ஜபம்-பதிவு-518
(அறிய
வேண்டியவை-26)
துரியோதனன்
:
“குருவே
!
அபிமன்யுவைக்
கட்டுப்
படுத்த
முடியாதா?
அவனை
வீழ்த்த
முடியாதா
?”
துரோணர்
:
“ஒன்றை
நன்றாக
ஞாபகம்
வைத்துக்
கொள்
துரியோதனா
!
அபிமன்யுவை
வீழ்த்தவில்லை
என்றால்
நம்மால்
யுதிஷ்டிரனை
நெருங்க
முடியாது
அப்புறம்
யுதிஷ்டிரனை
கைது
செய்வது
என்பது
இயலாத
காரியம்
ஆகி விடும் “
“யுதிஷ்டிரனைக்
கைது
செய்ய
வேண்டும்
என்றால்
அபிமன்யு
வீழ்த்தப்படத்
தான்
வேண்டும்
“
“யுதிஷ்டிரனுக்கும்
எனக்கும்
இடையில்
தடையாக
இருந்து
யுதிஷ்டிரனைக்
கைது
செய்ய
விடாமல்
தடுத்துக்
கொண்டிருப்பது
அபிமன்யு
மட்டுமே
அபிமன்யுவை
வீழ்த்துவதற்கு
முயற்சி
செய் “
துரியோதனன்
:
“அதற்கு
நான்
என்ன
செய்ய
வேண்டும்
குருவே”
துரோணர்
:
“அர்ஜுனனின்
மகனான
அபிமன்யுவை
யாராலும்
கட்டுப்
படுத்த
முடியாது
அவனை
வீழ்த்துவது
அவ்வளவு
எளிதான
காரியம்
கிடையாது
“
“முதலில்
அவனை
நிராயுதபாணியாக்குங்கள்
ஆயுதங்கள்
ஏதுமின்றி
நிராயுதபாணியாக
தன்னந்தனியாக
இருக்கும்
போது
மட்டும்
தான்
அபிமன்யுவைக்
கொல்ல
முடியும்”
“ஆயுதத்தை
அவன்
கையில்
வைத்திருக்கும்
போது
அவனைக்
கொல்ல
முடியாது”
“முதலில்
அபிமன்யுவை
நிராயுதபாணியாக்குங்கள்”
துரியோதனன்
:
“அப்படியே
செய்கிறோம்”
(பாண்டவர்கள்
கூடாரத்தில்)
தர்மர்
:
“பீமா
!
எனக்கு
பயமாக
இருக்கிறது
“
“உலகத்திலேயே
சிறந்த
வீரர்கள்
என்று
சொல்லப்படக்
கூடியவர்களுடன்
அபிமன்யு
யாருடைய
துணையும்
இல்லாமல்
தன்னந்தனியாக
போரிட்டுக்
கொண்டிருக்கிறான்
;
போரிட்டுக்
கொண்டிருக்கிறான்
என்று
சொல்வதை
விட
போராடிக்
கொண்டிருக்கிறான்
என்று
தான்
சொல்ல
வேண்டும் ;”
“அவர்கள்
ஒவ்வொருவருமே
ஆயிரக்
கணக்கானவர்களைக்
கொல்லக்
கூடிய
ஆற்றல்
படைத்தவர்கள்
ஆயிற்றே ;
போர்
தந்திரத்தில்
அவர்களை
மிஞ்சியவர்கள்
யாரும்
இருக்க
முடியாதே
!”
“அனைவரும்
ஒன்றாகச்
சேர்ந்து
அபிமன்யுவை
எதிர்க்கிறார்களே
!
அவர்களை
அபிமன்யு
எப்படி
தடுக்கப்
போகிறான்
;
சிறுவனாயிற்றே
அவனால்
எவ்வளவு
நேரம்
அவர்களை
தடுக்க
முடியும் “
“நாம்
அனைவரும்
அபிமன்யுவிற்கு
உதவ
முடியாமல்
போய்
விட்டதே ;
அபிமன்யுவிற்கு
ஏதும்
நேர்ந்து
விட்டால்
நான்
எப்படி
அர்ஜுனனைப்
பார்ப்பேன்
;
அர்ஜுனன்
என்ன
கேள்வி
கேட்டாலும்
அதற்கு
என்னிடம்
பதில்
இருக்காதே “
“இப்படி
ஒரு
இக்கட்டான
சூழ்நிலையில்
மாட்டிக்
கொண்டானே
“
“என்னைக்
கைது
செய்து
போரை
முடிவுக்குக்
கொண்டு
வரக்கூடாது
என்பதற்காக
சிறுவனான
அபிமன்யு
தன்னந்தனியாக
போராடிக்
கொண்டிருக்கிறான்”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
19-06-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment