June 19, 2020

அறிய வேண்டியவை-பதிவு-22


               ஜபம்-பதிவு-514
           (அறிய வேண்டியவை-22)

(குருஷேத்திரப்  போர்க்களம்)

சகாதேவன்:
“சதியிலே
புதிய அத்தியாயம்
ஆரம்பித்து
இருக்கிறது “

“சதித்திட்டம்
தீட்டும்
கூடாரமாக
கெளரவர்கள்
கூடாரம் மாறி
இருக்கிறது  ;
சூழ்ச்சிகளின்
இருப்பிடமாக
பிறப்பெடுத்து
இருக்கிறது ;

நகுலன் :
“போரில்
இதெல்லாம்
சகஜம் தானே  !”

பீமன் :
“ஆனால்
நேருக்கு நேர்
நின்று போர்
செய்ய
முடியாதவர்கள்
தீட்டுவது
சூழ்ச்சி தானே”

நகுலன்  :
“சூழ்ச்சி என்று
நீங்கள் எதைச்
சொல்கிறீர்கள்
அண்ணா ! “

பீமன் :
“அண்ணன்
தர்மரை கைது
செய்து விட்டால்
போர் முடிவுக்கு
வந்து விடும்
என்ற
காரணத்திற்காக  
குரு
துரோணாச்சாரியார்
சக்கர வியூகத்தை
உருவாக்கி
இருக்கிறார்  

நகுலன் :
“சக்கரவியூகத்தை
உருவாக்குவதன்
மூலம் எப்படி
அண்ணனை
கைது செய்ய
முடியும் “

பீமன்  :
“சக்கர வியூகம்
அறிந்தவர்கள்
நம்முடைய
அணியில்
வசுதேவ
கிருஷ்ணனும்
தம்பி
அர்ஜுனனும்
மட்டும் தான்  ;
இவர்கள்
இருவரையும்
குருஷேத்திரப்
போர்க்களத்திலிருந்து
வெகு
தொலைவுக்கு
அழைத்துச்
சென்று
விட்டால்
அண்ணனை
எளிதாக
கைது செய்து
விடலாம் “

தர்மர் :
“பீமன் சொல்வது
சரி தான்
சக்கர வியூகம்
அறிந்தவர்கள்
தம்பி அர்ஜுனனும்
வசுதேவ
கிருஷ்ணனும்
தான் இவர்கள்
குருஷேத்திரப்
போர்க்களத்தில்
இல்லை என்றால்
என்னை எளிதாக
கைது செய்து
விடலாம்
போரும்
முடிவுக்கு
வந்து விடும் “

பீமன் :
“தம்பி
அர்ஜுனனையும்
வசுதேவ
கிருஷ்ணனையும்
குருஷேத்திரப்
போர்க்களத்திலிருந்து
வெகு தொலைவிற்கு
அழைத்துச்
சென்று விட்டால்
அண்ணனைக்
கைது செய்து
குருஷேத்திரப்
போரை
முடிவுக்குக்
கொண்டு
வந்து விடலாம்
என்ற
காரணத்திற்காகத்
தான் சுசர்மனை
வைத்து தன்னுடன்
போரிடும் படி
அர்ஜுனனை
சவாலுக்கு
அழைக்கும்படிச்
செய்து
இருக்கிறார்கள். “

“சவாலை
ஏற்றுக் கொண்ட
அர்ஜுனன்
சுசர்மனிடம் போரிட
ஒத்துக் கொண்டு
விட்டான் “

“சுசர்மன்
குருஷேத்திரப்
போர்க்களத்தை
விட்டு வெகு
தொலைவுக்கு
அர்ஜுனனை
அழைத்துச்
சென்று
விட்டான் “

“கண்ணுக்கு எட்டிய
தொலைவு வரை
அர்ஜுனனையும்
வசுதேவ
கிருஷ்ணனையும்
காணவேயில்லை “

“குரு
துரோணாச்சாரியார்
சக்கர வியூகத்தை
உருவாக்கி
இருக்கிறார் “

“இனி அண்ணனைக்
கைது செய்வதை
நம்மால் எப்படி
தடுக்க முடியும் “

சகாதேவன் :
“இப்போது
என்ன செய்வது
அண்ணா ?”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 19-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment