August 18, 2024

ஜபம்-பதிவு-1007 மரணமற்ற அஸ்வத்தாமன்-139 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1007

மரணமற்ற அஸ்வத்தாமன்-139

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

(பாண்டவர்களின் பாசறை, இறந்து கிடக்கும் தன்னுடைய பிள்ளைகளைப் பார்க்கிறாள் பாஞ்சாலி.)

பாஞ்சாலி : பாண்டவர்களின் பிள்ளைகளைக் கொல்லும் அளவுக்கு யாருக்கு தைரியம் இருக்கிறது.

பாண்டவர்களின் பிள்ளைகள் என்று தெரிந்திருந்தும் கொன்று இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்.

அவர்களுக்கு அந்த தைரியம் எங்கிருந்து வந்தது.

அந்த தைரியத்தை அவர்களுக்கு கொடுத்தது யார்.

கிருஷ்ணன் : புலியைக் கொல்ல வந்தவர்கள், மானை வேட்டையாடி விட்டு சென்றிருக்கிறார்கள்.

கடன், நெருப்பு, பகை இந்த மூன்றையும் எப்போதும் யாரும் மிச்சம் வைக்கக் கூடாது. அப்படி யார் மிச்சம் வைக்கிறாரோ, மிச்சம் வைத்தவரையே இந்த மூன்றும் அழித்து விடும் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே மிகச் சிறந்த உதாரணம்.

பாஞ்சாலி : பாண்டவர்களின் பகைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் அல்லவா.

கிருஷ்ணன் : அப்படி நினைத்தால் அது நம்முடைய தவறு. மிச்சம் இருந்த பகை எஞ்சி நின்று தன்னுடைய வேலையைச் செய்து விட்டது.

பாஞ்சாலி : பாண்டவர்களின் பிள்ளைகள்

என்று தெரிந்திருந்தும் என்னுடைய பிள்ளைகளைக் கொன்றது யார்

 

பாண்டவர்களின் பிள்ளைகளைக் கொன்று விட்டு

இந்த உலகத்தில் உயிரோடு இருக்க முடியாது

என்று தெரிந்திருந்தும் என்னுடைய பிள்ளைகளைக் கொன்றது யார்.

 

பாண்டவர்களைப் பகைத்துக் கொண்டால் தங்களுக்கு அழிவு நிச்சயம்

என்று தெரிந்திருந்தும் என்னுடைய பிள்ளைகளைக் கொன்றது யார்

யார் , யார்,

யார் என்னுடைய பிள்ளைகளைக் கொன்றது

கிருஷ்ணன் : அஸ்வத்தாமன்

பாஞ்சாலி : துரோணரின் மகன் அஸ்வத்தாமனா?

கிருஷ்ணன் : ஆமாம்! அவனே தான்.

பாஞ்சாலி : எதற்காக? இந்தக் காரியத்தைச் செய்தான்.

கிருஷ்ணன் : தன்னுடைய நண்பன் துரியோதனனுக்காக இந்தக் காரியத்தைச் செய்தான்.

பாஞ்சாலி : துரியோதனனின் நண்பன் கர்ணன் அல்லவா?

கிருஷ்ணன் : அப்படித் தான் இந்த உலகம் நம்பிக் கொண்டு இருக்கிறது.

இந்த உலகம் அறியாத சரித்திரம் ஒன்று இருக்கிறது

மறைக்கப்பட்ட வீர சரித்திரம் ஒன்று இருக்கிறது

யாரிடமும் சொல்லப்படாத சரித்திரம் ஒன்று இருக்கிறது

எழுதப்படாத ரத்த சரித்திரம் ஒன்று இருக்கிறது

ஏட்டில் வராத மறைக்கப்பட்ட சரித்திரம் ஒன்று இருக்கிறது

யாரும் அறிந்து கொள்ள முயற்சி செய்யாத சரித்திரமாக ஒரு விஷயம் இருக்கிறது. அந்த விஷயத்தை இந்த உலகம் அறிந்து கொள்ள முயற்சி செய்யாத விஷயமாக இருக்கிறது.

நாம் வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்களைத் தவற விட்டு விடுகிறோம். நாம் தவற விட்ட அந்த விஷயங்கள் தான் நமக்கு தொல்லை கொடுக்கக் கூடியவையாக நம் முன்னால் வந்து நிற்கிறது.

அது தான் நமக்கு எமனாக வந்து நிற்கிறது

அது தான் நம்மை ஆட்டிப் படைக்கக் கூடியவையாக வந்து நிற்கிறது

அது தான் நம்முடைய நிம்மதியைக் கெடுக்கக் கூடியவையாக வந்து நிற்கிறது

சாதாரணமாக நினைக்கும் விஷயங்கள் தான்,

 

இந்த விஷயத்தால் நமக்கு பாதிப்பு கிடையாது என்று

நினைக்கும் விஷயங்கள் தான்,

 

நாம் அக்கறை காட்டாத விஷயங்கள் தான்,

 

நாம் வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கும் விஷயங்கள் தான்,

 

நாம் அலட்சியமாக நினைக்கும் விஷயங்கள் தான்

 

நம்முடைய விதியையே முடிக்கும் நிலைக்கு

 

நம்மைக் கொண்டு சென்று விடுகிறது.

 

துரியோதனனுக்கு இரண்டு நண்பர்கள், ஒன்று அஸ்வத்தாமன், இரண்டு கர்ணன்.

அஸ்வத்தாமனைப் பற்றி முழுவதும் அறிந்து வைத்திருந்தவர்கள் இந்த உலகத்தில் இரண்டே இரண்டு பேர்கள் தான். ஒன்று துரோணர், இரண்டு நான்.

அஸ்வத்தாமனை மட்டும் கௌரவர்களின் படைத்தளபதியாக துரியோதனன் நியமித்து இருந்திருந்தால் முதல் நாள் போரிலேயே பாண்டவர்கள் வீழ்த்தப்பட்டு இருப்பார்கள். கௌரவர்கள் வெற்றி பெற்று இருப்பார்கள்.

அஸ்வத்தாமனை கௌரவர்களின் படைத்தளபதியாக நியமனம் செய்யாதது துரியோதனன் செய்த மிகப்பெரிய தவறு.

துரியோதனனுக்கு அஸ்வத்தாமன் மேல் ஏற்பட்ட சந்தேகம் அவனை இந்தச் செயலை செய்ய விடாமல் தடுத்து விட்டது.

அஸ்வத்தாமனையும், கர்ணனையும் ஒப்பிடும் போது அஸ்வத்தாமன் தான் துரியோதனனுக்கு உண்மையான நண்பனாக இருந்திருக்கிறான். கர்ணன் துரியோதனனுக்கு உண்மையான நண்பனாக இருந்தது இல்லை.

நம்முடன் இருப்பவர்களுடைய மதிப்பு நமக்குத் தெரியவில்லை என்றால் நமக்கு அழிவு என்பது நிச்சயம் என்பதை துரியோதனன் வாழ்க்கை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

துரியோதனனுடைய வாழ்க்கையை பார்த்தாவது இனி மேல் நாம் நம்முடன் இருப்பவர்களுடைய மதிப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

No comments:

Post a Comment