பதிவு-3-தேறற்க-
திருக்குறள்
அது மட்டுமல்ல
பலனை எதிர்பார்க்காமல்
உதவி செய்பவர்கள்
தான்
நாம் வாழ்வதற்கான
வழியை ஏற்படுத்தித்
தருவார்கள் ;
விழுந்து
கொண்டிருக்கும் போது
நம்மைத்
தாங்கிப் பிடிப்பார்கள் ;
வீழ்ந்த பின்னர்
வீழ்ந்த வாழ்க்கையை
மீட்டுத் தருவார்கள் ;
துயரத்தின்
துன்ப நிலைகளும்
கஷ்டத்தின்
கண்ணீர் நிலைகளும்
சோதனையின்
சோக நிலைகளும்
நம்மை தாக்கும்
போதெல்லாம்
தோள் கொடுக்கும்
துணையாக இருப்பார்கள் ;
வாழ்க்கையை
உயர்த்தி விட
முயற்சி செய்வார்கள் ;
நாம் இழந்ததை
மீட்டுத் தருவார்கள் ;
கஷ்டமான
சூழ்நிலைகளில் எல்லாம்
நம் கூடவே இருந்து
நமக்கு உதவி
செய்வார்கள் ;
பலனை எதிர்பார்க்கமால்
உதவி செய்பவர்கள்
பிறருக்கு உதவி
செய்வதன் மூலம்
தனக்கு என்ன
கிடைக்கும் என்று
எதிர்பார்க்க மாட்டார்கள் ;
இந்த பலன் கிடைக்கும் ;
இந்த நிலை
தனக்கு கிடைக்கும் ;
இந்த புகழ்
தனக்கு கிடைக்கும் ;
இதனால் தன்னுடைய
வாழ்க்கை உயரும் ;
இந்த உதவியை
இவருக்கு செய்வதால்
தன்னுடைய வாழ்க்கை
வளம் பெறும் ;
செல்வம் பெருகும் ;
வாழ்க்கை வளங்கள்
எல்லாம் கிடைக்கும் ;
மகிழ்ச்சி பொங்கும் ;
இன்பங்கள் விளையாடும் ;
என்று எதிர்பார்த்து
எந்த உதவியையும்
செய்ய மாட்டார்கள்.
நமக்கு ஒரு துன்பம்
வரும் போது
நாம் சென்று
உதவி செய்யுங்கள்
என்று பலனை
எதிர்பார்க்காமல்
உதவி செய்பவர்களை
கேட்க வேண்டிய
அவசியம் இல்லை
ஏனென்றால் - நாம்
துன்பப்படுகிறோம்
என்பதை அறிந்தாலே
போதும் அவர்கள்
ஓடோடி வந்து
உதவிகள் செய்வார்கள்
நம்முடைய நிலையை
உணர்ந்து
அவர்களாகவே வந்து
உதவிகள் செய்வார்கள்
இத்தகையவர்கள்
மட்டும் தான்
தான் வாழ
வேண்டும்
தன்னுடைய
குடும்பம் வாழ
வேண்டும்
தன்னுடைய
சந்ததிகள் வாழ
வேண்டும் என்று
சுயநலத்துடன்
இருக்க மாட்டார்கள்
சுயநலம் அற்று
இருப்பார்கள்
பொது நலம்
கொண்டு இருப்பார்கள்
தன்னைச்
சுற்றியுள்ளவர்கள்
நன்றாக இருக்க
வேண்டும்
தன்னை நம்பியவர்கள்
நன்றாக இருக்க
வேண்டும்
கஷ்டப்படுகிறவர்கள்
நன்றாக இருக்க
வேண்டும்
என்று நினைப்பார்கள்
தன்னால் எந்த
உதவியை செய்தால்
கஷ்டப்படுகிறவர்களுடைய
கஷ்டம் தீரும் என்று
சிந்தித்து பலனை
எதிர்பார்க்காமல்
உதவிகள் செய்து
வாழ்ந்து
கொண்டிருப்பார்கள்
பலனை எதிர்பார்க்காமல்
உதவி செய்பவர்கள்
இவர்களால்
மட்டும் தான்
சமுதாயத்தை
நினைக்க முடியும்
சமுதாயத்தில்
உள்ள மக்களை
நினைக்க முடியும்
பலனை எதிர்பார்க்காமல்
உதவி செய்பவர்கள்
மட்டும் தான்
காலத்தால் அடித்து
செல்லப்படாமல்
காலத்தால் அழிந்து
போகாமல்
சரித்திரம் படைத்து
காலத்தை வென்று
நிற்க முடியும்
சாதனைகளை
படைக்க முடியும்
வாழ்க்கையை
அனுபவிக்க
வேண்டும் என்று
நினைப்பவர்களாலும்
இறப்பை கண்டு
பயப்படுகிறவர்களாலும்
சாதனைகளை
படைக்க முடியாது
நாம் எந்த ஒரு
செயலைச் செய்ய
தொடங்கினாலும்
(அல்லது)
நாம் எந்த ஒரு
செயலைச் செய்து
கொண்டிருந்தாலும
(அல்லது)
நாம் எந்த ஒரு
செயலையும் செய்து
முடித்திருந்தாலும்
நமக்கு உறுதுணையாக
இருந்து உதவிகள்
செய்வது பலனை
எதிர்பார்க்கமால்
உதவி செய்பவர்கள்
மட்டுமே
இத்தகைய தன்மையை
உடையவர்கள் தான்
பலனை எதிர்பார்க்காமல்
உதவிகள் செய்பவர்கள்
-------என்றும் அன்புடன்
--------எழுத்தாளர்
K.பாலகங்காதரன்
-------18-04-2021
//////////////////////////////////////////
No comments:
Post a Comment