ஜபம்-பதிவு-1018
மரணமற்ற அஸ்வத்தாமன்-150
(கடவுளுக்கே சாபம்
கொடுத்தவனின் கதை)
ஆன்மீகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலையை
அடைந்தாலும் பாவம் செய்து விட்டு யாரும் தப்பிக்க முடியாது என்பதை இந்த உலகம் உன்னைப்
பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.
மந்திரத்தில் யாரும் தொட முடியாத
உச்சத்தைத் தொட்டாலும் பாவம் செய்து விட்டு யாரும் தப்பிக்க முடியாது என்பதை இந்த உலகம்
உன்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.
எத்தனை
கோயில் கோயிலாக அலைந்தாலும்,
எத்தனை
சாமிகளைக் கும்பிட்டாலும்,
எவ்வளவு
பிராயச்சித்தம் செய்தாலும்
பாவம்
செய்து விட்டு யாரும் தப்பிக்க முடியாது என்பதை இந்த உலகம் உன்னைப் பார்த்துத் தெரிந்து
கொள்ளட்டும்.
பாவத்தின்
பலனை கண்டிப்பாக அனுபவித்தே ஆக வேண்டும்
பாவத்தைச்
செய்து விட்டு அதன் விளைவிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது,
பாவமன்னிப்பு
யாரும் யாருக்கும் தரமுடியாது,
பாவமன்னிப்பால்
பாவத்தை யாராலும் தீர்க்க முடியாது,
என்பதை
இந்த உலகம் உன்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.
ஞானம்,
சமாதி என்ற நிலையை அடைந்தவர்களாக இருந்தாலும்,
முக்தி
என்ற நிலையை அடையாதவர்களாக இருந்தாலும்,
பாவம்
செய்து விட்டு யாரும் தப்பிக்க முடியாது என்பதை இந்த உலகம் உன்னைப் பார்த்துத் தெரிந்து
கொள்ளட்டும்.
அஸ்வத்தாமா!
மரணமற்ற அஸ்வத்தாமா
உனக்கு மரணமில்லை என்ற காரணத்தினால்
தானே இத்தகைய ஒரு காரியத்தைச் செய்யத் துணிந்தாய்.
உன் நெற்றியில் இருக்கும் ஸயந்தகமணி
இனி உனக்கு சொந்தம் இல்லை. அது இருந்ததால் தானே எதை எல்லாம் செய்யக் கூடாதோ அதை எல்லாம்
செய்தாய்.
இனி அது உனக்கு சொந்தம் இல்லை.
அதை வைத்திருக்கும் தகுதியும் உனக்கு இல்லை. அது உலகத்தின் பொக்கிஷம். எடுத்துக் கொடுத்து
கொடு.
அஸ்வத்தாமன்
: என்னுடைய ஸ்யமந்தகமணியை,
என்னுடன் பிறந்த என்னுடைய ஸ்யமந்தகமணியை, என்னை காப்பாற்றிக் கொண்டிருந்த அந்த ஸ்யமந்தகமணியை, யாரும் தொட வேண்டும். தொடுவதற்கு யாருக்கும் தகுதி
இல்லை. குறிப்பாக பாண்டவர்களுக்கு அந்தத் தகுதி கிடையவே கிடையாது.
கர்ணனுடைய கவச குண்டலங்களை எப்படி
நயவஞ்சகமாக பெற்று அவனைக் கொன்று விட்டீர்களோ. அதைப் போல் என்னுடைய ஸ்யமந்தகமணியைப்
பெற்று என்னை கொல்லப் பார்க்கிறீர்கள்
என்னை நயவஞ்சகமாக யாரும் கொல்லவும்
முடியாது. என்னை கொல்லக் கூடிய சக்தியும் யாருக்கும் கிடையாது.
ஏன் நீங்கள் கடவுளாக நினைக்கும்
அந்த கிருஷ்ணனுக்கும் கிடையாது.
ஏனென்றால் நான் மரணமற்றவன் என்பது
அனைவருக்கும் தெரியும்.
என்னைக் கொல்ல முடியாது என்ற காரணத்தால்,
என்னிடமிருந்து என்னுடைய ஸ்யமந்தகமணியை பிரித்து எனக்கு கஷ்டத்தை உண்டாக்க முடிவு செய்து
விட்டீர்கள். அதனால் என்னுடைய ஸ்யமந்தகமணியை கேட்கிறீர்கள்.
இதற்கு மேல் நான் மனிதர்களுடன்
வாழ விரும்பவில்லை. அவர்களுடன் இணைந்து இருக்க விரும்பவில்லை.
நல்லவர்கள்
போல் நடிக்கும் மனிதர்களுடன்,
சுயநலத்துடன்
வாழும் மனிதர்களுடன்,
தான்
வாழ பிறரை கெடுக்கும் பாவத்தைச் செய்யும் மனிதர்களுடன்,
பாவம்
என்று தெரிந்தும் துணிந்து பாவத்தைச் செய்யும் மனிதர்களுடன்,
பணம்
பதவி அதிகாரத்திற்காக பாவம் செய்யும் மனிதர்களுடன்,
தர்மம் என்று சொல்லிக் கொண்டு
அதர்மச் செயல்களைச் செய்யும் மனிதர்களுடன்,
இனி நான் வாழ விரும்பவில்லை
கடவுளே இந்த உலகத்தில் பிறந்து வந்தாலும்
சூழ்ச்சி செய்து தான் வாழ வேண்டும்
என்ற நிலை உண்டான பிறகு,
தர்மம் என்ற வார்த்தையைச் சொல்லி
அதர்மச் செய்யும் கடவுளர்கள்
இந்த உலகத்தில் வாழும் நிலை உண்டான பிறகு,
இந்த உலகத்தில்
உண்மையானவர்கள்,
நேர்மையானவர்கள்,
நல்லவர்கள்
வாழ வழி இல்லாமல் போன பிறகு
இந்த மனிதர்களுடன் வாழ நான் விரும்பவில்லை
மனிதர்களை விட்டு விலகிச் செல்லவே விரும்புகிறேன்.
நாட்டை விட்டு காட்டிற்குள் செல்லவே விரும்புகிறேன்.
நான் இந்த உலகத்தில் பிறந்த கடமை
முடிந்து விட்டது. நான் இந்த உலகத்திற்கு வந்த வேலையை முடித்து விட்டேன்.
இதற்கு மேல் நான் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை.
இதற்கு மேல் அந்த ஸ்யமந்தகமணி எனக்குத்
தேவையில்லை. அதை வைத்திருக்கவும் நான் விரும்பவில்லை.
நான் என்னுடைய ஸ்யமந்தகமணியை பிச்சையாகப்
போடுகிறேன். எடுத்துக் கொள்ளுங்கள்.
(என்று அஸ்வத்தாமன் தன்னுடைய நெற்றியில்
இருந்த ஸ்யமந்தகமணியை வெட்டி எடுத்து கிருஷ்ணனுக்கு பிச்சை போட்டான்.
கிருஷ்ணன் அந்த ஸ்யமந்தகமணியை பிச்சையாகப்
பெற்றுக் கொண்டான்.)
-----ஜபம் இன்னும் வரும்
-----K.பாலகங்காதரன்
-----எழுத்தாளர்
----18-08-2024
----ஞாயிற்றுக்
கிழமை
/////////////////////////////////
No comments:
Post a Comment