July 26, 2022

ஜபம்-பதிவு-820 (சாவேயில்லாத சிகண்டி-154)

 ஜபம்-பதிவு-820

(சாவேயில்லாத

சிகண்டி-154)

 

சிகண்டி :

போரா நடக்கப்

போகிறது

நீங்கள் படை

எடுத்துச்

செல்வதற்கு

 

துருபதன் :

போர் தான்

நடக்கப் போகிறது

 

அதற்கான

சூழ்நிலை தான்

இப்போது உருவாகிக்

கொண்டு இருக்கிறது

 

சிகண்டி :

எதை வைத்து

இப்படி

சொல்கிறீர்கள்

 

துருபதன் :

நடந்து

கொண்டிருக்கும்

நிகழ்வுகளை

வைத்துத் தான்

 

சிகண்டி :

நடந்து

கொண்டிருக்கும்

நிகழ்வுகளைப்

பார்த்தால்

அப்படி ஒன்றும்

தெரியவில்லையே

 

துருபதன் :

பாண்டவர்களுக்குரிய

பங்கைப் பெறுவதற்காக

பாண்டவர்கள் சார்பாக

கிருஷ்ணன்

அஸ்தினாபுரத்திற்கு

தூது செல்கிறார்

போர் நடக்காமல்

இருக்க வேண்டும்

என்பதற்காக

தூது செல்கிறார்

 

சிகண்டி :

கிருஷ்ணன்

சாமாதானத்

தூது தானே

செல்கிறார்

 

சமாதானத்தை

நிலை நாட்டுவதற்குத்

தானே செல்கிறார்

 

அமைதியைக்

கொண்டு

வருவதற்குத்

தானே செல்கிறார்

 

போரா நடக்கப்

போகிறது

பீஷ்மனைக்

கொல்வதற்கான

வாய்ப்பாக எடுத்துக்

கொள்வதற்கு

 

துருபதன் :

போர் தான்

நடக்கக் போகிறது

கண்டிப்பாக

நடக்கப் போகிறது

 

சிகண்டி :

போர் எப்படி

நடக்கும்

 

போர் நடப்பதற்கான

வாய்ப்பு எதுவும்

இருப்பதாக

எனக்குத்

தெரியவில்லையே

 

சமாதானத்

தூது அல்லவா

செல்ல  இருக்கிறார்கள்

சமாதானத்தை

நிலை நாட்டுவதற்கு

 

துருபதன் :

சமாதானப் பேச்சு

வார்த்தை நடந்தால்

சமாதானம்

வந்து விடுமா

 

எந்த சமாதானப்

பேச்சு வார்த்தை

சமாதானத்தில்

முடிந்து இருக்கிறது

போரில் தானே

முடிந்திருக்கிறது

 

துரியோதனன்

சமாதானத்திற்கு

ஒத்துக்

கொள்ளவே

மாட்டேன்

 

கிருஷ்ணன் பேசச்

செல்லும் சமாதானம்

தோல்வியில் தான்

முடியப் போகிறது

 

போர் கண்டிப்பாக

நடக்கத்

தான் போகிறது

 

சிகண்டி :

எப்படி இவ்வளவு

உறுதியாகச்

சொல்கிறீர்கள்

 

துருபதன் :

துரோணரைக்

கொல்ல வேண்டும்

என்பதற்காகவே

திருஷ்டத்யும்னன்

பிறந்திருக்கிறான்

 

துச்சாதனனின்

மார்பு இரத்தத்தை

தன் கூந்தலில்

பூசும் வரை

தன் கூந்தலை

முடிய மாட்டேன்

என்று திரௌபதி

சபதம்

செய்திருக்கிறாள்

 

துரியோதனன்

முதலிய

நூற்றுவரையும்

நான் போரில்

கொல்வேன் என்றும்

துச்சாதனனின்

மார்பைப் பிளந்து

இரத்தத்தைக்

குடிபேன் என்றும்

பீமன் சபதம்

செய்து இருக்கிறான்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----26-07-2022

-----செவ்வாய்க் கிழமை

 

//////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment