April 18, 2021

பதிவு-2-தேறற்க- திருக்குறள்

 பதிவு-2-தேறற்க-

திருக்குறள்

 

ஆதாயம் இல்லாமல்

எந்த ஒரு

உதவியையும் யாருக்கும்

செய்ய மாட்டார்கள் ;

உதவி செய்வதால்

தனக்கு பலன்

இல்லை என்று

தெரிந்தால் உதவி

செய்ய மாட்டார்கள் ;

உதவி செய்வதால்

தனக்கு ஒரு

உபயோகமும்

இல்லை என்று

முடிவு எடுத்தால்

உதவி செய்ய

மாட்டார்கள் ;

 

உதவி செய்வதற்கு

முன்னர் பலவிதங்களில்

ஆராய்ச்சி செய்வார்கள் ;

பலரை கலந்து

ஆலோசித்து

முடிவு எடுப்பார்கள் ;

பல நிலைகளில்

ஆராய்ச்சி செய்து

யோசித்து முடிவு

எடுப்பார்கள் ;

உதவி செய்யுங்கள்

என்று கேட்டு

வருபவர்களிடம்

பல கேள்விகளைக்

கேட்பார்கள்

உதவி கேட்டவரே

ஏன் கேட்டோம் என்ற

மன வேதனைப்

படும் வகையில்

செயல்படுவார்கள் ;

 

இத்தகையவர்கள்

ஆபத்தானவர்கள்

இவர்களை அருகில்

வைத்துக் கொள்வதும்

இத்தகையவர்களிடம்

உதவிகள் கேட்பதும்

ஆபத்தானது

அபாயகரமானது

 

இவர்கள் உதவிகள்

செய்ய முடிவெடுத்து

உதவிகள் செய்ய

வேண்டும் என்றால்

அவர்களுடைய

வாழ்க்கை முன்னேற்றம்

அடையும் விதத்தில்

இருக்க வேண்டும்

அவர்களுடைய பெயர்

அனைவருடைய

மனதிலும் பதிய

வேண்டும் என்ற

எண்ணத்தில் மட்டுமே

உதவிகள் செய்வார்கள்

இத்தகைய ஒரு

நிலை இருந்தால்

மட்டுமே உதவிகள்

செய்வார்கள்.

 

பலனை எதிர்பார்த்து

உதவிகள்

செய்பவர்களால்

நமக்கு எந்தவிதமான

உபயோகமும் இல்லை

அவர்களை நட்பு

வட்டாரத்திலோ

(அல்லது)

உறவினர்

வட்டாரத்திலோ

(அல்லது)

சுற்றத்தினர்

வட்டாரத்திலோ

வைத்துக் கொள்வது

நல்லது இல்லை

அவர்களை

நம்முடன் வைத்துக்

கொள்வதால் நமக்கு

வாழ்க்கையில்

கெட்ட விளைவுகள்

தான் ஏற்படும்.

 

பலனை எதிர்பார்த்து

உதவி செய்பவர்கள்

அவ்வளவு எளிதில்

யாருக்கும் உதவி

செய்ய மாட்டார்கள்

ஆனால்

நம்மை வைத்து

நம்முடைய

திறமையை வைத்து

நம்முடைய பிரபலத்தை

ஆதாரமாக வைத்து

நம்முடைய

முன்னேற்றத்தை

அடிப்படையாக வைத்து

அவர்கள் முன்னேற

பார்ப்பார்கள்

 

இத்தகைய தன்மைகளை

உடையவர்கள் தான்

பலனை  எதிர்பார்த்து

உதவி செய்பவர்கள்

 

(ஆ) “பலனை

எதிர்பார்க்காமல்

உதவி செய்பவர்கள்”

 

பலனை எதிர்பார்க்காமல்

உதவி செய்பவர்கள்

நமக்கு கிடைத்தால்

நம்மை விட

புண்ணியம்

செய்தவர்கள் யாரும்

இருக்க முடியாது

 

அது நண்பர்களாக

இருந்தாலும் சரி ;

உறவினர்களாக

இருந்தாலும் சரி ;

சுற்றத்தினராக

இருந்தாலும் சரி ;

நாம் அறிந்தவர்களாக

இருந்தாலும் சரி ;

நாம் அறியாதவர்களாக

இருந்தாலும் சரி ;

பலனை எதிர்பார்க்காமல்

உதவி செய்பவர்கள்

நமக்கு கிடைத்தால்

நம்முடைய வாழ்க்கையில்

நாம் பெற்றிருந்தால்

நம்முடைய

வாழ்க்கையில்

அவர்கள் ஒரு

அங்கமாக இருந்தால்

நம்மை விட

அதிர்ஷ்டசாலி

யாரும் இல்லை

என்று சொல்லலாம்

 

பலனை எதிர்பார்க்காமல்

உதவி செய்பவர்கள்

நமக்கு உதவி

தேவைப்படும் போதும் ;

நாம் கஷ்டத்தில்

இருக்கும் போதும் ;

நாம் கவலையில்

இருக்கும் போதும் ;

நாம் எதுவும்

செய்ய முடியாத

நிலையில்

இருக்கும் போதும் ;

நாம் இறக்கும்

தருவாயில்

இருக்கும் போதும் ;

நம்மால் எதுவும்

செய்ய முடியாத

நிலையில்

இருக்கும் போதும் ;

நாம் அனைத்தையும்

இழந்து அதரவற்ற

நிலையில்

இருக்கும் போதும் :

நம்மால் எதுவும்

செய்ய முடியாத

வருத்தம் அடைந்த

நிலையில்

இருக்கும் போதும் ;

நம்மைச் சுற்றி

உள்ளவர்கள்

அனைவரும் நம்மை

கைவிட்ட நிலையில்

இருக்கும் போதும் ;

தன்னந்தனியாக

ஆதரவற்ற நிலையில்

இருக்கும் போதும் ;

இறப்பின் வாசலை

தொட்டுக் கொண்டு

இருக்கும் போதும் ;

பலனை எதிர்பார்க்காமல்

உதவி செய்பவர்கள்

தான் ஓடி வந்து

நமக்கு உதவி

செய்வார்கள்.

 

-------என்றும் அன்புடன்

--------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

 

-------18-04-2021

//////////////////////////////////////////

No comments:

Post a Comment