ஜபம்-பதிவு-801
(சாவேயில்லாத
சிகண்டி-135)
இப்போது
அசிங்கப்பட்டது
போல் தன்
வாழ்நாளில்
எப்போதும்
அசிங்கப்பட்டது
இல்லை என்பதை
உணர்ந்து கொண்ட
சிகண்டினி
அவமானப்
படுத்தப்பட்டதால்
உண்டான
வேதனையை
மறைக்க
முடியாமல்
வாடிய
முகத்துடனும்
கவலை தோய்ந்த
உள்ளத்துடனும்
தன் மனைவியின்
எதிரில் தலை
குனிந்த நிலையில்
நின்று கொண்டிருந்த
சிகண்டினி
எந்த ஒரு
சொல்லையும்
சொல்லாமல்
அமைதியாக
அந்த அறையை
விட்டு வெளியே
வந்தாள்.
ஏமாற்றப்பட்டோம்
என்பதை
உணரும் போது
எழும் அழுகைக்
குரல்
ஆக்ரோஷமாகத்
தான் இருக்கும்
என்பதை
சிகண்டினியின்
மனைவி அழுத
அழுகைக் குரல்
அந்த அறையில்
எதிரொலித்ததில்
இருந்து தெரிந்து
கொண்டாள்
சிகண்டினி
தன்னைச் சுற்றி
என்ன நடக்கிறது
என்பது தெரியாத
நிலையில்
சுய உணர்வு
இழந்த நிலையில்
ஒவ்வொரு அடியாக
எடுத்து வைத்துக்
கொண்டே
நடந்து சென்று
அரண்மனையை
விட்டு வெளியே
வந்த சிகண்டினி
அரண்மனை
வாயிலை அடைந்து
அரண்மனை வாசலில்
மாட்டப்பட்டிருந்த
வாடாத தாமரை
மாலையைக்
கண்டவுடன் தான்
தன்னுடைய சுய
உணர்வைப் பெற்றாள்
யாருடைய
கையும் படாமல்
யாருடைய
பாதுகாப்பும்
இல்லாமல்
தனிப்பட்ட
நிலையில்
ஆதரிக்க
யாரும்
இல்லாமல்
அனாதையாக
அரண்மனை
வாயிலில்
தொங்கிக்
கொண்டிருந்த
வாடாத தாமரை
மாலையைப்
பார்த்தாள்
சிகண்டினி
அந்த மாலையைக்
கையில் எடுத்தாள்
அந்த மாலையைப்
பார்த்து பேசத்
தொடங்கினாள்
சிகண்டினி
சிகண்டினி :
வாடாத தாமரை
மலரே நான் சிறிய
குழந்தையாக
இருந்தது முதல்
உன்னைப் பார்த்துக்
கொண்டு
இருக்கிறேன்
யாரும் உன்னை
ஏற்றுக்
கொள்ளாததால்
ஆதரிப்பதற்கு ஆள்
யாரும்
இல்லாததால்
அனாதையாக
தன்னந் தனியாக
தொங்கிக்
கொண்டிருக்கிறாய்
நீ எப்படி
அனாதையோ
நானும்
அப்படியே தான்
உன்னைப்
போல் ஒரு
அனாதை தான்
ஏன் என்னை
இப்படி
பார்க்கிறாய்
எனக்கு
தாய் தந்தை
இருக்கிறார்கள்
எப்படி நான்
அனாதையாக
இருக்க
முடியும் என்று
யோசிக்கிறாயா
வாடாத மலரே
நீ யோசிப்பது
சரி தான்
பெற்றெடுத்த
தாய் தந்தை
இருந்தாலும்
அவர்கள்
நம்மை புரிந்து
கொள்ளவில்லை
என்றாலும்
அவர்களால் நமக்கு
எந்தவிதமான
பலனும் இல்லை
என்றாலும்
அவர்களால் நமக்கு
எந்த ஒரு
உபயோகமும்
இல்லை என்றாலும்
அவர்கள் நம்மை
சரியாக வழி
நடத்தவில்லை
என்றாலும்
அவர்கள் நமக்கு
சரியான வழியைக்
காட்டவில்லை
என்றாலும்
அவர்கள் நம்மை
வாழ வைக்க எந்த
ஒரு முயற்சியும்
எடுக்கவில்லை
என்றாலும்
நாம் அனாதை
தான் அந்த
வகையில் நானும்
ஒரு அனாதை தான்
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----06-07-2022
-----புதன்
கிழமை
/////////////////////////////////////////////
No comments:
Post a Comment