பதிவு-3-நிலைமக்கள்-
திருக்குறள்-
தாழ்த்தப்பட்ட மக்கள்
பசுவைப் போன்றவர்கள்,
அவர்களுக்கு
அரசியல் அதிகாரம்
என்னும் ஆசையைக்
காட்டுவது பாவம்,
தாழ்த்தப்பட்ட மக்களை
தாழ்த்தப்பட்ட மக்களே
தேர்ந்தெடுக்கும்
இந்த உரிமையானது
இந்துக்களை
தீண்டத்தகாத இந்துக்கள்
என்றும்
சாதி இந்துக்கள்
என்றும்
இரு பிரிவாக
பிரித்து விடுவதற்கு
காரணமாகி விடும்
எனவே, அந்த
அரசியல் அறிவிப்பை
ரத்து செய்ய
வேண்டும் என்று
1932-ம் ஆண்டு
செப்டம்பர் மாதம்
20-ம் தேதி பூனேவில்
உள்ள எரவாடா
சிறையில் உப்பு
கலந்த வெந்நீரை
அருந்தியபடி
சாகும் வரை
காந்தியடிகள்
உண்ணாவிரதத்தைத்
தொடங்கினார்.
காந்தியடிகள்
களைப்படையக் கூடாது
என்று சிறைக்குள்
ராம பஜனை
பாடல்களை
வெளியில் இருந்து
வந்த தொண்டர்கள்
பாடியபடி இருந்தனர்.
தாகூர் வந்து
கவிதை படித்தார்.
தலைவர்கள் வருவதும்
போவதுமாக இருந்தனர்.
இதனால் இந்தியா
காந்தியின் ஆதரவாளர்கள்,
டாக்டர்.அம்பேத்கரின்
ஆதரவாளர்கள் என்று
இரண்டாகப்
பிரிந்து நின்றது.
இந்தியாவின்
வரலாற்றை
எடுத்துக் கொண்டால்
இந்தியா முழுவதும்
மக்களின்
ஆதரவைப் பெற்று
மக்கள் மத்தியில்
செல்வாக்குப் பெற்ற
இரண்டு
தலைவர்கள் மோதிக்
கொண்டபோது
இந்தியா
இரண்டு பிரிவாக
பிரிந்து நின்றது
இரண்டே
இரண்டு
நிகழ்வுகளில் தான்
ஒன்று
:
காந்திக்கும்,
டாக்டர்.அம்பேத்கருக்கும்
கருத்து வேறுபாடு
ஏற்பட்ட போது
காந்தியின்
ஆதரவாளர்கள்
என்றும்
டாக்டர்.அம்பேத்கரின்
ஆதரவாளர்கள்
என்றும்
இந்தியா
இரண்டாகப்
பிரிந்து நின்றது.
இரண்டு
:
காந்திக்கும்,
சுபாஷ் சந்திர
போஸிற்கும்
கருத்து வேறுபாடு
ஏற்பட்ட போது
காந்தியின்
ஆதரவாளர்கள்
என்றும்
சுபாஷ்
சந்திர போஸின்
ஆதரவாளர்கள்
என்றும்
இந்தியா இரண்டாகப்
பிரிந்து நின்றது
இந்தியா
காந்தியின்
ஆதரவாளர்கள்
என்றும்
டாக்டர்.அம்பேத்கரின்
ஆதரவாளர்கள்
என்றும்
இரண்டாகப்
பிரிந்து நின்ற
காரணத்தினால்
தாழ்த்தப்பட்ட மக்கள்
மீது கடுமையான
தாக்குதல்கள்
வன்முறைகள்
கட்டவிழ்த்து
விடப்பட்டன.
கொலைவெறி
தாக்குதல்கள்
தொடுக்கப்பட்டன.
தாழ்த்தப்பட்ட
மக்களின் மரண
ஓலங்கள் இந்தியா
முழுவதும்
எதிரொலித்தது.
தாழ்த்தப்பட்ட மக்களின்
இரத்தத்தால்
இந்தியா இரத்தச்
சிவப்பாக மாறியது.
இந்த மரண
ஓலங்கள் காந்தியின்
ஆதரவாளர்களின்
மனதில் எந்தவிதமான
மனிதாபிமானத்தையும்
ஏற்படுத்தவில்லை.
காந்தியின்
ஆதரவாளர்களுக்கு
காந்தியின் உயிரானது
காக்கப்பட வேண்டும்
என்பதே முக்கிய
எண்ணமாக இருந்தது.
-------என்றும் அன்புடன்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------30-09-2021
////////////////////////////////////////////////
No comments:
Post a Comment