பதிவு-1-தேறற்க-
திருக்குறள்
“””தேறற்க
யாரையும்
தேராது
தேர்ந்தபின்
தேறுக
தேறும்
பொருள்”””””
-------திருக்குறள்
-------திருவள்ளுவர்
யாரையும்
ஆராயாமல்
தெளியக் கூடாது
நன்றாக ஆராய்ந்த
பிறகு அவரிடம்
தெளிவாகக்
கொள்ளத்தக்க
பொருள்களைத்
தெளிந்து நம்ப
வேண்டும்
இது தான்
இந்த திருக்குறளுக்கு
சொல்லப்படும்
விளக்கம்
இந்த திருக்குறளுக்கு
கீழ்க்கண்டவாறு
விளக்கம் சொல்லலாம்
நாம் எந்த ஒரு
செயலைச் செய்ய
ஆரம்பித்தாலும்
(அல்லது)
நாம் எந்த ஒரு
செயலையும் செய்து
கொண்டிருந்தாலும்
(அல்லது)
நாம் எந்த ஒரு
செயலையும் செய்து
முடித்திருந்தாலும்
அந்த சமயங்களில்
எல்லாம் நமக்கு
முன்னால் வந்து
நிற்பவர்கள் மூன்று
தன்மையைக்
கொண்டவர்களாகத்
தான் இருப்பார்கள்
ஒன்று
:
உதவி செய்பவர்கள்
இரண்டு:
அறிவுரை சொல்பவர்கள்
மூன்று:
குறை சொல்பவர்கள்
உதவி செய்பவர்கள்
களத்தில் இறங்கி
வேலை செய்பவர்கள்
அறிவுரை சொல்பவர்கள்
மற்றும்
குறை சொல்பவர்கள்
ஆகிய
இரண்டு தன்மைகளை
உடையவர்களும்
களத்தில் இறங்கி
வேலை செய்ய
மாட்டார்கள்
பேச்சு மட்டும்
தான் பேசுவார்கள்
பேச்சோடு நிறுத்தி
கொள்வாரகள்
செயலில் இறங்கும்
தைரியம் அவர்களுக்கு
கிடையவே கிடையாது
ஒன்று
:
உதவி செய்பவர்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்
(அ)
பலனை
எதிர்பார்த்து உதவி
செய்பவர்கள்
(ஆ)
பலனை
எதிர்பார்க்காமல்
உதவி செய்பவர்கள்
............................................
(அ)
பலனை
எதிர்பார்த்து
உதவி
செய்பவர்கள்
:
பலனை எதிர்பார்த்து
உதவி செய்பவர்கள்
அனைவரும்
பிறருக்கு உதவி
செய்வதின் மூலம்
தனக்கு - அந்த
செயலில் ஏதாவது
நன்மை கிடைக்குமா
என்று எதிர்பார்த்து
உதவி செய்பவர்கள் ;
இவர்கள் அவ்வளவு
எளிதில் யாருக்கும்
உதவி செய்து
விட மாட்டார்கள் ;
ஒருவர் எவ்வளவு
தான் கஷ்டத்தில்
இருந்தாலும் ;
இக்கட்டான
சூழ்நிலையில்
இருந்தாலும் ;
உயிர் போகும்
நிலையில்
இருந்தாலும் ;
உதவி செய்யுங்கள்
என்று கஷ்டத்தில்
உதவி கேட்டாலும் ;
பலனை எதிர்பார்த்து
உதவி செய்பவர்கள்
உடனே ஓடோடி
வந்து உதவி செய்து
விட மாட்டார்கள் ;
பலனை எதிர்பார்த்து
உதவி செய்பவர்கள்
சுயநலம்
கொண்டவர்களாகத்
தான் இருப்பார்கள் ;
தான் வாழ
வேண்டும்
தனது குடும்பம்
வாழ வேண்டும்
தனது சந்ததிகள்
வாழ வேண்டும்
என்று சுயநலத்துடன்
வாழ்ந்து
கொண்டிருப்பவர்கள் ;
தன்னைப் பற்றியும்
தன்னுடைய
குடும்பத்தைப் பற்றியும்
தன்னுடைய
சந்ததிகளைப் பற்றியும்
மட்டுமே
நினைப்பவர்களால்
பலனை எதிர்பார்க்காமல்
யாருக்கும்
எந்த நிலையிலும்
எந்த காலத்திலும்
உதவிகள் செய்ய
முடியாது.
-------என்றும் அன்புடன்
--------எழுத்தாளர்
K.பாலகங்காதரன்
-------18-04-2021
//////////////////////////////////////////
No comments:
Post a Comment