June 19, 2020

அறிய வேண்டியவை-பதிவு-19


              ஜபம்-பதிவு-511
        (அறிய வேண்டியவை-19)

“ஒருவர் ஒரு
இடத்தில்
திருடப் போகிறார்
என்ற கெட்ட செயலைச்
செய்யப் போகிறார்
என்றால்
எந்த காலத்தில் 
எந்த நேரத்தில்
எந்த சூழ்நிலையில்
எப்படி திருட
வேண்டும்
என்பதையும்  ;
திருடுவதற்கு
உதவியாக யார்
இருப்பார்கள்
என்பதையும் ;
திருடுவதற்கு
உதவியாக யாரை
வைத்துக் கொள்ள
வேண்டும்
என்பதையும் ;
உணர்ந்து - அந்த
கெட்ட செயலைச்
செய்வதற்கு
துணையாக
அவர்களை
சேர்த்துக் கொண்டு
திருடும் போது
திருடுவதற்கு
தடையாக யார்
யாரெல்லாம்
இருப்பார்கள்
என்பதையும்
அறிந்து
அவர்களிடமிருந்து
எப்படி தப்பித்து
திருடுவது
திருடும் போது
எதிர்ப்பவர்களை
எப்படி எல்லாம்
வீழ்த்துவது;
அவர்களிடம் இருந்து
எப்படி தப்பிப்பது ;
எப்படி பத்திரமாக
திருடுவது ;
திருடிய பொருளை
எப்படி பிரித்துக்
கொள்வது ;
திருடிய பொருளை
எங்கே பத்திரமாக
வைப்பது என்பதையும் ;
யோசித்து திட்டமிட்டு
கெட்ட செயலை
செய்வதற்கு
கெட்டவர்களால்
வகுக்கப்படும் வியூகம்
கெட்ட வியூகம்
எனப்படும் “

உத்தரை :
“வியூகத்தில்
நல்ல வியூகம்
கெட்ட வியூகம்
என்று இரண்டு
வியூகங்கள்
இருக்கிறதா ?”

அபிமன்யு :
“ஆமாம் !
இந்த இரண்டு
வியூகத்தில் தான்
உலத்தில் உள்ள
அனைத்து
வியூகங்களும்
இருக்கிறது “

உத்தரை :
“போருக்கு
பயன்படுத்தும்
வியூகங்கள்
கூடவா?”

அபிமன்யு :
“இந்த உலகத்தில்
உள்ள அனைத்து
வியூகங்களையும்
எடுத்துக் கொண்டால்
இந்த இரண்டு
வியூகங்களுக்குள்
தான் அடங்கி
இருக்கும்”

உத்தரை :
“எப்படி?”

அபிமன்யு :
“போருக்கென்று
வகுக்கப்பட்ட
விதிகளைப்
பின்பற்றி
போர் விதிகளை
சிறிதும் மீறாமல்  
நேர்மையான
முறையில்
போர் செய்தால்
அது நல்ல
வியூகத்தில்
அடங்கும் “

“போருக்கென்று
வகுக்கப்பட்ட
விதிகளைப்
பின்பற்றாமல்
போர் விதிகளிலிருந்து
மீறி நேர்மையற்ற
முறையில்
போர் செய்தால்
அது கெட்ட
வியூகத்தில்
அடங்கும் “

உத்தரை :
“வியூகத்திற்கு
தனி அர்த்தமே
கற்பிக்கிறீர்கள்”

அபிமன்யு :
“நம்முடைய
முன்னோர்கள்
கற்பித்து விட்டு
சென்றதைத் தான்
நான் சொல்கிறேன்
இப்போது
இந்த உலகத்தில்
வாழ்ந்து
கொண்டிருக்கும்
மக்கள் நம்முடைய
முன்னோர்களை
மட்டுமல்ல
நம்முடைய
முன்னோர்கள்
கற்பித்துவிட்டு
சென்றதையும்
மறந்து விட்டனர் “

“இது நாம் செய்த
மிகப்பெரிய குற்றம் ;
நம்முடைய
முன்னோர்கள்
சொல்லி விட்டு
சென்றவைகளை
நாம் மறந்துவிட்டதால்
ஏற்பட்ட குற்றம் ;
அவர்கள் நமக்கு
கொடுத்து விட்டு
சென்றதின் மதிப்பு
தெரியாததால்
வந்த குற்றம் ;
அவர்களுடைய
வார்த்தைகளை
அலட்சியப்படுத்தியதால்
ஏற்பட்ட குற்றம் ;
வருங்கால உலகம்
நன்றாக இருக்க
வேண்டும் என்பதற்காக
அவர்கள் தங்களை
வருத்தி கண்டு
பிடித்தவைகளை
சொன்னவைகளை
நாம் ஏற்றுக் கொண்டு
பின்பற்றாததால்
வந்த குற்றம்; “ 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 19-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment