ஜபம்-பதிவு-819
(சாவேயில்லாத
சிகண்டி-153)
துருபதன் :
சிகண்டிநீ
என்னுடைய
இரத்தத்தில்
பிறந்தவன்
சிவனுடைய
அருளைப்
பெற்றவன்
அதனால் தான்
என்னுடைய அறிவு
நிகரற்ற வீரம்
எதையும்
சமாளிக்கும் திறமை
பிரச்சினையைக்
கண்டு பயப்படாமல்
இருக்கும் தைரியம்
பிரச்சினையை
எதிர் கொள்ளும்
புத்திசாலித்தனம்
யோசிக்கும் திறமை
ஆகிய அனைத்தும்
உன்னிடம் இருக்கிறது
உன்னுடைய
தங்கை திரௌபதி
என்னுடைய
இரத்தத்தில் இருந்து
பிறந்தவள் அல்ல
நெருப்பில்
இருந்து பிறந்தவள்
அதனால் தான்
என்னுடைய அறிவு
நிகரற்ற வீரம்
எதையும்
சமாளிக்கும் திறமை
பிரச்சினையைக்
கண்டு பயப்படாமல்
இருக்கும் தைரியம்
பிரச்சினையை
எதிர் கொள்ளும்
புத்திசாலித்தனம்
யோசிக்கும் திறமை
ஆகிய எதுவும்
அவளிடம் இல்லை
அதனால் தான்
இப்போது
அவனமானப்பட்டு
நிற்கிறாள்
நாட்டை
இழந்து நிற்கிறாள்
கவலையுற்று
நிற்கிறாள்
எதையும்
தாங்கக் கூடிய
சக்தியில்லாமல்
நிற்கிறாள்
இப்போது தான்
அம்பை சொன்ன
ஒரு விஷயம்
என்னுடைய
நினைவுக்கு
வருகிறது
சிகண்டி :
அம்பை அப்படி
என்ன தான்
சொன்னாள்
துருபதன் :
ஒரு பெண்ணின்
கண்ணீருக்காக
படை எடுக்க
மாட்டேன் என்று
சொன்ன துருபதா
உன் குடும்பத்தில்
ஒரு பெண்
வடிக்கப் போகும்
கண்ணீருக்காக
நீ படை
எடுக்கும் போது
உன்
குடும்பத்திற்காகப்
படை எடுத்தாய்
என்று
இந்த உலகமே
உன்னை
கேவலமாகப்
பேசப் போகிறது
இந்த உலகம்
உன்னை
சுயநலக்காரன்
என்று எள்ளி
நகையாடப்
போகிறது
நீ அசிங்கப்பட்டு
அவமானப்பட்டு
தலைகுனியும்
காலம்
வரப்போகிறது
துருபதா
என்று அம்பை
சொன்னாள்
அவள் சொல்லியபடியே
இன்று என்னுடைய
மகள் திரௌபதி
வடிக்கும்
கண்ணீருக்காக
படை எடுக்கப்
போகிறேன்
என்பதை அறிந்து
இந்த உலகமே
என்னை
கேவலமாகக்
பேசுகிறது
சுயநலக்காரன்
என்கிறது
அசிங்கப்பட்டு
அவமானப்பட்டு
நிற்கக்கூடிய
சூழ்நிலையும்
உருவாகி
இருக்கிறது
அம்பை சொன்ன
அனைத்தும்
இப்போது நடந்து
கொண்டிருக்கிறது
சிகண்டி :
மகளின் கண்ணீரை
துடைப்பதற்காக
ஒரு தந்தை
செய்யும் செயலைச்
செய்வதற்கான
முயற்சியைத்
தானே நீங்கள் செய்து
கொண்டிருக்கிறீர்கள்
துருபதன் :
மகளின்
தந்தையாக
அல்ல
நாட்டின் மன்னனாக
இருந்து கொண்டு
அல்லவா
செயலைச் செய்து
கொண்டிருக்கிறேன்
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----26-07-2022
-----செவ்வாய்க் கிழமை
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment