பதிவு-6-நிலைமக்கள்-
திருக்குறள்-
"என்னைப்
பொறுத்தவரை
அப்போது எனக்கு
ஏற்பட்ட
மிகப்பெரிய
மிகக் கொடிய
தரும சங்கடம்
வேறு எவருக்கும்
ஏற்பட்டதில்லை
என்று சொல்வது
மிகையாகாது.
எவரையும்
திக்குமுக்காட
வைக்கும்
நிலைமை அது.
இரு மாற்று
வழிகளில்
ஒன்றைத்
தேர்ந்தெடுக்க
வேண்டியவனாய்
இருந்தேன்.
பொதுவான
மனிதத்
தன்மையான
ஒருவன் என்ற
முறையில்
நிச்சய
மரணத்திலிருந்து
காந்தியைக்
காப்பாற்ற
வேண்டிய
கடமை
எனக்கிருந்தது.
தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு
தலைமை
அமைச்சர்
வழங்கிய
அரசியல்
உரிமைகளைக்
காப்பாற்ற
வேண்டிய
சிக்கலும்
எனக்கிருந்தது.
நான் மனிதத்
தன்மையின்
அறைகூவலை
ஏற்றுக்
காந்தியாரின்
உயிரைக்
காப்பாற்றுவதற்காக
அவருக்கு
மனநிறைவு
தரக்கூடிய
விதத்தில்
வகுப்பு
நலத் தீர்ப்பை
மாற்றியமைக்க
உடன் பட்டேன்."
என்பது
அம்பேத்கர் மன
வருத்தத்துடன்
வெளிப்படுத்திய
வார்த்தைகள்
1932-ம் ஆண்டு
செப்டம்பர் மாதம்
24-ம் தேதி
பூனா ஒப்பந்தம்
ஏற்பட்டது.
தாழ்த்தப்பட்ட
மக்கள்
சார்பாக
அம்பேத்கரும்,
சாதி இந்துக்களின்
சார்பாக
பண்டித
மதன் மோகன்
மாளவியாவும்
கையெழுத்து
இட்டார்கள்.
இராச
கோபாலாச்சாரி,
இராசேந்திரப்
பிரசாத்,
எம்.சி.ராஜா
போன்ற
தலைவர்களும்
ஒப்பந்தத்தில்
கையெழுத்து
இட்டனர்.
இதனைத்
தொடர்ந்து
காந்தி
சாகும் வரை
உண்ணாவிரதப்
போராட்டத்தைக்
கைவிட்டார்.
காந்தியின்
சாகும் வரை
உண்ணாவிரதப்
போராட்டம்
1932-ம் தேதி
செப்டம்பர் மாதம்
24-ம் தேதி
முடிவடைந்தது.
இரட்டை
வாக்குரிமை
என்ற வகுப்பு
நலத் தீர்ப்பு
தந்த
அழுத்தமான
உரிமைகளை
பூனா ஒப்பந்தம்
பறித்து விட்டது
என்றே
அம்பேத்கர்
கருதினார்
காந்தியின்
சாகும்வரை
உண்ணாவிரதப்
போராட்டம்
1932-ம் ஆண்டு
செப்டம்பர்
மாதம்
20-ம் தேதி
தொடங்கி
24-ம் தேதியுடன்
முடிவடைந்த
அந்த
நான்கு
நாட்கள்
அம்பேத்கர்
வாழ்வில்
மறக்க
முடியாத
நாட்கள்
மட்டுமல்ல,
இந்தியாவின்
வரலாற்றில்
அழிக்க
முடியாத
நாட்களும் கூட
என்று வரலாறு
பதிவு
செய்திருக்கிறது.
-------என்றும் அன்புடன்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------30-09-2021
////////////////////////////////////////////////
No comments:
Post a Comment