பதிவு-1-நிலைமக்கள்-
திருக்குறள்-
"நிலைமக்கள்
சால
உடைத்தெனினும்
தானை
தலைமக்கள்
இல்வழி இல்"
-------திருக்குறள்
-------திருவள்ளுவர்
"சிறந்த வீரர்கள்
அதிகம் இருந்தாலும்
படைக்கு நல்ல
தலைவன் இல்லை
என்றால் அந்தப்
படை போரில்
நிலைத்து நிற்காது"
என்பதே இந்தத்
திருக்குறளுக்கு
பொதுவாக
சொல்லப்படும்
கருத்து.
இந்தத் திருக்குறளுக்கு
கீழ்க்கண்டவாறும்
விளக்கம் சொல்லலாம்
"பல்வேறு
திறமைகள்
படைத்த
இலட்சக்கணக்கான
தொண்டர்கள்
இருந்தாலும்
அவர்களை
வழிநடத்திச்
செல்லும் தலைவர்
தலைவருக்கென்று
உள்ள தனிப்பட்ட
ஐந்து தகுதிகளைப்
பெற்றவராக
இல்லை என்றால்
இலட்சக்கணக்கான
தொண்டர்களை
வைத்துக்
கொண்டிருந்தாலும்
அந்த தலைவரால்
எந்த ஒரு
செயலிலும் வெற்றி
பெற முடியாது"
மேற்கண்ட
விளக்கத்தினை
கீழ்க்கண்டவாறு
தெளிவாகக் காணலாம்.
தலைவராக இருப்பது
அவ்வளவு எளிதான
விஷயமல்ல ;
எல்லோராலும்
தலைவராக
இருக்க முடியாது
.
தலைவராக
இருக்க வேண்டும்
என்றால்
அதற்கென்று
தனிப்பட்ட தகுதிகள்
இருக்கின்றன.
தலைவருக்கென்று
வரையறுக்கப்பட்ட
தனிப்பட்ட தகுதிகள்
இல்லாதவர்களால்
தலைவராக
இருக்க முடியாது.
எந்த ஒரு
பள்ளியாக
இருந்தாலும்
சரி ;
எந்த ஒரு
கல்லூரியாக
இருந்தாலும்
சரி ;
எந்த ஒரு
நிறுவனமாக
இருந்தாலும்
சரி ;
எந்த ஒரு
அறக்கட்டளையாக
இருந்தாலும்
சரி ;
எந்த ஒரு
அமைப்பாக
இருந்தாலும்
சரி ;
எந்த ஒரு
துறையாக
இருந்தாலும்
சரி ;
எந்த ஒரு
கட்சியாக
இருந்தாலும்
சரி ;
எந்த ஒரு
ஊராக
இருந்தாலும்
சரி ;
எந்த ஒரு
நாடாக
இருந்தாலும்
சரி ;
வரலாற்றில்
யாராலும்
செய்யமுடியாத
சாதனைகள்
பல படைத்த
தலைவர்களாக
இருந்தாலும்
சரி ;
காலம் என்னும்
ஆற்றில் அடித்துச்
செல்லப் படாமல்
மக்கள் மனதில்
இன்றும்
அழியாமல் வாழ்ந்து
கொண்டிருக்கும்
தலைவர்களாக
இருந்தாலும்
சரி ;
தற்போது
உலக அளவில்
மக்களை வழி
நடத்திச் சென்று
கொண்டிருக்கும்
தலைவர்களாக
இருந்தாலும்
சரி ;
எந்தத்
தலைவர்களாக
இருந்தாலும்
சரி ;
அந்தத் தலைவர்களை
நன்றாக
உற்று நோக்கி
ஆராய்ந்து பார்த்தால்
தலைவருக்கென்று
உள்ள தனிப்பட்ட
தகுதிகளை அவர்கள்
பெற்றிருப்பதை
உணர்ந்து கொள்ளலாம்.
தலைவராக
இருப்பதற்குரிய
தனிப்பட்ட தகுதிகள்
இல்லாமல்
யாராலும் தலைவராக
இருக்க முடியாது.
தலைவராக
இருப்பதற்குரிய
தகுதிகள்
இருந்தால் மட்டுமே
தலைவராக
இருக்க முடியும்.
-------என்றும் அன்புடன்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------30-09-2021
////////////////////////////////////////////////
No comments:
Post a Comment