July 07, 2020

அறிய வேண்டியவை-பதிவு-82


               ஜபம்-பதிவு-574
        (அறிய வேண்டியவை-82)

பீமன் :  
“திரௌபதி நீ
சொன்னது
கண்டிப்பாக
நிறைவேறும்
நீ சொன்னதை - நான்
நிறைவேற்றுகிறேன்
துரியோதனா
உன்னுடைய
தொடைகளை
நான் உடைத்து
எறிவேன்
உன்னுடைய
தொடைகளை நான்
உடைத்தெறியா
விட்டால் ஏழு
ஜென்மத்திற்கும் இந்த
பீமனாகிய நான்
உனக்கு
அடிமையாக
இருக்கிறேன்
இது நான்
ஏற்கும் சபதம்”

(என்று பீமன்
சபதம் எடுத்தான்)

//////////////////////////////////////
(காந்தாரி வியாசரை
சந்திக்கச் சென்றாள்)

வியாசர் :
“வா மகளே
நீ வருவாய் என்று
எனக்குத் தெரியும்
உனக்காகத் தான்  
நான் காத்துக்
கொண்டிருக்கிறேன்”

காந்தாரி :
“நான் வருவேன்
என்பது உங்களுக்கு
தெரிந்து இருந்தால்
எதற்காக
வந்திருக்கிறேன்
என்பதும்
உங்களுக்குத்
தெரியும்
ஆகவே நான்
வந்ததற்கான
காரணத்தை
சொல்ல வேண்டிய
அவசியம் இல்லை
என்று நினைக்கிறேன்”

வியாசர் :
“நீ சொல்ல
வேண்டாம் தான்
ஆனால் நான்
சொல்ல வேண்டியது
நிறைய இருக்கிறது
கேட்க வேண்டிய
கேள்விகள் நிறைய
இருக்கிறது
தீர்க்க வேண்டிய
சந்தேகங்கள்
நிறைய இருக்கிறது “

காந்தாரி :
“முனிவரில்
சிறந்தவரான
தங்களுக்கே சந்தேகம்
ஏற்பட்டிருக்கிறதா”

வியாசர் :
“நீ செய்ய
நினைத்திருக்கும்
செயலினால் தான்
எனக்கு சந்தேகமே
ஏற்பட்டிருக்கிறது”

“நீ எடுத்திருக்கும்
முடிவு எத்தகைய
விளைவுகளை
ஏற்படுத்தும் என்பது
உனக்குத் தெரியுமா
எத்தகைய
பிரச்சினைகளை
ஏற்படுத்தும் என்பது
உனக்குத் தெரியுமா
யார் யாருக்கு
இதனால் பிரச்சினை
ஏற்படப் போகிறது
என்பது
உனக்குத் தெரியுமா
இதனால் பின்னால்
ஏற்படக் கூடிய
விளைவுகள் பற்றி
உனக்குத் தெரியுமா?”

காந்தாரி  :
“எனக்கு பின்
விளைவுகளைப் பற்றி
எல்லாம் ஒன்றும்
தெரியாது “

வியாசர்   :
“ஒரு செயலைச்
செய்வதற்கு முன்னால்
அந்த செயலைச்
செய்தால்
ஏற்படக்கூடிய
பின் விளைவுகளைப்
பற்றி யோசிக்க
வேண்டும் என்பது
உனக்குத் தெரியாதா
ஏன் நீ
யோசிக்கவில்லை”

காந்தாரி  :
“அதைப் பற்றி
எல்லாம் நான்
யோசிக்கவில்லை
யோசிக்கக் கூடிய
நிலையில்
நான் இல்லை”

வியாசர்  :
“காரணம்”

காந்தாரி :
“காரணம் நான் ஒரு
தாய் என்பதால்”

“நான் இறந்தாலும்
என்னுடைய மகன்
உயிர் காப்பாற்றப்பட
வேண்டும் என்ற
காரணத்தால் தான்”

என்னுடைய
உயிரைக்
கொடுத்தாவது
என்னுடைய
மகனுடைய
உயிரைக் காப்பாற்ற
வேண்டும் என்ற
காரணத்தால் தான்”

“மகனுக்கு என்னால்
ஒரு செயலைச்
செய்ய முடிகிறது
என்றால் - நான்
எத்தகைய
துன்பங்களையும்
ஏற்றுக் கொள்வதற்குத்
தயாராக இருக்கிறேன்
என்ற
காரணத்தால் தான்”

“என்னுடைய 99
புதல்வர்களையும்
இழந்து விட்டேன்
ஒரு மகனையாவது
காப்பாற்ற
வேண்டும் என்ற
காரணத்தால் தான்”

“எஞ்சியிருக்கும் ஒரே
புதல்வனான
துரியோதனனையாவது
காப்பாற்ற
வேண்டும் என்ற
காரணத்தால் தான்”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 07-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment