ஜபம்-பதிவு-781
(சாவேயில்லாத
சிகண்டி-115)
சிறு மண்ணைக்
கூட மனிதனால்
உருவாக்க முடியாது
ஆனால்,
மனிதன் தன்னை
உயர்ந்தவன் என்று
நினைத்துக்
கொள்கிறான்
அறிவாளி என்று
தன்னைத் தானே
புகழ்ந்து கொள்கிறான்
தனக்காகத் தான்
இந்த உலகம்
படைக்கப்பட்டிருக்கிறது
என்று நினைத்துக்
கொண்டு
இயற்கையை
சீரழித்துக் கொண்டு
மற்ற உயிர்களை
அழித்துக் கொண்டு
ஆடாத ஆட்டம்
எல்லாம்
ஆடிக் கொண்டு
இருக்கிறான்
கடவுள் படைத்த
படைப்புகளில்
மனித படைப்பு தான்
உயர்ந்த படைப்பு
என்று
தனக்குத் தானே
சொல்லிக் கொண்டு
பெருமைப் பட்டுக்
கொண்டு
ஆணவத்தில்
ஆடுகிறான்
சுயநலம்
மிக்க மனிதன்
தான் வாழ
வேண்டும்
என்பதற்காக
எத்தகைய
செயலையும்
செய்யத் துணிகிறான்
பாவம் என்று
தெரிந்தும் தான்
வாழ்வதற்காக
யாரையும்
அழிப்பதற்கும்
மனிதன்
தயங்குதில்லை
துருபதன் :
நான் சுயநலம்
கொண்டவனல்ல
இறைவா
சிவன் :
பீஷ்மர் மேல்
உள்ள பகையினால்
பீஷ்மனைக்
கொல்ல வேண்டும்
அதற்கொரு
ஆண் பிள்ளை
வேண்டும் என்று
பிள்ளை வரம்
வேண்டி
என்னை நோக்கி
தவம் செய்தாயே
அது சுயநலம்
இல்லையா
சுயநலத்துடன்
நீ கேட்டதில்
முக்கியமான மூன்று
விஷயங்கள்
மட்டுமல்ல
பல்வேறு
ரகசியங்களும்
அடங்கி இருக்கிறது
இந்த மூன்று
விஷயங்கள்
நடைமுறைக்கு வர
வேண்டும் என்றால்
அம்பையின் கர்மா
துருபதனாகிய
உன்னுடைய கர்மா
பீஷ்மனின் கர்மா
ஆகிய மூன்று
பேருடைய
கர்மாக்களும்
ஒன்றாக இணைந்து
தன்னுடைய
விளைவைக்
கொடுப்பதற்குத்
தயாராக
இருக்க வேண்டும்
துருபதன் :
பிள்ளை வரம்
வேண்டி தவம்
செய்தது
நான் தான்
எனக்கு பிள்ளை
பிறக்க வேண்டும்
என்றால்
என்னுடைய
கர்மா தானே
செயல்பட வேண்டும்
மற்றவர்களுடைய
கர்மா ஏன்
இதில் செயல்பட
வேண்டும்
மற்றவர்களுடைய
கர்மாவுக்கும்
என்னுடைய
கர்மாவுக்கும்
என்ன தொடர்பு
சிவன் :
கர்மா
உருவாகும் போது
தனித்த நிலையில்
உருவாவதில்லை
இரண்டு அல்லது
மூன்று பேர்களை
இணைத்துத் தான்
உருவாகும்
அதைப்போல
கர்மா தன்னுடைய
விளைவினை
வெளிப்படுத்தும்
போதும்
தனித்த நிலையில்
வெளிப்படுத்துவதில்லை
இரண்டு அல்லது
மூன்று பேர்களை
இணைத்துத் தான்
வெளிப்படுத்தும்
துருபதன் :
எப்படி வெளிப்படுத்தும்
நீங்கள் சொன்ன
மூன்று
விஷயத்திற்கும்
பொருள் தான் என்ன
சிவன் :
பீஷ்மனைக்
கொல்ல வேண்டும்
என்று அம்பை
உன்னைத் தேடி
வந்த போது
நீ அவளுடைய
கோரிக்கையை
நிராகரித்ததால்
பீஷ்மனைக் கொல்ல
வேண்டும் என்ற
வரத்தை என்னிடம்
பெற்ற பின்பு
நெருப்பில் இறங்கி
அம்பை
இறந்து விட்டாள்
-----ஜபம் இன்னும்
வரும்
-----எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----18-06-2022
-----சனிக்கிழமை
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment