்
யாரும் இல்லை
என்று உணர்ந்து
கொண்ட
அறிவாளிகளும்,
புத்திசாலிகளும்,
திறமைசாலிகளும்,
சிந்தனைவாதிகளும்,
ஞானிகளும்,
மேதைகளும்
உண்மையை
உணர்ந்தவர்களும்,
போர்க்கலையை
முழுவதுமாக கற்றுத்
தேர்ந்தவர்களும்
வில் வித்தையில்
உச்சம்
தொட்டவர்களும்
சிகண்டினியை.
வில்லுக்கு சிகண்டினி
என்று அழைத்தனர்.
இத்தகைய சிறப்பு
மிக்க சிகண்டினிக்கு
திருமண வயது
வந்ததால் அவளுக்கு
திருமணம் செய்து
வைக்க
வேண்டும் என்று
அவளுடைய
தந்தையான
பாஞ்சால மன்னன்
துருபதனும்,
துருபதனின் மனைவி
கௌசவியும்
முடிவு செய்தனர்
தனியறையில்
சிகண்டினி,
துருபதன்,
கௌசவி
ஆகியோர்
சிகண்டினிக்கு
திருமணம் செய்து
வைப்பது
பற்றி பேசிக்
கொண்டு
இருந்தனர்
கௌசவி :
நாங்கள் என்ன
சொன்னாலும்
எதிர்த்துப்
பேச மாட்டாய்
இப்போது
எதிர்த்து
பேசிக் கொண்டு
இருக்கிறாய்
சிகண்டினி
:
எதிர்த்து
பேச வேண்டிய
சூழ்நிலை
ஏற்பட்டு விட்டது
கௌசவி :
இந்த உலகத்தில்
நடக்காததையா
நாங்கள் உன்னை
செய்யச்
சொல்கிறோம்
சிகண்டினி
:
நடக்க முடியாததை
நடக்க வைக்க
முயற்சி செய்து
கொண்டிருக்கிறீர்கள்
-----ஜபம் இன்னும்
வரும்
-----எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----26-06-2022
-----ஞாயிற்றுக் கிழமை
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment