ஜபம்-பதிவு-789
(சாவேயில்லாத
சிகண்டி-123)
துருபதன் :
அனைவரும்
செய்வதைத்
தானே உன்னை
செய்யச்
சொன்னோம்
சிகண்டினி
:
நீங்கள் சொல்வது
அனைவரும்
செய்வது கிடையாது
துருபதன் :
எது அனைவரும்
செய்வது
கிடையாது
என்கிறாய்
சிகண்டினி
:
நீங்கள்
சொல்லும்
திருமணம்
துருபதன் :
நாங்கள் ஒன்றும்
புதியதாக எதுவும்
சொல்லவில்லையே
சிகண்டினி
:
நீங்கள் சொல்வதே
புதியது தான்
துருபதன் :
உன்னை திருமணம்
செய்து கொள்ளச்
சொன்னது தவறா
சிகண்டினி
:
என்னைத் திருமணம்
செய்து கொள்ளச்
சொன்னது தவறில்லை
ஆனால்
பெண்ணான
என்னை
இன்னொரு
பெண்ணை
திருமணம்
செய்து கொள்ளச்
சொன்னதைத் தான்
தவறு என்கிறேன்
துருபதன் :
சிவபெருமான்
பெண்ணிலிருந்து
ஆணாக மாறுவாய்
என்று தான்
சொல்லி
இருக்கிறாரே
சிகண்டினி
:
சிவபெருமான்
சிகண்டினி
என்ற பெண்
சிகண்டி
என்ற ஆணாக
மாறுவான்
என்று தான்
சொன்னாரே தவிர
சிகண்டினிக்கு
திருமணம் செய்து
வையுங்கள்
சிகண்டினியை
குடும்பம் நடத்தச்
சொல்லுங்கள்
என்று
சொல்லவில்லையே
துருபதன் :
சிவபெருமான்
சொன்னதை
நம்பவில்லையா
சிகண்டினி
:
சிவபெருமான்
சொன்னதை
நம்புகிறேன்
துருபதன் :
பிறகு ஏன்
சிவ பெருமான்
சொன்னதில்
நீ சந்தேகப்படுகிறாய்
சிகண்டினி
:
சிவபெருமான்
சொன்னதில் நான்
சந்தேகப்படவில்லை
சிவபெருமான்
சொன்னதை
நீங்கள் சரியாகப்
புரிந்து
கொள்ளவில்லை
என்று தான்
சொல்கிறேன்
துருபதன் :
நாங்கள்
சரியாகப் புரிந்து
கொள்ளவில்லையா
சிகண்டினி
:
ஆமாம்
நீங்கள்
சரியாகப்
புரிந்து
கொள்ளவில்லை
தான்
கௌசவி :
எதை வைத்து
அப்படி
சொல்கிறாய்
சிகண்டினி
:
சிவபெருமான்
சொன்னதை
நீங்கள் சரியாகப்
புரிந்து கொண்டு
இருந்தால்
இப்படி பேசி
இருக்க
மாட்டீர்கள்
சிவபெருமான்
சொன்னதை
தவறாக
புரிந்து கொண்ட
காரணத்தினால்
தான்
பெண்ணான
என்னை இன்னொரு
பெண்ணுக்கு
திருமணம் செய்து
வைக்க முயற்சி
செய்து
கொண்டிருக்கிறீர்கள்
நீங்கள்
சொல்வது
நடைமுறைக்கு
சாத்தியம் இல்லை
இதை என்னால்
ஏற்றுக் கொள்ளவே
முடியாது
-----ஜபம் இன்னும்
வரும்
-----எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----26-06-2022
-----ஞாயிற்றுக் கிழமை
/////////////////////////////////////////////
No comments:
Post a Comment