ஜபம்-பதிவு-577
(அறிய
வேண்டியவை-85)
“அவன்
பிறந்த
மேனியாக
உன்
முன்னால்
வந்து
நின்ற
பின்னர்
உன்னுடைய
கண்களைக்
கட்டிக்
கொண்டிருக்கும்
கட்டை
அவிழ்த்து
உன்னுடைய
கண்களால்
- நீ
துரியோதனனுடைய
உடல்
முழுவதும்
ஒரு
உறுப்பு விடாமல்
எல்லா
உறுப்புகளையும்
பார்க்க
வேண்டும்
அவ்வாறு
பார்க்கும்
போது
உன்னுடைய
புண்ணியப்
பலன்கள்
அனைத்தும்
ஒரே
சக்தியாகி
உன்னுடைய
கண்களிலிருந்து
வெளிப்படும்
“
“அவ்வாறு
வெளிப்படும்
உன்னுடைய
புண்ணியப்
பதிவுகள்
அடங்கிய
மொத்த
சக்தியை
உன்னுடைய
மகனுக்கு
பாய்ச்சுவதன்
மூலம்
உன்னுடைய
சக்தியானது
உன்னுடைய
மகனுக்கு
பரிமாற்றம்
செய்யப்படும் “
“அவன்
உடலில்
ஒட்டுத்
துணி எதுவும்
இருக்கக்
கூடாது”
“துரியோதனன்
பிறந்த
மேனியாக
வராமல்
உடம்பில்
ஏதேனும்
ஒரு
உறுப்பில்
துணியைக்
கட்டி
அந்த
உறுப்பை
மறைத்து
வைத்துக்
கொண்டு
வந்தாலோ
அல்லது
மறைப்பால்
அந்த
உறுப்பை
மறைத்து
வைத்துக்
கொண்டு
வந்தாலோ
அந்த
உறுப்பில்
மட்டும்
உன்னுடைய
சக்தி
பாயாது “
“துரியோதனனுடைய
உடலில்
எந்த
இடத்தில்
உன்னுடைய
சக்தி
பாயவில்லையோ
அந்த
இடம் தான்
துரியோதனனுடைய
உடலில்
பலவீனமான
இடமாக
இருக்கும்
என்பதை
மறவாமல்
நினைவில்
கொள்
காந்தாரி
“
காந்தாரி :
“தாங்கள்
சொன்னவைகள்
அனைத்தையும்
நான்
என்னுடைய
நினைவில்
வைக்கிறேன்
முனிவரே
- என்னை
வாழ்த்தி
அனுப்புங்கள் “
வியாசர் :
(வியாசர்
காந்தாரியை
வாழ்த்திக்
கொண்டே
சொல்கிறார்)
“என்னுடைய
ஆசிகள்
உனக்கு
என்றும்
உண்டு நீடூழி
வாழ்க
மகளே”
“நான்
ஒன்றை
மீண்டும்
சொல்ல
ஆசைப்படுகிறேன்
காந்தாரி
உன்னுடைய
மகன்
உனக்கு
முன்பாக
எதிரே
வந்து
நிற்கும்
போது
பிறந்த
மேனியாகத்
தான்
நிற்க வேண்டும் “
“நீ
உன்னுடைய
கண்ணிலிருந்து
உன்னுடைய
சக்தியைப்
பாய்ச்சும்
போது
துரியோதனனுடைய
உடலில்
உள்ள
எந்த
ஒரு
உறுப்பையும்
மறைக்கும்
வண்ணம்
எந்த
ஆடையும்
துரியோதனன்
உடம்பில்
இருக்கக்
கூடாது
என்பதை
மட்டும்
மறந்து
விடாதே
காந்தாரி
“
(காந்தாரி
அங்கிருந்து
செல்கிறாள்
நேராக
துரியோதனனை
பார்க்கச்
செல்கிறாள்)
//////////////////////////////////////////////
(காந்தாரியின்
முன்னால்
துரியோதனன்
வந்து
நிற்கிறான்)
துரியோதனன்
:
“என்னைப்
பார்க்க
தாங்களே
இங்கு
வந்ததன்
காரணம்
என்ன
தாயே!”
“தோல்வியின்
விளிம்பில்
இருக்கும்
தன்னுடைய
மகன்
எப்படி
இருக்கிறான்
என்பதைப்
பார்ப்பதற்காக
வந்தீர்களா
?”
“அனைவரையும்
இழந்து
விட்ட
உங்கள்
மகன்
தன்னந்தனியாக
எப்படி
இருக்கிறான்
என்பதைப்
பார்ப்பதற்காக
வந்தீர்களா
?”
“அனைத்தையும்
இழந்து
விட்டு
துக்கம்
தாளாமல்
உங்களுடைய
மகன்
அழுது
கொண்டிருக்கிறானா
என்பதைப்
பார்ப்பதற்காக
வந்தீர்களா
?”
“அனைவரையும்
இழந்து
விட்டு
உங்கள்
மகன்
மன
உறுதியை
இழந்து
விட்டு
நிற்கிறானா
என்பதைப்
பார்ப்பதற்காக
வந்தீர்களா
?”
“இந்தத்
துரியோதனனுடைய
கடைசி
மூச்சு
இருக்கும்
வரை
குருஷேத்திரப்
போர்
முடியாது”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
07-07-2020
/////////////////////////////////
No comments:
Post a Comment