June 19, 2020

அறிய வேண்டியவை-பதிவு-27


               ஜபம்-பதிவு-519
         (அறிய வேண்டியவை-27)

“அவனுக்காக
நாம் கடவுளை
வேண்டுவதைத்
தவிர நம்மால்
எதுவும் செய்ய
முடியாது”

“தர்மத்தாயே!
தர்மத்தை நிலை
நாட்டுவதற்காக
தன்னந்தனியாக
போராடிக்
கொண்டிருக்கும்
உன் பிள்ளை
அபிமன்யுவிற்கு
துணையாக இரு”

“சூரியனே
ஏன் இன்னும்
அஸ்தமனம்
ஆகாமல்
இருக்கிறாய் ;
அபிமன்யு
போராடிக்
கொண்டிருப்பதைப்
பார்த்தும்
உனக்கு இரக்கம்
வரவில்லையா?”

“காலமே
ஏன் இன்னும்
கண்ணை
மூடிக் கொண்டு
வேடிக்கைப்
பார்த்துக் கொண்டு
இருக்கிறாய்?”

“கடவுளே
அந்த சிறுவன்
அபிமன்யுவிற்கு
துணையாக இரு”

“கடவுளே
உன்னுடைய
துணை இருந்தால்
மட்டுமே
அபிமன்யு
குருஷேத்திரப்
போர்க்களத்திலிருந்து
இன்று உயிரோடு
வர முடியும்,”

“கடவுளே !
அபிமன்யுவைக்
காப்பாற்று “

(அபிமன்யுவை
அனைவரும்
ஒன்றாகச்
சேர்ந்து வெறி
கொண்டு
தாக்குகின்றார்கள் ;

கர்ணனின்
பாணங்கள்
அபிமன்யுவின்
தேர்ச்சக்கரங்களை
உடைத்து
விடுகிறது ;

துரோணரின்
பாணங்கள்
அபிமன்யுவின்
தேரின் கொடியை
வெட்டி விடுகிறது ;

சகுனி
அபிமன்யுவின்
தேர்க்குதிரைகளைக்
கொன்று
விடுகிறான் ;

துரியோதனனின்
கதாயுதம்
அபிமன்யுவின்
தேரோட்டியைக்
கொன்று
விடுகிறது ;

கிருபாச்சாரியார்
அபிமன்யுவின்
வில்லை
உடைத்து
விடுகிறார் ;

அஸ்வத்தாமன்
அபிமன்யுவின்
ஈட்டியை
உடைத்து
விடுகிறான் ;

தேரில்லாத
அபிமன்யு
வாளுடன்
கீழே குதித்து
விடுகிறான் ;

துரோணரின்
அம்பு
அபிமன்யுவின்
வாளை
உடைத்து
விடுகிறது
அபிமன்யு
நிராயுதபாணியாக
நின்று
கொண்டிருக்கிறான் “

“அனைவரையும்
பார்த்து
அபிமன்யு
பேசுகிறான்”

அபிமன்யு :
“உங்களுடைய
இந்த செயலைக்
கண்டு நான்
வெட்கப்படுகிறேன்  ;
வீரர்களுடன்
போரிட வந்தேன்
என்று
நினைத்தேன்
ஆனால்
இப்போது தான்
தெரிகிறது - நான்
கோழைகளுடன்
போரிட்டுக்
கொண்டு
இருக்கிறேன்
என்று 

“நான் இறக்கப்
போகிறேன்
என்று எனக்குத்
தெரியும் - நான்
இறந்து
கொண்டிருக்கிறேன்
என்பதும்
எனக்குத்
தெரியும் “

“என்னுடைய
இறப்பைப்
பற்றி நான்
எப்போதும்
கவலைப்பட்டதே
இல்லை ;
இறப்பை
எப்போதும்
புன்முறுவலுடன்
வரவேற்கக்
காத்துக்
கொண்டிருப்பவன்
நான்  ;
இப்போதும்
அப்படித் தான்
இறப்பை எதிர்
நோக்கிக்
காத்துக்
கொண்டிருக்கிறேன் ;”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 19-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment