ஜபம்-பதிவு-1010
மரணமற்ற அஸ்வத்தாமன்-142
(கடவுளுக்கே சாபம்
கொடுத்தவனின் கதை)
சூரிய அஸ்தனமத்திற்குள் ஜெயத்ரதனைக்
கொல்வேன் அப்படிக் கொல்லாவிட்டால் தீ மூட்டி இறப்பேன் என்று அர்ஜுனன் சபதம் செய்தான்
அந்த சபதத்தை எடுப்பதற்கு முன்னால் அதை அவனால் செய்ய முடியுமா என்பதை அர்ஜுனன் யோசிக்க
வேண்டாமா
அவன் யோசிக்கவில்லை. கௌரவர்களின்
பெரும்படையைத் தாண்டி ஜெயத்ரதனைக் கொல்ல முடியுமா என்று யோசித்தானா யோசிக்கவில்லை.
துரோணர் தளபதியாக இருக்கும் போது
ஜெயத்ரதனை நெருங்க முடியுமா என்று யோசித்தானா யோசிக்கவில்லை
அர்ஜுனன் எதையுமே யோசிக்கவில்லை.
உணர்ச்சிவயப்பட்டு சபதம் எடுத்தான்
உணர்ச்சி வயப்பட்டு செய்யும் செயல்கள்
மட்டுமல்ல சபதமும் தவறானது தான் என்பதை ஏன்
நீங்கள் உணரவில்லை.
சூரியனை மறைத்து ஜெயத்ரனை வெளியில்
வரவழைத்தேன் அதன் பிறகு தான் அர்ஜுனனால் ஜெயத்ரதனைக் கொல்ல முடியாது,
சபதம் எடுப்பதற்கு முன்னால் நம்மால்
அந்த சபதத்தை நிறைவேற்ற முடியுமா என்று ஆராய்ந்து பார்த்த பிறகு தான் சபதம் எடுக்க
வேண்டும்.
நம்மால் அந்த சபதத்தை நிறைவேற்ற
முடியாது என்று தெரிந்தால் நாம் சபதம் எடுக்கவே கூடாது
உணர்ச்சி வயப்பட்டு எடுக்கும் எந்த
ஒன்றும் உருப்படாது என்பதற்கு நீங்கள் அனைவரும் எடுக்கும் சபதம் தான் சாட்சி
அந்த வரிசையில் நீ சபதம் எடுக்கிறாய்
அவனை அடிமையாக கொண்டு வந்தால் தான் சாப்பிடுவேன், உறங்குவேன் என்கிறாய்
உங்களைத் திருத்தவே முடியாது. எவ்வளவு சொன்னாலும்
நீங்கள் திருந்தவே மாட்டீர்கள். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதைத் தான்
செய்து கொண்டிருக்கிறீர்கள்.
பீமன்
: நான் செல்கிறேன்,
அஸ்வத்தாமனை நாட்டை விட்டுத் துரத்துகிறேன்.
பாஞ்சாலி
: அதை நான் எப்படி
நம்புவது
பீமன்
: நீ நம்ப நான்
என்ன செய்ய வேண்டும் பாஞ்சாலி.
பாஞ்சாலி
: அஸ்வத்தாமன்
நெற்றியில் ஒரு ஸயந்தகமணி இருக்கிறது. அது அற்புதங்கள் நிறைந்தது. அது எனக்கு வேண்டும்.
பீமன்
: அதைக் கொண்டு
வருகிறேன்.
(என்று சொல்லி விட்டு பீமன் ரதத்தில்
ஏறினான். நகுலன் சாரதியானான். அஸ்வத்தாமனை தேடிப் புறப்பட்டான்.
கிருஷ்ணன் தர்மரிடம் பேசினார்.)
கிருஷ்ணன்
: பீமன் தனியாகச் செல்வது
சரியான செயல் கிடையாது. பீமன் மரணத்தை தானே சென்று வாங்குவது போல் உள்ளது.
அஸ்வத்தாமனை யாராலும் வீழ்த்த முடியாது. அவனிடம் அற்புத
ஆயுதங்கள் உள்ளது.
தெய்வீக அஸ்திரங்கள் உள்ளது. அதை பீமனால் சமாளிக்க முடியாது.
அர்ஜுனா உன்னால் மட்டும் தான் அஸ்வத்தாமனை சமாளிக்க முடியும்.
வா கிளம்பலாம்.
மரணத்தைத் தேடிச் சென்ற பீமனை மரணம் நெருங்குவதற்கு முன்னர்
பீமனை தடுப்போம். வா
(என்று கிருஷ்ணன் அர்ஜுனன், தர்மர் ஆகியோரைக் கூட்டிக்
கொண்டு ரதத்தில் ஏறி புறப்பட்டனர்.)
-----ஜபம் இன்னும் வரும்
-----K.பாலகங்காதரன்
-----எழுத்தாளர்
----18-08-2024
----ஞாயிற்றுக்
கிழமை
/////////////////////////////////
No comments:
Post a Comment