July 07, 2020

அறிய வேண்டியவை-பதிவு-79


              ஜபம்-பதிவு-571
        (அறிய வேண்டியவை-79)

“மீண்டும்
இதைப் போல்
ஒரு தவறு
ஏற்படாமல்
இருக்க வேண்டும்
என்பதற்காகவும் ;
மீண்டும்
இதைப் போல்
ஒரு தவறைச்
செய்வதற்கு யாரும்
யோசிக்கக் கூடாது
என்பதற்காகவும் ;
மீண்டும்
இதைப் போல்
ஒரு செயலை யாரும்
செய்யக்கூடாது
என்பதற்காகவும் ;
துரியோதனனின்
நன்மைக்காகவும்
நாட்டு மக்களின்
நன்மைக்காகவும்
கௌரவர்களின்
நன்மைக்காகவும்
தான் நான்
இங்கு வந்தேன் “

“கௌரவர்கள்
அவையில் உன்
முன்னால்
ஒரு பெண்
அவமானப்
படுத்தப்பட்டிருக்கும்
போது - அதை
தடுக்காமல்
இருந்த உன்னுடைய
செயலை
முனிவர்களாகிய
நாங்கள் யாரும்
ஏற்றுக் கொள்ளவும்
இல்லை
முனிவர்களாகிய
நாங்கள் யாரும்
உன்னை
மன்னிப்பதாகவும்
இல்லை “.

“பீஷ்மர் ; துரோணர் ;
போன்றவர்களின்
அறிவுரைகளையும்
விதுரரின் உண்மை
வார்த்தைகளையும்
நீ கேட்டு
நடந்து இருந்தால்
இத்தகைய ஒரு
தவறான
செயலுக்கு நீ
துணை போய்
இருக்க மாட்டாய் “

“ஒரு நாட்டின்
மன்னனாக இருந்தும்
நடந்த தவறான
செயலை தடுப்பதற்கு
ஒரு நாட்டின்
மன்னனாக இருந்து
உன்னால் தடுக்க
முடியவில்லை
மகனுக்கு தந்தையாக
இருந்தும் நடந்த
தவறான செயலை
தந்தையாக இருந்து
உன்னால் தடுக்க
முடியவில்லை
தவறுக்கு துணை
போய் இருக்கிறாய் “

“மன்னனாக இருந்து
அனைவருக்கும்
நல்ல வழியைக்
காட்ட வேண்டிய நீ
வழி தவறிப்
போய் இருக்கிறாய் “

(மைத்ரேயர்
கோபத்துடன்
துரியோதனனை
நோக்கி பேசத்
தொடங்குகிறார்)

மைத்ரேயர் :
“மகனே
துரியோதனா
வீரத்தில்
சிறந்தவனே
கதாயுதத்தால்
யாரும் வீழ்த்த
முடியாது என்ற
சிறப்பைப்
பெற்றவனே - நான்
சொல்வதைக் கேள்
உன்னுடைய
நன்மைக்காக
நான் சொல்லும்
அறிவுரைகளைக்
கேள் - நான்
சொல்லும்
அறிவுரைகளைக்
கேட்டு நீ
நடந்தால் 
உன்னைச்
சார்ந்தவர்கள்
மட்டுமல்ல
இந்த நாட்டில்
உள்ள அனைவரும்
நலமாக இருப்பார்கள்”

“உன்னுடைய
நன்மைக்காக
சொல்கிறேன்
பாண்டவர்களுடன்
போரிட வேண்டும்
என்ற எண்ணத்தைக்
கைவிடு
பாண்டவர்களுடன்
போரிட்டு யாரும்
வெற்றி பெற
முடியாது
அவர்களுடன் குடி
கொண்டிருப்பது வீரம்
மட்டுமல்ல
தர்மமும் தான்
தர்மம் அவர்களை
காக்கும் கவசமாக
காத்துக்
கொண்டிருக்கும்
வரை யாரும்
அவர்களை
வீ‘ழ்த்த முடியாது “

“துரியோதனான
நான் சொன்ன
அறிவுரைகளைக்
கேட்டு நட
பாண்டவர்களுடன்
சண்டையிட
முயற்சி செய்யாதே
பாண்டவர்களுடன்
சமாதானம்
செய்து கொள்
பாண்டவர்களுடன்
போரிடுவரைத்
தவிர்த்து
அவர்களுடன்
நட்புடன் பழகக்
கற்றுக் கொள் “

( முனிவர்
சொன்னதைக் கேட்டு
விட்டு துரியோதனன்
தன்னுடைய
கோபத்தை
அடக்க முடியாமல்
தொடையைத்
தட்டிக் கொண்டு
அலட்சியமாக
சிரித்துக் கொண்டு
கால்களைத் தரையில்
தேய்த்தபடி ஒன்றும்
தெரியாதவன் போல்
தலையை
தொங்க போட்டுக்
கொண்டு நின்று
கொண்டிருந்தான்

துரியோதனனுடைய
இந்தச் செயலைக்
கண்டார் முனிவர்
மைத்ரேயர்
துரியோதனனுடைய
இச்செயல்
முனிவரை மிகுந்த
கோபத்திற்கு  
உள்ளாக்கியது )

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 07-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment