ஜபம்-பதிவு-798
(சாவேயில்லாத
சிகண்டி-132)
மனைவி
:
அப்படி என்றால்
ஒழுக்கம் தவறி
வாழ வேண்டும்
என்கிறீர்களா
ஆண் பெண்ணுடனும்
பெண் ஆணுடனும்
வைத்துக் கொள்ளும்
உறவு மட்டும் தான்
ஒழுக்கம் என்று
சமுதாயம்
ஒழுக்கத்தை
வரையறை செய்து
வைத்திருக்கிறது
இப்படி சமுதாயம்
வரையறை செய்து
வைத்திருக்கும்
ஒழுக்கத்தை
ஒழுக்கம்
இல்லை என்று
சொல்கிறீர்களா
சிகண்டினி :
ஒழுக்கம் என்றால்
என்ன என்று
தெரியாத
தவறானவர்கள்
தான் ஒழுக்கத்தை
வரையறை செய்து
வைத்திருக்கிறார்கள்
தவறானவர்களால்
வரையறை செய்து
வைக்கப்பட்டது
தவறானதாகத்
தானே இருக்கும்
மனைவி :
எதை ஒழுக்கம்
என்கிறீர்கள்
சிகண்டினி :
காலம் இடம்
நேரம் ஆகியவற்றிற்கு
ஏற்றபடி மாறிக்
கொண்டே இருப்பது
ஒழுக்கம் கிடையாது
எந்தக் காலத்திலும்
எந்த இடத்திலும்
எந்த நேரத்திலும்
மாறாமல்
இருப்பது தான்
ஒழுக்கம்
எண்ணக் கூடிய
எண்ணமும்
சொல்லக் கூடிய
சொல்லும்
செய்யக் கூடிய
செயலும்
பிறரை பாதிக்காத
வகையில்
இருக்க வேண்டும்
அதற்குப் பெயர்
தான் ஒழுக்கம்
மனைவி :
இந்த மூன்றையும்
நீங்கள் எனக்கு
செய்து இருக்கிறீர்கள்
அப்படி என்றால்
நீங்கள் ஒழுக்கம்
தவறியவர் என்று
தானே அர்த்தம்
சிகண்டினி :
ஒழுக்கம்
தவறும்படி
ஆகி விட்டது
ஒழுக்கம்
இல்லாத செயலை
என்னை
செய்ய வைத்து
விட்டார்கள்
மனைவி :
பெண்ணாக
மாறிக் கொண்டு
இருக்கும் நீங்கள்
எதற்காக என்னைத்
திருமணம் செய்து
கொண்டீர்கள்
இழிவான
பிறப்பு நீங்கள்
சிகண்டினி :
கடவுள் படைத்த
படைப்புகளில்
இழிவான பிறப்பு
என்று எதுவும்
கிடையாது
கடவுள் படைத்த
படைப்புகள்
அனைத்துமே
உயர்வான
படைப்புகள் தான்
கடவுள் முன்
அனைவரும் சமம்
உயர்வானவர்கள்
இழிவானவர்கள்
என்று யாரும்
கிடையாது
உயர்வானர்கள்
என்றும்
இழிவானவர்கள்
என்றும் கடவுள்
யாரையும் பிரித்து
பார்ப்பதெல்லாம்
கிடையாது
இழிவான
குணத்தைக் கொண்ட
மனிதர்கள் தான்
தங்களுக்குள்
உயர்வானவர்கள்
தாழ்வானவர்கள்
என்று பிரித்து வைத்து
இருக்கிறார்கள்
தங்களுக்குள்
பிரிவினையை
ஏற்படுத்தி வைத்து
இருக்கிறார்கள்
இந்த உலகத்தில்
பிறக்கும்
அனைவருக்கும்
பிறப்பு எப்படி
நிகழ்கிறது
பிறப்பின் போது
என்ன நடைபெறுகிறது
என்பது தெரியாது
ஆனால்
ஆணிலிருந்து
பெண்ணாகவும்
பெண்ணிலிருந்து
ஆணாகவும்
மாற்றமடைவதின்
மூலம் மறுபிறப்பு
எடுப்பவர்களுக்கு
பிறப்பு எப்படி
நிகழ்கிறது
பிறப்பின்
போது என்ன
நடைபெறுகிறது
என்பது தெரியும்
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----06-07-2022
-----புதன்
கிழமை
/////////////////////////////////////////////
No comments:
Post a Comment