April 18, 2021

பதிவு-5-தேறற்க- திருக்குறள்

 பதிவு-5-தேறற்க-

திருக்குறள்

 

அறிவுரை

சொல்பவர்களின்

அனுபவங்களை

கேட்டுக் கொண்டு

நமக்கும் இப்படித் தான்

நடைபெறும் என்று

நாமும் நினைத்து

விட்டால் நம்மால்

நம்முடைய

வாழ்க்கையில் - எந்த

ஒரு செயலையும்

செய்ய முடியாது

 

யார் எந்த

அறிவுரைகளை

வழங்கினாலும் சரி

(அல்லது)

இந்த உலகமே

திரண்டு வந்து

அறிவுரை

வழங்கினாலும் சரி

அவர்கள் சொல்லும்

அனைத்து

அறிவுரைகளையும்

கேட்டாலும் நாம்

எடுக்கும் முடிவே

இறுதி முடிவாக

இருக்க வேண்டும்.

 

அதனால் யார்

சொன்னாலும்

அறிவுரையைக்

கேட்டுக் கொள்ளுங்கள்

அதனை பின்பற்ற

வேண்டுமா

(அல்லது)

பின்பற்ற

வேண்டாமா

என்பதை நாம்

தான் முடிவு

செய்ய வேண்டும்

 

மூன்று :

“குறை சொல்பவர்கள்”

 

அறிவுரை

சொல்பவர்களுக்கும்

குறை

சொல்பவர்களுக்கும்

ஒரே ஒரு

வித்தியாசம்

தான் உண்டு

 

அறிவுரை சொல்பவர்கள்

நாம் நன்றாக

இருக்க வேண்டும்

என்ற காரணத்திற்காக

அறிவுரை

சொல்வார்கள்

ஆனால்

குறை சொல்பவர்கள்

நாம் நன்றாக

இருக்கிறோமே

என்ற காரணத்திற்காக

குறை சொல்வார்கள்

 

குறை சொல்பவர்களும்

அறிவுரை

சொல்பவர்களைப் போல்

களத்தில் இறங்கி

வேலை செய்ய

மாட்டார்கள்

பேச்சோடு நிறுத்தி

கொள்வார்கள்

 

குறை சொல்பவர்கள்

இரண்டு காரணத்திற்காக

மட்டும் தான்

குறை சொல்வார்கள்

 

தன்னால் செய்ய

முடியாததை நாம்

செய்து விட்டோமே

என்ற பொறாமையினால்

குறை சொல்வார்கள்

நாம் செய்த செயலால்

நாம் வாழ்க்கையில்

உயர்ந்து விடுவோமோ

என்ற காரணத்திற்காக

குறை சொல்வார்கள்

 

குறை சொல்பவர்கள்

மிகவும் ஆபத்தானவர்கள்

அவர்களை அருகிலேயே

சேர்க்காமல் இருப்பது

நம்முடைய

வாழ்க்கைக்கும் நல்லது

நம்முடைய

குடும்பத்திற்கும் நல்லது

நம்முடைய

முன்னேற்றத்திற்கும்

நல்லது

 

நாம் வாழ்க்கையில்

நன்றாக இருக்க

வேண்டும் என்றால்

நாம் வாழ்க்கையில்

முன்னேற வேண்டும்

என்றால்

நாம் வாழ்க்கையில்

நினைத்ததை

அடைய வேண்டும்

என்றால்

குறை சொல்பவர்களின்

வார்த்தைகளை

மதிக்கவே கூடாது

 

குறை சொல்பவர்கள்

கெட்ட எண்ணம்

கொண்டவர்களாக

இருப்பார்கள் ;

தன்னை விட

உயர்ந்தவர்கள் யாரும்

இல்லை என்று

நினைப்பவர்களாக

இருப்பார்கள் ;

தங்களை விட

திறமைசாலி

யாரும் இல்லை

என்ற சிந்தனை

கொண்டவர்களாக

இருப்பார்கள் ;

தன்னைப் பற்றியும்

தன்னுடைய குடும்ப

நலத்தைப் பற்றியும்

தன்னுடைய

சந்ததிகளைப்

பற்றியும் மட்டுமே

நினைக்கும் சுயநலம்

மிக்கவர்களாக

இருப்பார்கள் ;

யாரையும் மதித்து

நடக்க மாட்டார்கள் ;

அவர்களை

மதிப்பவர்களையும்

அவமானப் படுத்தும்

விதத்தில் நடந்து

கொள்வார்கள் ;

யாருடைய பேச்சுக்கும்

மரியாதை கொடுக்க

மாட்டார்கள் ;

யாருடைய பேச்சையும்

கேட்டு நடக்க

மாட்டார்கள் ;

பிறருடைய

திறமைக்கு மதிப்பு

கொடுக்க மாட்டார்கள் ;

பிறருடைய

உணர்வுகளுக்கு

மதிப்பு கொடுக்க

மாட்டார்கள் ;

நல்லவர்களாக

நடிப்பார்கள் ;

தங்களை இந்த

சமுதாயத்தில்

நல்லவர்களாக

காட்டிக் கொள்வார்கள் ;

உண்மை பேசுபவர்களாக

நடிப்பார்கள் ;

பிறருக்கு உதவிகள்

செய்வதாக நடிப்பார்கள் ;

அன்பு செய்வதாக

நடிப்பார்கள் ;

இரக்க சுவாவம்

உள்ளவர்களாக

தங்களை காட்டிக்

கொள்வார்கள் ;

கருணை உள்ளம்

கொண்டவர்களாக

தங்களை

வெளிப்படுத்திக்

கொள்வார்கள் ;

ஆணவத்தால்

ஆடுபவர்களாக

இருப்பார்கள் ;

சுருக்கமாகச்

சொல்ல வேண்டும்

என்றால்

குறை சொல்பவர்கள்

தங்களை விட

உயர்ந்தவர்கள் யாரும்

இல்லை என்ற

எண்ணம்

கொண்டவர்களாக

இருப்பார்கள்

 

-------என்றும் அன்புடன்

--------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

-------18-04-2021

//////////////////////////////////////////

No comments:

Post a Comment