ஜபம்-பதிவு-963
மரணமற்ற
அஸ்வத்தாமன்-95
(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின்
கதை)
நீ உண்மையான வீரன்.அதை உன் செயலில் இருந்தே தெரிந்து
கொண்டேன் நான் சொன்ன வார்த்தைகள் தவறு என்று எப்போது தைரியமாக சொன்னாயோ அப்போதே நீ
வீரன் என்பது நிரூபணமாகி விட்டது
ஆகவே உன்னை சோதிப்பதற்கு தனிப்பட்ட முறையில் சோதனை
வைத்து நீ வீரனா என்று சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை.
நான் வைத்த அனைத்து சோதனைகளிலும் நீ வெற்றி பெற்று
விட்டாய். அறிவில் சிறந்தவன் என்பதைக் காட்டி விட்டாய். வீரத்தில் உயர்ந்தவன் என்பதை
நிரூபித்து விட்டாய்.
பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு முழு தகுதி உடையவனாக இருக்கிறாய்.
உனக்கு பாசுபதாஸ்திரம் அளிக்கிறேன். அஸ்வத்தாமா பெற்றுக் கொள்.
அஸ்வத்தாமன் பாசுபதாஸ்திரம் சிவனிடம் இருந்து பெற்றுக்
கொள்கிறேன்.சிவனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகிறான்
சிவன்: எல்லா
நலமும் பெற்று வாழ்க
(சிவன் மறைந்து விடுகிறார்.)
பாசுபதாஸ்திரத்தை தன்னால் உருவாக்கப்பட்ட அதர்வண வேதத்தின்
சக்தியைக் கொண்டும்,எல்லாம் வல்ல ஈசனையும், சக்தியையும் முதற்கடவுளாக உருவேற்றி பாசுபதாஸ்திரம் என்று சொல்லப்படும் சிவபாணத்தை உலகிலேயே மிகவும்
சக்திவாய்ந்த ஒரு அஸ்திரமாக அஸ்வத்தாமன் மாற்றுகிறார்.
மரணமற்ற அஸ்வத்தாமன் தயாராகி விட்டான்
(இங்கே ஒரு முக்கியமான
விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்
விஷ்ணுவுக்குரிய அஸ்திரம்
நாராயண அஸ்திரம்,
பிரம்மாவிற்குரிய அஸ்திரம்
பிரம்மாஸ்திரம்,
சிவனுக்குரிய அஸ்திரம்
பாசுபதாஸ்திரம்,
மும்மூர்த்திகளுக்குரிய
அஸ்திரங்களை வைத்திருந்தவன்
துவபாரயுகத்தில் அஸ்வத்தாமன்
மட்டுமே
பிரம்மாஸ்திரம் கற்றவன்
மனிதரில் சிறந்தவன்,
நாராயண அஸ்திரம் தெரிந்தவன்
தேவர்களுக்கு சமமானவன்,
பாசுபதம் கற்றவன் தேவர்களையே
அழிக்கும் வல்லமை பெற்றவன்.
துவாபர யுகத்தில்
நாராயணாஸ்திரம்,
பிரம்மாஸ்திரம்,
பாசுபதாஸ்திரம்
பெற்ற ஒரே ஒரு வீரன்
அஸ்வத்தாமன்
மட்டுமே.!
மகாபாரதக் கதையில்
இந்த மூன்று அஸ்திரங்களையும்
வைத்திருந்தவன்
அஸ்வத்தாமன்
மட்டுமே!
இந்த விஷயத்தை சிந்தித்துப்
பார்த்தீர்கள் என்றால்
மகாபாரதக் கதையில் அஸ்வத்தாமன்
எவ்வளவு சிறப்பு வாய்ந்தவன்
என்பதையும்,
வீரத்தில் அவனுக்கு நிகர்
யாரும் இல்லை என்பதையும்,
அவனுடைய வாழ்க்கை வரலாறு யாருக்கும் தெரியக்
கூடாது
என்பதற்காக மறைக்கப்பட்டிருக்கிறது
என்பதையும்,
தெரிந்து கொள்ளலாம்.
இராமாயணத்தில்
நாராயணாஸ்திரம்,
பிரம்மாஸ்திரம்,
பாசுபதாஸ்திரம்
ஆகிய மூன்று அஸ்திரங்களையும்
இராவணன் மகன்
இந்திரஜித் மட்டுமே
வைத்திருந்தான் என்பதை
நினைவில் கொள்ளுங்கள்)
------K.பாலகங்காதரன்
------01-05-2024
-----புதன் கிழமை
////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment