August 18, 2024

ஜபம்-பதிவு-1013 மரணமற்ற அஸ்வத்தாமன்-145 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1013

மரணமற்ற அஸ்வத்தாமன்-145

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

(வேத வியாசர் ஆசிரமத்திற்கு தர்மர், பீமன், அர்ஜுனன், நகுலன், கிருஷ்ணன் ஆகியோர் வந்து விட்டனர்.)

அர்ஜுனன் : அஸ்வத்தாமா! நீயெல்லாம் ஒரு வீரனா? இரவில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை கொன்று இருக்கிறாயே நீ வீரனே கிடையாது.  வீரன் என்று சொல்வதற்கே தகுதி இல்லாதவன். நீ ஒரு கோழை?

அஸ்வத்தாமன் : யாரடா கோழை. நீ தான் கோழை. பாண்டவர்கள் தான் கோழைகள். பாண்டவர்களுடன் சேர்ந்த அனைவரும் தான் கோழைகள்.

உங்களுக்கு வீரம் என்ற ஒன்று இருந்திருந்தால் வீரத்துடன் போரிட்டு வெற்றி பெற்று இருப்பீர்கள். உங்களுக்கு வீரம் என்ற ஒன்று இல்லாத காரணத்தினால் தான் சூழ்ச்சிகள் செய்து வெற்றி பெற்று இருக்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் கோழைகள் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

நீங்கள் அனைவரும் கோழைகள். வீரம் என்ற வார்த்தையைச் சொல்வதற்கு உங்களில் யாருக்கும் தகுதியே இல்லை.

நான் இரவில் தூங்கிக் கொண்டிருந்தவர்களைக் கொல்லவில்லை.

தூங்குபவர்களைக் கொல்லும் அளவுக்கு நான் கோழையும் இல்லை, கொடியவனும் இல்லை, இரக்கமற்றவனும் இல்லை. உங்களைப் போல சூழ்ச்சி செய்து கொல்லும் அளவுக்கு நான் கெட்டவனும் இல்லை.

நான் தூங்கிக் கொண்டிருந்தவர்களைக் கொல்லவில்லை. தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பித் தான் கொன்றேன்.

தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பித் தான் அனைவரையும் கொல்ல வேண்டும் என்று எண்ணித் தான் கொன்றேன்.

கொல்வது யார் என்று தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்குத் தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவர்களைக் கொன்றேன்.

அஸ்வத்தாமன் தான் அவர்களைக் கொன்றான் என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டும் என்று எண்ணத்தில் தான் அவர்களைக் கொன்றேன்

 

தாங்கள் அஸ்வத்தாமனின் கைகளால் தான் சாகிறோம் என்பதைத் தெரிந்து தான் சாக வேண்டும் என்பதற்காகத் தான் அவர்களை தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கொன்றேன்.

ஆனால், பாண்டவர்களை தூக்கத்தில் இருந்து எழுப்பித் தான் கொல்ல வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

அந்த எண்ணம் எனக்கு ஏற்படவும் இல்லை.  

அவர்களை தூக்கத்திலேயே கொல்ல வேண்டும் என்று நினைத்துத் தான் கொன்றேன்.

தங்களைக் கொன்றவர் யார் என்று தெரியாமல் தான் பாண்டவர்கள் சாக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவர்களைக் கொன்றேன்.

தங்களுக்கு இறப்பு யாரால் வந்தது, எதனால் வந்தது, எந்த காரணத்திற்காக வந்தது, யார் கொன்றார்கள், எதற்காக கொன்றார்கள், என்ற காரணம் கூட அவர்களுக்குத் தெரியக் கூடாது என்ற காரணத்திற்காகத் தான் பாண்டவர்களை தூங்கும் போது கொன்றேன்.

பாண்டவர்களைக் கொல்கிறேன் என்று நினைத்துத் தான் கொன்றேன். ஆனால் நான் கொன்றது பாண்டவர்களை அல்ல. பாண்டவர்களின் பிள்ளைகளை என்பது எனக்கு பிறகு தான் தெரிந்தது.

நான் நினைத்தது தவாறாகி விட்டது என்பது தெரிந்தது. பாண்டவர்களைக் கொல்லத் தவறி விட்டேன் என்பது தெரிந்தது. பாண்டவர்களைக் கொல்லாமல் மிகப்பெரிய தவறைச் செய்து விட்டேன் என்று தெரிந்தது.

நான் பாண்டவர்களைக் கொல்ல வருகிறேன் என்று தெரிந்ததும், பாண்டவர்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக பாண்டவர்களை ஒளிய வைத்து விட்டான் கிருஷ்ணன்.

என் கையால் பாண்டவர்கள் சாகக் கூடாது என்ற காரணத்திற்காக பாண்டவர்களை ஒளிய வைத்து விட்டான் கிருஷ்ணன்.

தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பாண்டவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். பாண்டவர்கள் உயிரைக் காப்பாற்ற அவர்களை ஒளிய வைத்தது கிருஷ்ணன் தான்

பாண்டவர்கள் உண்மையாகவே வீரர்களாக இருந்திருந்தால் அன்று கூடாரத்தில் இருந்திருக்க வேண்டும். அவர்கள் கோழைகள். உயிருக்கு பயந்த கோழைகள்.

அஸ்வத்தாமன் தங்களைக் கொல்ல வருகிறான் என்று தெரிந்ததும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி ஒளிந்து கொண்டார்கள். அதற்கு உதவி செய்தது கிருஷ்ணன்.

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

No comments:

Post a Comment