ஜபம்-பதிவு-821
(சாவேயில்லாத
சிகண்டி-155)
கர்ணனைக்
கொல்வேன்
என்று அர்ச்சுனன்
சபதம் செய்து
இருக்கிறான்
சகுனியைக்
கொல்வேன்
என்று சகாதேவன்
இருக்கிறான்
நீயும் பீஷ்மனைக்
கொல்வேன் என்று
சபதம் எடுத்து
அதற்காகவே
பிறந்திருக்கிறாய்
இவைகளை
அனைத்தும்
நடக்க வேண்டும்
என்றால்
போர் கண்டிப்பாக
நடந்து தானே
ஆக வேண்டும்
சிகண்டி :
ஏன் போர்
நடக்காமல்
இவைகள்
அனைத்தும்
நடக்காதா
துருபதன் :
நடக்காது
நடக்கவே நடக்காது
போர் நடக்காமல்
இவைகள் அனைத்தும்
நடப்பதற்கு
வாய்ப்பே இல்லை
நான் சொன்னவைகள்
அனைத்தையும்
ஒன்றுடன் ஒன்று
இணைத்துப்
பார்த்தாயானால்
ஒன்றுடன் ஒன்று
தொடர்பு கொண்டு
இருப்பது
தெரிய வரும்
ஒன்றுடன் ஒன்று
தொடர்பு கொண்டு
இருப்பது நடக்க
வேண்டும் என்றால்
அனைத்தையும்
கொண்டு ஒரு
நிகழ்ச்சி
நடந்து தானே
ஆக வேண்டும்
அந்த நிகழ்ச்சி தான்
பாண்டவர்களுக்கும்
கௌரவர்களுக்கும்
இடையே நடக்கப்
போகும் போர்
கிருஷ்ணனின்
தூது தோல்வியில்
தான் முடியப்
போகிறது
பாண்டவர்களுக்கும்
கௌரவர்களுக்கும்
போர் நடக்கத்
தான் போகிறது
சிகண்டி :
அப்படி நடந்தால்
எனக்கும் மகிழ்ச்சியே
அப்போது தான்
நான் போரில்
பீஷ்மனை
சந்திக்க முடியும்
பீஷ்மனை போரில்
எதிர்க்க முடியும்
பீஷ்மனுடன்
போரிட முடியும்
பீஷ்மனைக்
கொல்ல முடியும்
நான்
செல்கிறேன்
துருபதன் :
இப்போது
தானே வந்தாய்
இரண்டு நாட்கள்
ஓய்வு எடுத்து
விட்டு பிறகு
செல்லலாமே
நான் காலத்தோடு
போட்டி போட்டுக்
கொண்டு சென்று
கொண்டிருக்கிறேன்
நான் ஓய்வு
எடுத்தால் காலம்
என்னை
விட்டு விட்டு
நெடுந்தொலைவு
சென்று விடும்
ஓய்வு எடுப்பேன்
கண்டிப்பாக
ஓய்வு எடுப்பேன்
பீஷ்மனைக் கொன்ற
பிறகு கண்டிப்பாக
ஓய்வு எடுப்பேன்
என்று சொல்லி
விட்டு
அரண்மனையை
விட்டு
வெளியே வந்து
தன்னுடைய
குதிரையின்
மேல் ஏறி
அஸ்தினாபுரம்
நோக்கி சென்று
கொண்டிருந்தான்
சிகண்டி
மரணமற்றவனுக்கு
மரணத்தைப்
பரிசாக
தருவதற்காகச்
சென்று
கொண்டிருந்தான்
சிகண்டி
மரணமற்றவனுக்கு
மரணத்தை எப்படி
சிகண்டி
பரிசாகத் தருகிறான்
என்பதை அறிவதற்கு
ஆவலாக இருப்பவர்கள்
சிகண்டியைப்
பின் தொடருங்கள்
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----26-07-2022
-----செவ்வாய்க் கிழமை
//////////////////////////////////////////////