ஜபம்-பதிவு-958
மரணமற்ற
அஸ்வத்தாமன்-90
(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின்
கதை)
சிவன்:
பாசுபதாஸ்திரம்
பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறாய்
நீ சொன்னது போல் பாசுபதாஸ்திரத்தை
உனக்கு நான் தரவேண்டுமென்றால் உன்னை நான் சோதித்துப் பார்க்க வேண்டும் அல்லவா?
அஸ்வத்தாமன்:
கடவுள் மனிதர்களை
சோதித்துப் பார்க்கிறேன் என்று சொல்லாவிட்டாலும், அதிகமாக சோதித்துப் பார்ப்பார். அந்த
கஷ்டத்தையே மனிதர்களால் தாங்க முடியாது.
இப்போது சோதித்துப் பார்க்கப் பார்க்கப்
போகிறேன் என்று சொல்லி விட்டீர்கள். அந்த சோதனைகளை சாதாரண மனிதனாக உள்ள என்னால் தாங்க
முடியுமா
சிவன்:
மனிதர்களுக்கு
கஷ்டம் வந்தால் இந்த கஷ்டத்திற்குக் காரணம் கடவுள் தான் என்கிறார்கள். கடவுளையே குற்றம்
சொல்கிறார்கள். கடவுளையே குற்றவாளி ஆக்குகிறார்கள்.
பிறரையே குற்றம் சொல்லி பழக்கப்பட்டவர்கள்
அல்லவா மனிதர்கள். அதனால் கடவுளை குற்றம் சொல்லி திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
தங்களுக்கு கஷ்டம் ஏன் வருகிறது,
எப்படி வருகிறது, எதற்காக வருகிறது, என்ன காரணத்திற்காக
வருகிறது என்று மனிதர்கள் என்றாவது சிந்தித்துப் பார்த்து இருக்கிறார்களா.
அப்படி சிந்தித்துப் பார்த்து இருந்தால்
அடுத்து கஷ்டம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து இருப்பார்கள்.
அஸ்வத்தாமன்: இறைவா நீங்கள் சொல்வது தவறு.
சிவன்:
எதைத் தவறு என்கிறாய். நான் எதைச் சொன்னாலும் தவறு என்கிறாய்.
அஸ்வத்தாமன்: கஷ்டம் ஏன் வருகிறது என்று மனிதர்கள்
அனைவரும் சிந்திக்கவில்லை என்று நீங்கள் சொல்வது தவறு.
கஷ்டம் ஏன் வருகிறது என்பதை சிந்தித்துப்
பார்த்தவர்கள் தான் உண்மையை உணர்ந்து இருக்கிறார்கள்.
கஷ்டம் ஏன் வருகிறது என்பதை உணர்ந்து
கொண்டவர்கள் தான் சித்தர்கள் ஆகி இருக்கிறார்கள்.
கஷ்டம் ஏன் வருகிறது என்பதை உணர்ந்து
கொண்டவர்கள் தான் ஞானம், சமாதி, முக்தி அடைந்து இருக்கிறார்கள்.
கஷ்டம் ஏன் வருகிறது என்பதை உணர்ந்து
கொண்டவர்கள் தான் கடவுளோடு இரண்டறக் கலந்து ஒன்றுக்குள் ஒன்றாகி இருக்கிறார்கள்.
சிவன்: ஒரு
சில மனிதர்கள் தான் கஷ்டம் எப்படி வருகிறது என்பதை உணர்ந்து இருக்கிறார்கள். மீண்டும்
கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்கான செயல்களைச் செய்து இருக்கிறார்கள்.
பெரும்பாலான மனிதர்கள் கஷ்டம் எப்படி
வருகிறது என்பதை அறியாமல் தானே இருக்கிறார்கள்.
அஸ்வத்தாமன்: கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள், கடவுள்
மேல் வெறி கொண்டவர்கள் தான் இதற்குக் காரணம்.
மனிதர்களுக்கு கஷ்டம் எப்படி வருகிறது
என்பதை சாதாரண மக்கள் அறிந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.
அதற்காக மனிதர்களை அறியாமையில் வைத்து இருக்கிறார்கள்.
சிவன்: நல்லது
செய்தால் நல்லது நடக்கும். கெட்டது செய்தால் கெட்டது நடக்கும் என்பதும், தாங்கள் செய்த
செயலுக்குரிய விளைவு தான் கஷ்டமாக வருகிறது என்பதும் மனிதர்களுக்குத் தெரியாதா?
அஸ்வத்தாமன்: தெரிந்திருந்தால் அவர்கள் ஏன் பாவங்களைச் செய்கிறார்கள்.
------K.பாலகங்காதரன்
------01-05-2024
-----புதன் கிழமை
////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment