ஜபம்-பதிவு-962
மரணமற்ற
அஸ்வத்தாமன்-94
(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின்
கதை)
சிவன்: இந்த
உலகத்தில் வாழ்வதற்கு இவை எல்லாம் தேவை இல்லையா. எது தேவை என்கிறாய்
அஸ்வத்தாமன்: இந்த
உலகம் நல்லவனை கெட்டவனாக்கும்
கெட்டவனை நல்லவனாக்கும்
திறமைசாலியை அழித்து விடும்
திறமையற்றவனை மேல் நிலைக்கு கொண்டு வரும்
அடிமையாக இருப்பவனை அரசாள வைக்கும்
அரசாள தகுதியானவனை கொன்று விடும்
தனக்கு பிடித்தவனுக்கு அரியணை வழங்கும்
அரியணையில் இருப்பவனை குழி தோண்டி புதைக்கும்
சேவை செய்ய நினைப்பவனை துன்பப்படுத்தும்
கொள்ளையடிப்பனுக்கு சேவையாளன் என்ற பட்டம் கொடுக்கும்
சிந்தனையற்றவனை மதிக்கும்
சிந்திப்பவை நிந்திக்கும்
போட்டுக் கொடுப்பவனை, காட்டிக் கொடுப்பவனை மதிக்கும்
உண்மையாக இருப்பவன் வாழ்வை அழிக்கும்
நேர்மையாக வாழ்பவனை துன்பத்தில் ஆழ்த்தும்
பொய்யாக வாழ்பவனை இன்பத்தில் திளைக்க வைக்கும்
தனக்கு பிடித்தவன் கெட்டவனாக இருந்தாலும் நல்லவன்
என்றே சொல்லும்
தனக்கு பிடிக்காதவன் நல்லவனாக இருந்தாலும் கெட்டவன்
என்றே சொல்லும்
சமுதாயம் கேடிக்கையானது
அதை புரிந்து கொண்டவர்கள் இந்த சமுதாயத்தில் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்
புரிந்துகொள்ளாதவர்கள் வாழ முடியாமல் தவிக்கிறார்கள்
இவ்வளவு தான் உலகம்
இறைவா என்னை சோதித்துப் பார்த்து சோதனையில் நான் வெற்றி
பெற்றால் பாசுபதாஸ்திரம் தருவதாக சொன்னீர்கள். எப்போது என்னை சோதித்துப் பார்ப்பீர்கள்.
அஸ்வத்தாமா உன் சோதிக்கவில்லை என்று யார் சொன்னார்கள்,
இவ்வளவு நேரம் உன்னை சோதித்துக் கொண்டு தானே இருக்கிறேன். உன் அறிவை சோதித்தேன்
அஸ்வத்தாமன்: என் வீரத்தை சோதிக்கவில்லையே!
சிவன்: வந்திருப்பது
கடவுள் என்று தெரிந்திருந்தும், கடவுளே தவறாக சொன்னாலும், தவறை தவறு என்று தைரியமாக
சொன்னாயே அதில் உன் வீரம் தெரிந்தது.
ஒருவருடைய அறிவையும், வீரத்தையும் சோதிப்பதற்கு சோதனைகள்
வைக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறிது நேரம் அவரிடம் பேசிக் கொண்டு இருந்தாலே போதும்
அவர் அறிவாளியா, வீரம் நிறைந்தவரா என்பது தெரிந்து விடும்
வீரம் இல்லாதவர்கள் தான், தான் வீரன் வீரன் என்று
தன்னை சொல்லிக் கொண்டு திரிவார்கள். அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களும் அவர் வீரன்
என்று கூச்சல் போடுவார்கள். அத்தகையவர்களை சோதித்துப் பார்க்க வேண்டும்
உண்மையான வீரன், தான் வீரன் என்று சொல்லிக் கொண்டு
அலைந்து கொண்டிருக்க மாட்டான். வாய்ச்சொல்லில் வீரத்தைக் காட்ட மாட்டான். செயலில் காட்டுவான்.
------K.பாலகங்காதரன்
------01-05-2024
-----புதன் கிழமை
////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment