பதிவு-5-நிலைமக்கள்-
திருக்குறள்-
காந்தியின்
உடல்நிலை மிகவும்
மோசமடைந்ததால்
காந்தியின் உயிருக்கு
ஏதேனும் நேர்ந்தால்
தன்னுடைய மக்களின்
உயிருக்கு
ஆபத்து ஏற்படும்.
தாழ்த்தப்பட்ட மக்கள்
இந்தியாவில்
வாழ முடியாத
சூழ்நிலை ஏற்படும்.
தன்னுடைய மக்கள்
தாக்கப்படுவார்கள்.
கொடுமைப்
படுத்தப் படுவார்கள்
என்று அடுத்து
நடக்கக்கூடிய
நிகழ்வுகளை நினைத்து
வருத்தப்பட்டடார்
அம்பேத்கர்.
காந்தியடிகளின்
உயிரைக் காப்பாற்ற
வேண்டிய கடமை
ஒரு புறம்,
தாழ்த்தப்பட்ட மக்களின்
நலனைக் காக்க
வேண்டிய பொறுப்பு
மறு புறம்
என்ன செய்வது
என்று தெரியாமல்
என்ன முடிவு
எடுக்க வேண்டும்
என்று தெரியாமல்
இருதலைக் கொள்ளி
எறும்பின் நிலைக்கு
ஆளானார் அம்பேத்கர்.
காந்தியின்
சாகும்வரை
உண்ணாவிரதத்தால்
அடுத்தடுத்து
நடந்த நிகழ்வுகள்
அனைத்தையும் தனி
ஒருவராக நின்று
அனைத்தையும்
சமாளித்தார்
டாக்டர்.அம்பேத்கர்.
தலைவருக்குரிய
அனைத்தையும்
சமாளிக்கும்
திறனானது
டாக்டர்.அம்பேத்கரிடம்
இவ்வாறு
வெளிப்பட்டது.
தங்களுடைய
அடிப்படை
உரிமைகளைப்
பெற்றுத் தர
அம்பேத்கர்
ஒருவரால் தான்
முடியும் என்றும் ;
தங்களை அடிமை
நிலையில் இருந்து
மீட்டு எடுத்து
சுதந்திரமாக
இந்த சமுதாயத்தில்
வாழ வைக்க
அம்பேத்கர்
ஒருவரால் தான்
முடியும் என்றும் ;
இந்தியா முழுவதும்
உள்ள அனைத்து
தாழ்த்தப்பட்ட
மக்களும் நினைத்த
காரணத்தினால்
அனைத்து
தாழ்த்தப்பட்ட
மக்களும்
அம்பேத்கரை
தாழ்த்தப்பட்ட
மக்களின் தலைவராக
ஏற்றுக் கொண்டு
அவர் இடும்
கட்டளைக்கு
காத்துக் கொண்டு
இருந்தனர்.
டாக்டர்.அம்பேத்கரின்
கட்டளையை ஏற்று
செயல்பட்டனர்.
தாழ்த்தப்பட்ட மக்கள்
அனைவரும்
டாக்டர்.அம்பேத்கர்
தலைமையின் கீழ்
ஒற்றுமையாக
ஒருவருக்கொருவர்
சண்டை போடாமல்
அம்பேத்கரின்
வார்த்தைக்குக்
கட்டுப்பட்டு
நடந்தனர்.
அம்பேத்கர்
உதிர்க்கும் வார்த்தைகள்,
செயல்படுத்தும்
செயல்கள்,
எடுக்கும் முடிவுகள்,
தங்கள் நலனுக்காகத்
தான் இருக்கும்
என்பதை உணர்ந்த
தாழ்த்தப்பட்ட மக்கள்
அம்பேத்கர்
வார்த்தைக்கு
கட்டுப்பட்டு
செயலாற்றி வந்த
தாழ்த்தப்பட்ட மக்கள்,
அடுத்து அம்பேத்கர்
என்ன சொன்னாலும்
அதை செயல்படுத்தக்
காத்துக்
கொண்டிருந்தார்கள்.
தலைவருக்குரிய
அனைவரையும்
கட்டுப்படுத்தும்
திறமை
டாக்டர்.அம்பேத்கரிடம்
இவ்வாறு
வெளிப்பட்டது.
இந்நிலையில்
காந்தியின் உயிரை
காப்பாற்ற வேண்டிய
பொறுப்பும் ;
தாழ்த்தப்பட்ட
மக்களின்
நலனைக் காக்க
வேண்டிய பொறுப்பும் ;
அம்பேத்கருக்கு
இருந்தது.
காந்தியின் உயிரைக்
காப்பாற்ற வேண்டும்
என்ற
நோக்கத்துடனும்,
தாழ்த்தப்பட்ட
மக்களின்
உயிரைக் காப்பாற்ற
வேண்டும் என்ற
நோக்கத்துடனும்
இரட்டை
வாக்குரிமையைத்
திரும்பப் பெற்றார்
அம்பேத்கர்.
இந்த இக்கட்டான
சூழ்நிலையை
அம்பேத்கரே
கீழ்க்கண்டவாறு
தன்னுடைய
வார்த்தையின்
மூலம் சொல்கிறார்.
-------என்றும் அன்புடன்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------30-09-2021
////////////////////////////////////////////////
No comments:
Post a Comment