July 06, 2022

ஜபம்-பதிவு-797 (சாவேயில்லாத சிகண்டி-131)

 ஜபம்-பதிவு-797

(சாவேயில்லாத

சிகண்டி-131)

 

மனைவி :

ஒருவரைப் பற்றித்

தெரிந்து கொள்வதற்கு

அவரிடம் நீண்ட

நாட்கள்

பழக வேண்டிய

அவசியமும் இல்லை

 

அவருடைய

ஸ்பரிசமும்

நம் மீது பட

வேண்டியதில்லை

 

அவருடைய

நடவடிக்கைகளே

போதும்

 

சிகண்டினி :

அரச கட்டளையை

நிறைவேற்றினேன்

 

தவறு

என்னுடையதல்ல

 

மனைவி :

தவறு செய்பவர்கள்

யாரும்

தான் செய்தது

தவறு என்று

ஒத்துக் கொள்ளவும்

மாட்டார்கள்

 

செய்த தவறுக்கு

மனம் வருந்தவும்

மாட்டார்கள்

 

தன்னை திருத்திக்

கொள்ளவும்

மாட்டார்கள்

 

மன்னிப்பு

கேட்கவும்

மாட்டார்கள்

 

சிகண்டினி :

மன்னித்துக் கொள்

 

மனைவி :

பாதிப்பு அடையச்

செய்பவர்களுக்கு

மன்னிப்பு என்பது

ஒரு வார்த்தை தான்

 

ஆனால்

பாதிக்கப்பட்டவர்களுக்கு

அந்த வார்த்தையினால்

ஒரு உபயோகமும்

இல்லை

 

பெண்ணான நீங்கள்

ஒரு பெண்

என்பதை மறைந்து

பெண்ணான என்னை

திருமணம் செய்து

கொண்டது குற்றம்

 

சிகண்டினி :

விருப்பமில்லாமல்

செய்தால்

தான் குற்றம்

விருப்பப்பட்டு செய்வது

குற்றம் கிடையாது

 

ஒருவருக்கு உண்டாகும்

ஈர்ப்பைப் பொறுத்து

உறவு வைத்துக்

கொள்வது

அனைவருக்கும்

ஒன்றாக இருக்காது

மனிதருக்கு மனிதர்

வேறுபட்டுத் தான்

இருக்கும்

 

ஆணுக்கு

பெண்ணின் மீதும்

பெண்ணுக்கு

ஆணின் மீதும்

ஏற்படும்

ஈர்ப்பின் மூலம்

வைத்துக் கொள்ளும்

உறவு மட்டும் தான்

உறவு என்று

எடுத்துக்

கொள்ள முடியாது

 

ஆணுக்கு

ஆணின் மீதும்

பெண்ணுக்கு

பெண்ணின் மீதும்

மட்டுமல்லாமல்

பல்வேறு விதமான

ஈர்,ப்பின் மூலம்

மாறுபட்ட

தன்மையைக்

கொண்டவர்கள்

ஒருவருக்கொருவர்

வைத்துக் கொள்ளும்

உறவும்

உறவு தான்

 

ஏனென்றால்

உண்டாகும்

ஈர்ப்பைப் பொறுத்து

உறவு வைத்துக்

கொள்வது என்பது

நாமே விரும்பி

உண்டாக்கிக்

கொள்வது கிடையாது

அது தானாகவே

நமக்குள் உண்டாவது

 

இந்த உலகத்தில்

வாழும் அனைத்து

மனிதர்களுக்கும்

தனக்கு ஏற்படும்

ஈர்ப்பைப் பொறுத்து

உறவு வைத்துக்

கொள்வதற்கு

உரிமை இருக்கிறது

 

அந்த உரிமையை

பறிப்பதற்கோ

தடுப்பதற்கோ

மறுப்பதற்கோ

இந்த உலகத்தில்

யாருக்கும்

எந்தவிதமான

உரிமையும்

கிடையாது

 

இந்த உலகத்தில்

உள்ள அனைத்து

மனிதர்களுக்கும்

மதிப்பு கொடுத்து

அவர் விரும்வும்

உறவை

வைத்துக் கொள்ள

அவர்களுக்கு

அனுமதியளித்தால்

மட்டுமே

இந்த உலகம்

அனைத்து

மனிதர்களையும்

சமமாகக்

கருதுகிறது

என்று பொருள்

இல்லை என்றால்

மனிதர்களுக்குள்

வேறுபாடு

காட்டுகிறது

என்று பொருள்

 

இந்த உலகத்தில்

ஒவ்வொருவருக்கும்

வாழ்வதற்கு

உரிமை இருக்கிறது

இப்படித் தான்

வாழ வேண்டும்

இப்படி வாழக்

கூடாது என்று

சொல்வதற்கு

யாருக்கும்

உரிமை கிடையாது

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-07-2022

-----புதன் கிழமை

 

/////////////////////////////////////////////

No comments:

Post a Comment