ஜபம்-பதிவு-570
(அறிய
வேண்டியவை-78)
மைத்ரேயர்
:
“பல
இடங்களுக்கும்
தீர்த்த
யாத்திரை
சென்ற
நான்
குருஜாங்காலத்தை
அடைந்தேன்
அங்கே
காம்யக
வனத்தில்
யுதிஷ்டிரரைச்
சந்தித்தேன்
ஜடாமுடி
தரித்து
மான்
தோல் உடுத்தி
ஆசிரமத்தில்
தங்கி
இருந்த
யுதிஷ்டிரனைச்
சந்தித்தேன்
“
திருதராஷ்டிரன் :
“பாண்டவர்கள்
அனைவரும்
நலமாக
இருக்கிறார்களா
முனிவரே!
“
மைத்ரேயர் :
“அவர்கள்
அனைவரும்
நலமாக
இருக்கிறார்கள்
தங்களிடம்
இருப்பதை
வைத்துக்
கொண்டு
நலமாக
இருப்பது
எப்படி
என்பதை அறிந்து
வைத்திருக்கிறார்கள்”
“இருப்பதை
வைத்துக்
கொண்டு
வாழ்ந்தாலே
மனதிற்கு
நிம்மதி
என்பதைத்
தெரிந்து
வைத்திருக்கிறார்கள்”
“இல்லாததைத்
தேடி
ஓடிக்
கொண்டிருப்பதால்
வாழ்க்கை
நரகமாகி
விடும்
என்பதை
புரிந்து
வைத்திருக்கிறார்கள்”
“இருப்பதை
வைத்துக்
கொண்டு
வாழ்ந்தால்
வாழ்க்கை
நிம்மதியுடன்
இருக்கும்
என்பதையும்
இல்லாததைத்
தேடி
ஓடுபவன்
வாழ்க்கை
நிம்மதி
இழந்து
இருக்கும்
என்பதையும்
அவர்கள்
அறிந்து
வைத்திருக்கின்ற
காரணத்தினால்
அவர்கள்
இருப்பதை
வைத்துக்
கொண்டு
நலமுடன்
வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்”
“தேன்
இருக்கும்
இடத்தைத்
தேடித்
தான்
தேனீக்கள்
செல்லும்
அதைப்
போல
அமைதியின்
உருவமாகவும்
தர்மத்தின்
காவலனாகவும்
இருக்கும்
யுதிஷ்டிரன்
இருக்கும்
இடத்தைத்
தேடி
பல
முனிவர்களும்
அவனை
சந்தித்து
விட்டு
சென்றனர்”
“பாண்டவர்கள்
எனக்கு
கொடுத்த
உபசரிப்பும்
அவர்கள்
என்னிடம்
காட்டிய
மரியாதையும்
அவர்கள்
என் மேல்
காட்டிய
அன்பும்
அவர்கள்
என் மேல்
வைத்திருந்த
பாசத்தை
வெளிப்படுத்திய
விதமும்,
என்னை
மெய்
சிலிர்க்க
வைத்தது”
“அனைத்தையும்
வைத்துக்
கொண்டு
பிறரை
மதிக்கத்
தெரியாமல்
உபசரிக்கத்
தெரியாமல்
இருப்பவர்கள்
மத்தியில்
எதுவும்
இல்லாமல்
இருந்தாலும்
பிறரை
மதிக்கத்
தெரிந்த
பாண்டவர்களின்
உபசரிப்பில்
மகிழ்ச்சியுற்றேன்”
“உபசரிப்பதற்கு
செல்வம்
இருந்தால்
தான்
முடியும்
என்பது
இல்லை
நல்ல
மனசு
இருந்தாலே
போதும்
என்பதை
பாண்டவர்கள்
உணர்த்தி
விட்டார்கள் “
“அங்கு
தான்
பஞ்ச
பாண்டவர்களை
தாக்கிய
மிகப்பெரிய
சோகத்தைத்
தெரிந்து
கொண்டேன்”
“மன்னா
உன்னுடைய
மகனால்
நடத்தப்பட்ட
பகடையாட்டம்
பகடையாட்டமாக
இல்லாமல்
சூதாட்டமாக
மாறி
விட்டிருந்தது
;
சூதாட்டத்தால்
நிகழ்த்தப்பட்ட
சூழ்ச்சியில்
பாண்டவர்கள்
சிக்கியதைத்
தெரிந்து
கொண்டேன் “
“சூழ்ச்சியால்
தோற்கடிக்கப்பட்டு
மிகுந்த
வேதனைக்குள்ளாயிருக்கும்
பஞ்ச
பாண்டவர்களின்
துயரத்தைத்
தெரிந்து
கொண்டேன் “
“சூழ்ச்சி
என்னும்
சூறைக்காற்று
அவர்களைச்
சுழன்றடித்து
விட்டு
சென்றதை
அவர்களுடைய
வார்த்தையில்
இருந்து
தெரிந்து
கொண்டேன் “
“சூழ்ச்சி
என்னும்
மிகப்பெரிய
அலை
பாண்டவர்களை
மூழ்கடித்து
விட்டு
சென்று
விட்டிருக்கிறது
என்பதை
அவர்களுடைய
கவலை
தோய்ந்த
செயல்களின்
மூலம்
தெரிந்து
கொண்டேன் “
“உன்னுடைய
மகன்
செய்த
தவறையும்
தெரிந்து
கொண்டேன் ;
அவனை
தவறு
செய்யச்
சொன்னது
யார்
என்பதையும்
தெரிந்து
கொண்டேன் ;
அவனுடைய
தவறான
செயலுக்கு
துணையாக
இருந்தவர்
யார்
என்பதையும்
தெரிந்து
கொண்டேன் ;”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
07-07-2020
/////////////////////////////////
No comments:
Post a Comment