ஜபம்-பதிவு-818
(சாவேயில்லாத
சிகண்டி-152)
இத்தகைய
கோழைத்தனமானவர்களை
நாம் புறந்தள்ளி
விட வேண்டும்
அவர்களை மனித
இனத்தில் ஒருவராக
கணக்கில் எடுத்துக்
கொள்ளாமல் நாம்
நம்முடைய
கடமையைச்
செய்ய வேண்டும்
அப்போது தான்
நாம் நம்முடைய
கடமைகளை
முடிக்க முடியும்
துருபதன் :
உன்னுடைய
கடமை என்று
நீ சொல்வது
பீஷ்மனைக்
கொல்வதைப்
பற்றித் தானே
சிகண்டி :
ஆமாம்
துருபதன் :
ஆனால்
அதற்கான
வாய்ப்பு எதுவும்
இருப்பதாகத்
தெரியவில்லையே
வாய்ப்புக்காகக்
காத்திருக்கப் போவதில்லை
வாய்ப்பை உருவாக்கப்
போகிறேன் என்கிறாயா
சிகண்டி :
வாய்ப்பு என்பது
வாழ்க்கையில் எதிர்ப்பட
மட்டுமே செய்யும்
அதை நம்மால்
பயன்படுத்திக்
கொள்ளத் தான்
முடியுமே தவிர
நம்மால் உருவாக்க
முடியாது
துருபதன் :
வாய்ப்புக்காகக்
காத்திருக்காதே
வாய்ப்பை
உருவாக்கிக் கொள்
என்று
சொல்லப்படுகிறதே
சிகண்டி :
அது தவறாக
சொல்லப்பட்ட
வார்த்தை
அனுபவமில்லாதவர்களால்
சொல்லப்பட்ட
வார்த்தை
யோசிக்காமல்
சொல்லப்பட்ட வார்த்தை
யோசித்துப் பார்த்தால்
தெரியும் அது
தவறாக சொல்லப்பட்ட
வார்த்தை என்று
துருபதன் :
தவறானது என்று
எப்படி சொல்கிறாய்
சிகண்டி :
தவறானதை
தவறானது என்று
சொல்லாமல்
சரியானது
என்றா சொல்ல
முடியும்
வாழ்க்கையில்
எதிர்ப்படுவது
வாய்ப்பு என்பதை
அறிந்து கொள்ள
முடிந்தவர்களால்
மட்டுமே வாய்ப்பைப்
பயன்படுத்திக்
கொள்ள முடியும்
வாழ்க்கையில்
எதிர்ப்படுவது
வாய்ப்பு என்பதை
அறிந்து கொள்ள
முடியாதவர்களால்
வாய்ப்பைப் பயன்படுத்திக்
கொள்ள முடியாது
வாய்ப்பு என்பது
எந்த காலத்தில்
எந்த இடத்தில்
எந்த நேரத்தில்
எந்த சூழ்நிலையில்
வெளிப்படும் என்று
யாராலும்
சொல்ல முடியாது
காலம் நேரம்
இடம் சூழ்நிலை
பார்த்து எந்த
ஒன்றை நாம்
செய்தாலும்
அது நாம் செய்த
செயலாகத் தான்
இருக்குமே தவிர
வாய்ப்பாக இருக்காது
மழை பெய்யும்
போது மழை நீரைத்
தேக்கி வைத்து
விவசாயத்திற்குப்
பயன்படுத்த வேண்டும்
என்பதற்காக
கிணறுகளை
வெட்டி வைத்து
மழைக்காகக் காத்துக்
கொண்டு இருக்கிறோம்
மழை பெய்யும் போது
கிணறுகளில் நிரம்பிய
நீரைப் பயன்படுத்தி
விவசாயம் செய்கிறோம்
மழை பெய்வது
என்பது ஒரு வாய்ப்பு
அதை பயன்படுத்திக்
கொள்ளத் தான் முடியும்
மழை பெய்ய வைக்க
வேண்டும் என்ற
வாய்ப்பை
நம்மால் உருவாக்க
முடியாது
அதைப் போலத்
தான் பீஷ்மனைக்
கொல்வதற்கான
வாய்ப்பை என்னால்
உருவாக்க முடியாது
பீஷ்மனைக்
கொல்வதற்கான
வாய்ப்புக்காகக் காத்துக்
கொண்டு இருக்கிறேன்
வாய்ப்பு கிடைத்தவுடன்
அந்த பீஷ்மனைக்
கொல்கிறேன்
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----26-07-2022
-----செவ்வாய்க் கிழமை
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment