ஜபம்-பதிவு-1012
மரணமற்ற அஸ்வத்தாமன்-144
(கடவுளுக்கே சாபம்
கொடுத்தவனின் கதை)
வேத
வியாசர் : யார்
வீரன் என்பது இங்கே முக்கியம் இல்லை. அதிகமான அழிவை ஏற்படுத்தக் கூடிய அஸ்திரங்களை
உணர்ச்சிவயப்பட்டு பயன்படுத்தி விடப்போகிறீர்கள் என்ற காரணத்திற்காக உன்னை இங்கே இருக்கச்
சொல்கிறேன்.
அஸ்வத்தாமன்
: பாண்டவர்கள்
என்னை கோழை என்று நினைக்க மாட்டார்களா
வேத
வியாசர் : மற்றவர்கள்
நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தால் நம்மால் இந்த உலகத்தில்
வாழவே முடியாது
இந்த உலகத்தில் உள்ள பெரும்பாலானவரகள்
நம்மை தவறாக பேசிக் கொண்டு தான்
இருப்பார்கள்
நம்மைக் குறை சொல்லிக் கொண்டு தான்
இருப்பார்கள்
நம்மை ஏளனப் படுத்திக் கொண்டு தான்
இருப்பார்கள்.
நம்மை அவமானப் படுத்திக் கொண்டு
தான் இருப்பார்கள்.
நம்மை அசிங்கப் படுத்திக் கொண்டு
தான் இருப்பார்கள்.
இதை எல்லாம் கணக்கில் எடுத்துக்
கொள்ளாமல் நாம் நம்முடைய கடமையைச் செய்தால் மட்டுமே நம்மால் இந்த உலகத்தில் வாழ முடியும்
சாதனைகள் செய்ய முடியும்
ஆகவே பாண்டவர்கள் உன்னை என்ன சொல்வார்கள்
என்று நினைக்காதே
நான் சொல்வதைக் கேள்
பாண்டவர்கள் இங்கு வரட்டும் அது
வரை நீ இங்கேயே இரு
அஸ்வத்தாமன் : சரி முனிவரே உங்கள் வார்த்தைக்கு
நான் கட்டுப்படுகிறேன்.
பாண்டவர்கள் இங்கு வரும் வரை நான்
இங்கேயே இருக்கிறேன்
(என்று அஸ்வத்தாமன் வேத வியாசர்
ஆசிரமத்தில் இருக்கிறான்)
-----ஜபம் இன்னும் வரும்
-----K.பாலகங்காதரன்
-----எழுத்தாளர்
----18-08-2024
----ஞாயிற்றுக்
கிழமை
/////////////////////////////////
No comments:
Post a Comment