September 30, 2021

பதிவு-2-நிலைமக்கள்- திருக்குறள்-

 பதிவு-2-நிலைமக்கள்-

திருக்குறள்-

 

தலைவராக

இருப்பதற்கென்று

தனிப்பட்ட

ஐந்து தகுதிகள்

இருக்கின்றன

 

(1)

பொறுமை

 

(2)

நிதானம்

 

(3)

தொலைநோக்கு

பார்வை

 

(4)

அனைத்தையும்

சமாளிக்கும் திறன்

 

(5)

அனைவரையும்

கட்டுப்படுத்தும்

திறமை

 

இந்த ஐந்து

தனிப்பட்ட தகுதிகளும்

யாரிடம் இருக்கிறதோ

அவரால் மட்டுமே

தலைவராக

இருக்க முடியும்.

 

தலைவராக

இருந்தவர்கள்

தலைவராக

இருப்பவர்கள்

என்று யாரை

எடுத்துக் கொண்டாலும்

அவர்கள்

இந்த ஐந்து

தனிப்பட்ட

தகுதிகளையும்

பெற்றவர்களாகத்

தான் இருப்பார்கள்.

 

ஒரு தலைவர்

எப்படி இருக்க

வேண்டும் என்பதற்கு

இந்த நிகழ்வை

படியுங்கள்.

 

தாழ்த்தப்பட்ட மக்கள்

அனைவரும்

வரும் காலங்களில்

சுதந்திரமாகவும் ;

சமத்துவமாகவும் ;

சகோதரத்துவமாகவும் ;

வாழ வேண்டும்

என்பதற்காகவும் ;

தாழ்த்தப்பட்ட

மக்களுக்கு

கிடைக்க வேண்டிய

அடிப்படை உரிமைகள்

அனைத்தும்

அவர்களுக்கு

கிடைக்க வேண்டும்

என்பதற்காகவும் ;

டாக்டர்.அம்பேத்கர்

தொலைநோக்கு

பார்வையுடன்

உருவாக்கிய

திட்டங்களை,

டாக்டர்.அம்பேத்கரின்

பெரும் முயற்சியினால்

1932-ஆம் ஆண்டு

ஆகஸ்ட் மாதம்

17-ஆம் நாள்

"கம்யூனல் அவார்டு"

என்று அழைக்கப்படும்

தாழ்த்தப்பட்ட

மக்களுக்கான இரட்டை

வாக்குரிமைக்கான

அறிவிப்பு

லண்டனிலிருந்து

மன்னரின் ஆணையாக

அறிவிக்கப்பட்டது.

 

இரட்டை

வாக்குரிமையின் படி,

தாழ்த்தப்பட்ட மக்கள்

தாழ்த்தப்பட்ட

சாதியைச் சேர்ந்த

வேட்பாளருக்கு

ஒரு வாக்கும்,

பொதுத் தொகுதி

வேட்பாளருக்கு

ஒரு வாக்கும்

போடலாம்,

இதனால்

தாழ்த்தப்பட்ட

வகுப்பைச் சார்ந்த

உறுப்பினரை

தாழ்த்தப்பட்ட மக்கள்

மட்டுமே கூடித்

தேர்ந்தெடுக்கலாம்.

இதன் மூலம்,

சமுதாயத்தில்

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு

கிடைக்கக்கூடிய

அனைத்து உரிமைகளும்

கிடைக்கும்

என்பது தான்

இரட்டை

வாக்குரிமையின் சிறப்பு.

 

டாக்டர்.அம்பேத்கர்

தொலைநோக்கு

பார்வையுடன் உருவாக்கிய

இந்த சிறப்பு

வாய்ந்த திட்டமே

அம்பேத்கரின்

விடா முயற்சியினால்

1932-ஆம் ஆண்டு

ஆகஸ்ட் மாதம்

17ஆம் நாள்

"கம்யூனல் அவார்டு"

என்று அழைக்கப்படும்

தாழ்த்தப்பட்ட

மக்களுக்கான

இரட்டை

வாக்குரிமைக்கான

அறிவிப்பாக

லண்டனிலிருந்து

மன்னரின் ஆணையாக

வெளியானது.

 

தலைவருக்குரிய

தொலைநோக்கு

பார்வையானது

டாக்டர்.அம்பேத்கரிடம்

இவ்வாறு

வெளிப்பட்டது.

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------30-09-2021

////////////////////////////////////////////////

No comments:

Post a Comment