July 06, 2022

ஜபம்-பதிவு-796 (சாவேயில்லாத சிகண்டி-130)

 ஜபம்-பதிவு-796

(சாவேயில்லாத

சிகண்டி-130)

 

(தசார்ண தேசத்தரசன்

ஹிரண்யவர்மனுடைய

மகளுக்கும்

சிகண்டினிக்கும்

திருமணம்

நடைபெற்றது.

பெற்றோர்களின்

வார்த்தைக்கிணங்க

தான் தவம்

செய்வதாகவும்,

தவம் செய்யும் போது

பெண்களைத்

தொடக்கூடாது

என்றும் சொல்லி

மனைவியிடம்

இருந்து விலகியே

இருந்தாள் சிகண்டினி.

 

பல நாட்கள்

இப்படியே

கழிந்த பின்பு

ஒரு நாள்

சிகண்டினியும்

அவளுடைய

மனைவியும்

ஒருஅறையில்

தனித்து

இருக்கும் போது

சிகண்டினியின்

மனைவி

சிகண்டினியிடம்

பேசத்

தொடங்கினாள்)

 

மனைவி :

உங்களிடம்

கொஞ்சம்

பேச வேண்டும்

 

சிகண்டினி :

வெளியே

செல்ல வேண்டும்

அவசரமான

வேலை இருக்கிறது

 

மனைவி :

நீங்கள் அவசரப்பட்டு

செய்த வேலையினால்

தான் நான் நிம்மதி

இழந்து தவிக்கிறேன்

 

சிகண்டினி :

வெளியிலிருந்து

யாரும் நம்முடைய

நிம்மதியைக்

கெடுக்க முடியாது

 

நம்முடைய நிம்மதியை

நாமே கெடுத்துக்

கொண்டால்

தான் உண்டு

 

மனைவி :

நம்முடைய

நிம்மதியை

நாமே கெடுத்துக்

கொள்ள முடியாது

 

நம்மைச் சுற்றி

இருப்பவர்கள் செய்யும்

செயல்களினால் தான்

நம்முடைய

நிம்மதியே கெடுகிறது

 

சிகண்டினி :

உன்னுடைய

நிம்மதியைக்

கெடுத்தது யார்

 

மனைவி :

நீங்கள் ஒரு

நல்ல நடிகர்

என்பதை

நிரூபிக்கிறீர்கள்

 

சிகண்டினி :

நடிக்க வேண்டிய

அவசியம்

எனக்கு இல்லை

 

மனைவி :

சிறிய வயது

முதல் நீங்கள்

ஒரு பெண்

என்பதை மறைத்து

இந்த உலகத்திற்கு

ஆண் என்று

உங்களை

வெளிப்படுத்திக்

கொண்டு நடித்துக்

கொண்டு

இருக்கிறீர்கள்

 

என்னிடமும்

பெண் என்பதை

மறைத்து

ஆண் என்று

நடித்துக் கொண்டு

இருக்கிறீர்கள்

 

சிகண்டினி :

நீ சொல்லும்

வார்த்தையில் உள்ள

அர்த்தத்தின் பொருள்

எனக்குப்

புரியவில்லை

 

மனைவி :

நீங்கள் செய்த

திருட்டுத் தனம்

அயோக்கியத் தனம்

ஏமாற்றுத் தனம்

கேடு கெட்ட

வேலை

ஆகியவற்றை நான்

கண்டுபிடித்து

விட்டேன்

 

சிகண்டினி :

நான் பெண்

என்பதை

கண்டு பிடித்து

விட்டாயா

 

மனைவி :

இல்லை

 

சிகண்டினி :

பிறகு

 

மனைவி :

நீங்கள் ஒரு

முழுமையான

பெண் இல்லை

என்பதை

கண்டு பிடித்து

விட்டேன்

 

சிகண்டினி :

என்னுடன்

நீண்ட காலம்

நீ பழகவில்லை

 

என்னுடைய

ஸ்பரிசம் கூட

உன் மேல்

படவில்லை

 

பிறகு எப்படி

சொல்கிறாய்

 

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-07-2022

-----புதன் கிழமை

 

/////////////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment