ஜபம்-பதிவு-800
(சாவேயில்லாத
சிகண்டி-134)
மனைவி :
அரசன் என்பவன்
மக்களின் பிரதிநிதி
அரசன் சரியில்லை
என்றால் தவறான
ஒருவரை மக்கள்
அரசராக
வைத்திருக்கிறார்கள்
என்று தானே
அர்த்தம்
போர் நடக்கும்
போது அரசன்
பிடிபட்டு
கைதியானால்
அந்த நாடு
தோற்றதாகத்
தானே அர்த்தம்
ஏனென்றால்
அரசன் அந்த
நாட்டின் பிரதிநிதி
போர் வேண்டாம்
மக்கள்
சாகக் கூடாது
இழப்புகள்
ஏற்படக் கூடாது
இரத்தம் மண்ணில்
சிந்தக் கூடாது
என்று நினைக்கும்
இரண்டு நாட்டு
அரசர்கள்
தங்களுக்குள்
ஒரு போட்டியை
வைத்து
போட்டியில்
கிடைக்கும்
வெற்றி
தோல்வியை வைத்து
வெற்றி பெற்ற
அரசனுக்கு
தோல்வியுற்ற
அரசனும் அந்த
நாடும் அடிமை
என்று முடிவெடுத்து
அதை செயல்படுத்தி
வந்திருக்கின்றனர்
என்பது உங்களுக்குத்
தெரியாதா
ஏன் பாரத
நாட்டில் பகடை
ஆட்டத்தின் மூலம்
வெற்றி தோல்வி
நிர்ணயிக்கப்பட்டு
வெற்றி
பெற்றவர்களால்
அரசுகள்
கைப்பற்றப்பட்டு
அரசாளப்பட்டு
வந்து இருப்பது
உங்களுக்குத்
தெரியாதா
அரசனும் நாடும்
நாட்டு மக்களும்
ஒன்றாக
பிணைக்கப்பட்டவர்கள்
இவர்கள்
மூவரையும்
தனித்தனியாக
பிரிக்க முடியாது
அப்படி பிரித்தால்
அது நாடாக
இருக்காது
காடாகத் தான்
இருக்கும் என்பது
உங்களுக்குத்
தெரியாதா
அரசன் தோற்றால்
அந்த நாடு
தோற்றதாகத்
தானே அர்த்தம்
அரசன் வென்றால்
அந்த நாடு
வென்றதாகத்தானே
அர்த்தம்
அதனால் தான்
சொல்கிறேன்
உங்களை
உங்கள்
பெற்றொர்களை
உங்கள் நாடு
உங்கள்
நாட்டு மக்கள்
யாரையும்
நான் சும்மா
விடப்போவதில்லை
என்னுடைய
கண்ணீருக்கு
அனைவரும்
பதில் சொல்லித்
தான் ஆக வேண்டும்
சிகண்டினி :
நான் என்ன
செய்ய வேண்டும்
என்று நினைக்கிறாய்
உங்களைப்
பார்க்கவே
எனக்குப்
பிடிக்கவில்லை
வெளியே
செல்லுங்கள்
என் கண் முன்னே
நிற்காதீர்கள்
என்று
சொல்லிவிட்டு
அழத்
தொடங்கினாள்
பல விஷயங்களை
விளக்கமாக
எடுத்துச்
சொல்லியும்
புரிய வைக்க
முடியாமல்
தோற்றுப் போன
சிகண்டினி
இனி எந்த
ஒரு சொல்லைச்
சொல்லியும்
பயனில்லை
என்பதை
உணர்ந்து
கொண்ட
சிகண்டினி
பாதிப்படைந்தவர்களின்
வாயிலிருந்து
வெளிப்படும்
சொற்கள்
பாதிப்படையச்
செய்தவர்களை
சுடத் தான்
செய்யும்
என்பதை உணர்ந்து
கொண்ட சிகண்டினி
தான் அவமானப்
படுவதற்கு
இதற்கு மேல்
வேறு எந்த ஒரு
சொல்லும் இல்லை
என்பதை உணர்ந்து
கொண்ட சிகண்டினி
இதற்கு மேல்
தன்னை யாரும்
அசிங்கப்படுத்த
முடியாது என்பதை
உணர்ந்து கொண்ட
சிகண்டினி
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----06-07-2022
-----புதன்
கிழமை
/////////////////////////////////////////////
No comments:
Post a Comment