பதிவு-4-தேறற்க-
திருக்குறள்
இரண்டு
:
“அறிவுரை சொல்பவர்கள்”
அறிவுரை சொல்பவர்கள்
களத்தில் இறங்கி
வேலை செய்யாதவர்கள்
பேச்சில் மட்டும்
அறிவுரை சொல்பவர்கள்
பேசுவதோடு நிறுத்தி
கொள்பவர்கள்
அறிவுரை சொல்பவர்கள்
அனைவருமே
தாங்கள் புத்தகத்தில்
படித்ததையும் ;
தாங்கள்
கேள்விப் பட்டதையும் ;
தங்கள் வாழ்க்கையில்
நடந்ததையும் ;
தன்னைச் சுற்றி
வாழ்பவர்களுடைய
வாழ்க்கையில்
நடந்ததையும்;
தனக்கு தெரிந்தவர்கள்
வாழ்க்கையில்
நடந்ததையும் ;
தனக்கு தெரியாதவர்கள்
வாழ்க்கையில்
நடந்ததையும் ;
அடிப்படையாக
வைத்துத் தான்
அறிவுரை
சொல்வார்கள்.
ஒரு நிகழ்ச்சியின்
விளைவானது
இடம்
காலம்
சூழ்நிலை
தொடர்பு
கொள்ளும் பொருள்
தொடர்பு
கொள்ளும் மனிதர்
கர்மவினை
ஆகியவற்றைப்
பொறுத்து தான்
நடைபெறும்
அன்று ஒருவருடைய
வாழ்க்கையில்
நடந்த நிகழ்ச்சியும்
இன்று நம்முடைய
வாழ்க்கையில்
நடைபெற்றுக்
கொண்டிருக்கின்ற
நிகழ்ச்சியும்
ஒரே மாதிரியாக
இருக்கின்ற
காரணத்தினால்
நிகழ்ச்சியின்
விளைவும் ஒரே
மாதிரியாகத் தான்
இருக்கும் என்று
நினைக்கக் கூடாது
நிகழ்ச்சிகள்
அனைத்தும்
ஒரே மாதிரியாக
இருந்தாலும்
விளைவுகள்
வெவ்வேறாகத்
தான் இருக்கும்
இந்த உண்மையினை
உணராமல் வேறு
ஒருவருடைய
வாழ்க்கையில்
நடந்த நிகழ்ச்சியும்
நம்முடைய
வாழ்க்கையில்
நடைபெற்றுக்
கொண்டிருக்கின்ற
நிகழ்ச்சியும்
ஒரே மாதிரியாக
இருப்பதால்
இதனை கவனித்துக்
கொண்டிருக்கும்
அறிவுரை சொல்பவர்கள்
நிகழ்ச்சிகள்
ஒரே மாதிரியாக
இருப்பதால்
விளைவும்
ஒரே மாதிரியாகத்
தான் இருக்கும்
என்று தவறான
எண்ணம் கொண்டு
அறிவுரை சொல்வார்கள்
அறிவுரை சொல்பவர்கள்
நாம் ஒரு செயலில்
ஈடுபடும் போது
அறிவுரை
சொல்பவர்கள்
அவர் வாழ்வில் கற்ற
(அல்லது)
அவர் வாழ்வில் பெற்ற
நிகழ்ச்சியின்
விளைவை
வைத்துத் தான்
அறிவுரை சொல்வார்கள்
ஒரு காலத்தில்
தோல்வியில் முடிந்த
நிகழ்ச்சியின்
விளைவானது
இன்னொரு காலத்தில்
வெற்றி அடையும்
ஒரு காலத்தில்
வெற்றியில் முடிந்த
நிகழ்ச்சியின்
விளைவானது
இன்னொரு காலத்தில்
தோல்வி அடையும்
எல்லா காலத்திலும்
நிகழ்ச்சியின்
விளைவானது
வெற்றி பெறும்
என்றோ
தோல்வி அடையும்
என்றோ சொல்ல
முடியாது
ஏனென்றால்
நிகழ்ச்சியின்
விளைவானது
எல்லா காலத்திலும்
ஒரே மாதிரியாக
இருக்காது
இருக்க முடியாது
மாறிக் கொண்டே
இருக்கும்
ஒரு நிகழ்ச்சியின்
விளைவானது
இடம்
காலம்
சூழ்நிலை
தொடர்பு
கொள்ளும் பொருள்
தொடர்பு
கொள்ளும் மனிதர்
கர்மவினை
ஆகியவற்றைப்
பொறுத்து
மாறிக் கொண்டே
இருக்கும்
ஒரே மாதிரியாக
இருக்காது என்பதை
உணராமல் இருக்கும்
அறிவுரை சொல்பவர்கள்
நிகழ்ச்சியின்
விளைவை
அடிப்படையாக வைத்து
அதை அனுபவமாக
கருதிக் கொண்டு
அறிவுரை சொல்லிக்
கொண்டு இருப்பார்கள்
-------என்றும் அன்புடன்
--------எழுத்தாளர்
K.பாலகங்காதரன்
-------18-04-2021
//////////////////////////////////////////
No comments:
Post a Comment