ஜபம்-பதிவு-961
மரணமற்ற
அஸ்வத்தாமன்-93
(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின்
கதை)
சிவன்: கடவுளின்
பெயரால் நடக்கும் இத்தகைய அக்கிரம அநியாயங்களை நிறுத்த என்ன செய்ய வேண்டும்.
இடம்,
நேரம், காலம் ,சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்து மனிதன் செய்த செயலானது கர்மவினையாக உருவாகிறது
என்பதையும்,
அந்த
கர்மவினையானது இடம், நேரம், காலம், சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்து விளைவுகளாக வெளிப்படுகிறது
என்பதையும்,
செய்த
செயலுக்குரிய கர்மவினையின் விளைவிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பதையும்,
கர்மவினையின்
விளைவுகளை கண்டிப்பாக அனுபவித்துத் தான் ஆக வேண்டும் என்பதையும்,
கடவுள்
கர்மவினையின் விளைவுகளால் ஏற்படக் கூடிய
கஷ்டங்களின்
தாக்கத்தைத் தான் குறைக்க முடியும்,
கஷ்டத்தைத்
தாங்கக் கூடிய சக்தியையும் தர முடியும் என்பதையும்,
மனிதன்
உணர்ந்து கொள்ள வேண்டும்.
கஷ்டம் எப்படி வருகிறது என்பதை
மனிதன் உணர்ந்து கொண்டால் கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள், கடவுள் மேல் வெறி
கொண்டவர்கள் இந்த உலகத்தில் வாழ முடியாது.
கஷ்டம் எப்படி வருகிறது என்பதை
மனிதன் உணர்ந்து கொண்டால் கஷ்டம் வந்தால் கடவுளைத் திட்ட மாட்டான் கடவுளை குறை சொல்ல
மாட்டான். கடவுளை குற்றம் சொல்ல மாட்டான். இல்லை என்றால் சின்ன கஷ்டம் வந்தாலும் மனிதன்
கடவுளைத் தான் குற்றம் சொல்வான். கடவுளை குற்றவாளி ஆக்குவான்.
கஷ்டம் எப்படி வருகிறது என்பதை
மனிதன் உணர்ந்து கொண்டால் மீண்டும் கஷ்டம் வராமல் இருப்பதற்கு என்ன செயல்களைச் செய்ய
வேண்டுமோ அந்த செயல்களை மனிதன் செய்வான்.
சிவன்: அஸ்வத்தாமா!
நீ பிறப்பால் பிராமணன் அதனால் தான் நீ அறிவில் சிறந்தவனாக இருக்கிறாய், தகுதியில் உயர்ந்தவனாக
இருக்கிறாய், திறமை படைத்தவனாக இருக்கிறாய் பாசுபதாஸ்திரம் மட்டுமல்ல எந்த ஒன்றையும்
அடையும் தகுதி உனக்கு இருக்கிறது
அஸ்வத்தாமன்: இறைவா ஒருவருடைய அறிவு, தகுதி, திறமை என்பது பிறப்பால் வருவது
கிடையாது, இந்த உலகத்தில் பிறந்த மனிதர்கள் அனைவருக்கும் அறிவு, தகுதி, திறமை இருக்கிறது.
அது ஆர்வம், ஆற்றல், உழைப்பு ஆகியவற்றால் வெளிப்படும்..
இந்த உலகத்தில் உள்ள எத்தனையோ பேர் தன்னுடைய அறிவு,
தகுதி, திறமையை வெளிப்படுத்துவதற்கு ஆர்வம், ஆற்றல், உழைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தியும்
தேவையான வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தங்களுடைய அறிவு, தகுதி, திறமையை வெளிப்படுத்தாமலேயே
இறந்து விடுகின்றனர்.
ஒரு சில பேர்கள் தான் இந்த உலகத்தில் பல சோதனைகளைக்
கடந்து, துன்பங்களைக் கடந்து, துயரங்களைக் கடந்து, கஷ்டங்களைக் கடந்து தங்கள் அறிவு,
தகுதி, திறமையை வெளிப்படுத்தி மேல் நிலைக்கு வருகின்றனர்.
ஒரு சில பேர்களை இந்த உலகம் தன்னுடைய சுய ஆதாயத்திற்காக
அறிவு, தகுதி, திறமை இல்லாமல் இருப்பவர்களையும், அறிவு, தகுதி, திறமை கொண்டவனாக இருக்கிறான்
என்பதை இந்த உலகம் ஏற்றுக் கொள்ளும்படிச் செய்து, மேல் நிலைக்குக் கொண்டு வருகிறது.
அறிவு, தகுதி, திறமை இல்லாவிட்டாலும் சமுதாயத்தின்
சுயலாபத்திற்காக மேல் நிலைக்குக் கொண்டு வரப்பட்ட சிலர் இந்த உலகத்தில் இருக்கத் தான்
செய்கிறார்கள்.
ஒருவருடைய பிறப்பை வைத்து, ஒருவருடைய அறிவு, தகுதி,
திறமை ஆகியவற்றை நிர்ணம் செய்யக் கூடாது இறைவா
------K.பாலகங்காதரன்
------01-05-2024
-----புதன் கிழமை
////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment