ஜபம்-பதிவு-520
(அறிய
வேண்டியவை-28)
“ஆனால்
அபிமன்யு
கோழைகளின்
கையால்
இறந்தான்
என்று
வரலாறு
வருங்காலத்தில்
சொல்லி
விடக்கூடாது
என்பதற்காகத்
தான்
கவலைப்
படுகிறேன்
“
“மரணபயம்
இருப்பதால்
நீங்கள்
அனைவரும்
ஒன்றாக
இணைந்து
என்னை
எதிர்த்துப்
போரிட்டுக்
கொண்டிருக்கிறீர்கள்
;
மரணபயம்
எனக்கு
இல்லாத
காரணத்தினால்
- நான்
தன்னந்தனியாக
போரிட்டுக்
கொண்டிருக்கிறேன்;”
“இப்போதாவது
புரிந்து
கொண்டீர்களா
மரணபயம்
இல்லாதவன்
அபிமன்யு
என்று “
“உலகத்திலேயே
மிகச்சிறந்த
வீரர்களுடன்
அபிமன்யு
போரிட்டான்
என்று
நாளைய
வரலாறு
சொல்லாது
“
“உலகத்திலேயே
சிறந்த
கோழைகளகாகக்
கருதப்படக்
கூடியவர்கள்
ஒன்றாக
இணைந்து
அபிமன்யுவை
எதிர்த்தார்கள்
என்று
தான்
நாளைய
வரலாறு
சொல்லப்
போகிறது “
“கடவுளே
வீரர்களின்
கையால்
சாகும்
வரத்தை
எனக்கு
அளிக்காமல்
விட்டு
விட்டாயே
கோழைகளின்
கையிலா
இந்த
அபிமன்யு
சாக
வேண்டும் “
(அனைவரும்
ஒன்றாகச்
சேர்ந்து
அபிமன்யுவைத்
தாக்குகிறார்கள்
வாழ்வின்
இறுதிக்
கட்டத்தில்)
அபிமன்யு
:
“தந்தையே
!
என்னுடைய
கடமையைச்
செய்து
முடித்து
விட்டேன் “
“பெரிய
தந்தையை
கைது
செய்து
போரினை
நிறுத்தி
விடுவதற்கு
செய்யப்பட்ட
சதித்திட்டத்தை
முறியடித்து
விட்டேன்
“
“என்னால்
முடிந்தவரை
தர்மத்தை
நிலைநாட்டுவதற்கு
முயற்சி
செய்து
விட்டேன்
“
“அபிமன்யுவை
தன்னந்தனியாக
யாராலும்
வீழ்த்த
முடியாது
கூட்டமாக
சேர்ந்தால்
தான்
வீழ்த்த
முடியும்
என்பதை
இந்த
உலகத்திற்கு
உணர்த்தி
விட்டேன் “
“அர்ஜுனனைப்
போலவே
அர்ஜுனனின்
மகன்
அபிமன்யுவும்
வீரம்
மிக்கவன்
என்பதை
நிரூபித்து
விட்டேன்”
“நான்
செல்கிறேன்
தந்தையே
நான்
செல்கிறேன்”
“என்
தாய்த்
திருநாடே
இந்த
அபிமன்யு
செல்வதற்கு
விடை
கொடு !”
“என்
தாய் மண்ணே
உன்னை
வணங்குகிறேன்
இந்த
அபிமன்யுவை
ஏற்றுக்
கொள்”
(அபிமன்யு
இறந்து
விடுகிறான்)
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
19-06-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment