September 30, 2021

பதிவு-4-நிலைமக்கள்- திருக்குறள்-

 பதிவு-4-நிலைமக்கள்-

திருக்குறள்-

 

இந்த சமயத்தில்

பேசப்படும்

எந்த ஒரு

வார்த்தையும்

மிகப்பெரிய

விளைவுகளை

ஏற்படுத்தி விடும்

என்ற காரணத்தினால்

டாக்டர்.அம்பேத்கர்

நடக்கும் நிகழ்வுகளை

பொறுமையுடன்

கவனித்துக் கொண்டு

இருந்ததோடு

மட்டுமல்லாமல்

தன்னுடைய

மக்களுக்கு

நிகழ்த்தப்படும்

கொடுமைகளைக்

கண்டு உள்ளம்

குமுறினார்.

பொறுமையுடன்

இருப்பது தான்

சிறந்தது என்று

டாக்டர்.அம்பேத்கர்

பொறுமை காத்தார்.

 

தலைவருக்குரிய

பொறுமையானது

டாக்டர்.அம்பேத்கரிடம்

இவ்வாறு

வெளிப்பட்டது.

 

காந்தியின் ஆதரவாளர்கள்

அம்பேத்கர் வீடு

முன்பு கூடி

அம்பேத்கருக்கு

எதிராக முழக்கமிட்டனர்.

அம்பேத்கரை

தேசத் துரோகி

என்று தூற்றினர்.

எதற்கும் அஞ்சாமல்,

எதற்கும்

வருத்தப்படாமல்,

எதற்கும் களங்காமல்,

எதற்கும் துவண்டு

விடாமல்,

எதற்கும்

சோர்ந்து விடாமல்,

தன் மீது வீசப்பட்ட

ஏளனங்களையும்,

தன் மீது சுமத்தப்பட்ட

குற்றச் சாட்டுக்களையும்

சுமந்து கொண்டு

நிதானமாக செயல்பட்ட

அம்பேத்கர் தனது

நியாயமான

கொள்கையில்

உறுதியுடன்

பயணித்தார்.

 

நிதானத்துடன்

செயல்பட்ட அம்பேத்கர்

எரவாட சிறைக்கு

சென்று.

"காந்தி அவர்களே

உங்களுக்கு எங்கள்

மீது இரக்கம்

இல்லையா?" என்று

தமது பேச்சைத்

தொடங்கினார்.

 

"எனது உயிர்

அல்லது

இரட்டை

வாக்குரிமையை

திரும்பப் பெறும்

ஒப்பந்தம் இரண்டில்

எது என்பதை

நீங்கள் தான்

தீர்மானிக்க வேண்டும்"

என்று தனது பேச்சை

முடித்துக் கொண்டார்

காந்தியடிகள்.

 

நடக்கும் நிகழ்வுகளில்

உள்ள பிரச்சினையின்

வீரியத்தைப்

புரிந்து கொண்ட

அம்பேத்கர் உலகத்தில்

யாருக்கும்

இப்படி ஒரு நிலை

வந்திருக்காது என்று

வேதனைப்பட்ட

அம்பேத்கர் நிதானமாக

செயல்படுவது தான்

இப்போது முக்கியம்

என்பதை புரிந்து

கொண்டு நிதானமாகச்

செயல்பட்டார்.

 

தலைவருக்குரிய

நிதானமானது

டாக்டர்.அம்பேத்கரிடம்

இவ்வாறு

வெளிப்பட்டது.

 

காந்தியின்

உண்ணாவிரத

நிகழ்வை

மையமாக வைத்து

அம்பேத்கருக்கு

பல்வேறு தரப்பிலிருந்து

கடுமையான

அழுத்தங்கள் தரப்பட்டன.

 

பலகோடி மக்களின்

உரிமையைக் காட்டிலும்

காந்தியின் உயிர்

பெரியதன்று என்றும் ;

இரட்டை

வாக்குரிமையை

பறிக்கும்

எந்த ஒரு

ஒப்பந்ததிலும்

கையெழுத்து இட

வேண்டாம் என்றும் ;

காந்தியின் மிரட்டலுக்கு

பணிந்து தாழ்த்தப்பட்ட

மக்களுக்கு கிடைத்த

உரிமையை இழந்து

விடாதீர்கள் என்றும் ;

தந்தை பெரியார்

டாக்டர்.அம்பேத்கருக்கு

தந்தி அனுப்பினார்.

 

காந்தியின் சார்பில்

பல்வேறு தலைவர்கள்

டாக்டர்.அம்பேத்கரை

சந்தித்து இரட்டை

வாக்குரிமையை

கைவிடும்

ஒப்பந்தத்தில்

கையெழுத்திட

வேண்டும்

என்றும்

காந்தியின் உயிரைக்

காப்பாற்ற வேண்டும்

என்றும்

கேட்டுக் கொண்டார்கள்.

 

காந்தியின் மனைவி

கஸ்தூரிபாய் அவர்களும்

இரட்டை வாக்குரிமையை

கைவிட வேண்டும்

என்றும்

தனது கணவரின்

உயிரை காப்பாற்ற

வேண்டும்

என்றும்

கேட்டுக் கொண்டார்.

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------30-09-2021

////////////////////////////////////////////////

No comments:

Post a Comment