ஜபம்-பதிவு-1008
மரணமற்ற அஸ்வத்தாமன்-140
(கடவுளுக்கே சாபம்
கொடுத்தவனின் கதை)
பாஞ்சாலி
: என்னுடைய பிள்ளைகளைக்
கொன்றவனைப் புகழ்கிறீர்கள்
கிருஷ்ணன்
: அஸ்வத்தாமன் என்பவன் யார்
அவன் எப்படிப்பட்டவன் என்பதைச் சொன்னேன்.
பாஞ்சாலி
: அஸ்வத்தாமனின் இறந்த
உடல் எனக்கு வேண்டும்
கிருஷ்ணன்
: அது முடியாத காரியம்
பாஞ்சாலி
: ஏன் முடியாது
அர்ஜுனன் பீமன் போன்ற வீரர்கள்
இருக்கும் போது கூட முடியாதா
கிருஷ்ணன்
: அவர்களால் மட்டுமல்ல. பாண்டவர்களால்
மட்டுமல்ல. இந்த உலகத்தில் உள்ள யாராலும் முடியாது
பாஞ்சாலி
: ஏன் அவ்வாறு
சொல்கிறீர்கள்
கிருஷ்ணன்
: ஏனென்றால்
மரணமற்றவன் அஸ்வத்தாமன்
அவனுக்கு மரணம் என்பதே கிடையாது
இந்த உலகத்தில் உள்ள கடைசி உயிர்
இருக்கும் வரை அவன் இந்த உலகத்தில் உயிரோடு இருப்பான்
மனித குலத்தின் கடைசி மனிதன் இறந்த
பிறகு இறக்கக் கூடியவன்
கடைசி உயிர் இறந்த பின் தான் அவன்
இறப்பான்
பாஞ்சாலி
: அவனைக் கொன்று
வர வேண்டாம்
கொண்டு வரலாம் அல்லவா
அடிமைப்படுத்தி கொண்டு வரலாம் அல்லவா
கிருஷ்ணன்
: அதுவும் அவ்வளவு எளிதான காரியம்
அல்ல
18 நாள் குருஷேத்திரப் போரில் யாரும்
செய்ய முடியாததை அவன் செய்து முடித்து இருக்கிறான்.
இந்த உலகத்திற்கு தான் யார் என்பதை
நிரூபித்துக் காட்டி விட்டான்
இறந்து போன உன் பிள்ளைகளை மட்டுமே
பார்த்து கொண்டு இருக்கிறாய். அதனால் உன்னைச் சுற்றி நடத்தப்பட்ட அழிவுகளை நீ பார்க்கத்
தவறி விட்டாய். பார்த்து இருந்தால் நீ இவ்வாறு பேசிக் கொண்டு இருக்க மாட்டாய்.
பாஞ்சாலி
: அவனை வீழ்த்தி
விட்டு வரலாம் அல்லவா?
கிருஷ்ணன்
: அவனை வீழ்த்த முடியாது
பாஞ்சாலி
: அவனைக் கொல்ல
முடியாது
அவனை அடிமைப்படுத்த முடியாது
அவனை வீழ்த்த முடியாது
வேறு என்ன தான் செய்ய முடியும்
அஸ்வத்தாமனை
இறந்து கிடப்பது என்னுடைய பிள்ளைகள்
என்பதை கருத்தில் கொண்டு அஸ்வத்தாமனை என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள். அவனை என்ன
செய்ய முடியும் என்று சொல்லுங்கள்.
கிருஷ்ணன்
: அஸ்வத்தாமனே அனைத்தையும் விட்டு விட்டு அவனே
விலகிச் சென்றால்
தான் உண்டு.
நாட்டில் இருக்க
விரும்பவில்லை என்று அவனே
விலகிச் சென்றால்
தான் உண்டு.
மக்களிடம் இருக்க
விரும்பவில்லை என்று அவனே
விலகிச் சென்றால்
தான் உண்டு.
யாருடனும் வாழ விரும்பவில்லை
என்று அவனே
விலகிச் சென்றால்
தான் உண்டு.
பணம் பதவி அதிகாரம்
என்று எதுவும்
எனக்கு வேண்டாம்
என்று அவனே
விலகிச் சென்றால்
தான் உண்டு.
உறவுகள் வேண்டாம்,
சொந்தங்கள் வேண்டாம்,
நண்பர்கள் வேண்டாம்
என்று
அவனே அனைவரையும்
விட்டு விட்டு
விலகிச் சென்றால்
தான் உண்டு.
அனைத்தையும் துறந்து
விட்டு அவனே
விலகிச் சென்றால்
தான் உண்டு.
நம்மால் அஸ்வத்தாமனை
ஒன்றும் செய்ய முடியாது.
யாராலும் அஸ்வத்தாமனை
ஒன்றும் செய்ய முடியாது
பாஞ்சாலி
: இறந்த என்னுடைய பிள்ளைகளின்
ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் அஸ்வத்தாமன் நாட்டில் இருக்கக் கூடாது. மக்களிடையே
இருக்கக் கூடாது. உறவுகளிடையே இருக்கக் கூடாது. யாருடனும் இருக்கக் கூடாது. யாருடனும் வாழக் கூடாது.
அவனைக் காட்டிற்குள் விரட்டுங்கள். நாட்டிற்குள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதையாவது
செய்யுங்கள்.
கிருஷ்ணன்
: பாஞ்சாலி! உன்னுடைய ஐந்து பிள்ளைகள் இறந்ததற்கே
இப்படி துடிக்கிறாய் காந்தாரி தன்னுடைய 100 பிள்ளைகளை இழந்து தவிக்கிறாளே அவள் எப்படி
துடித்து இருப்பாள்
பாஞ்சாலி
: அவர் பிள்ளைகளும்
என் பிள்ளைகளும் ஒன்றா
கிருஷ்ணன்
: தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்று
தான்.
பாஞ்சாலி
: ஏன் என்னுடைய
பிள்ளைகளை தன்னந்தனியாக கூடாரத்தில் இரவில் விட்டு விட்டு சென்றீர்கள் அவர்களையும்
அழைத்துக் கொண்டு சென்று இருந்தால் அவ்ரகளுக்கு இத்தகைய ஒரு நிலை ஏற்பட்டு இருக்காது
அல்லவா?
கிருஷ்ணன்
: எல்லா விஷயங்களையும் மாற்ற முடியாது.
ஒரு சில விஷயங்களை மட்டுமே மாற்ற முடியும்
பாஞ்சாலி
: நீங்கள் நினைத்தால்
அனைத்தையும் மாற்றலாமே. என் பிள்ளைகளைக் காப்பாற்றி இருக்கலாமே.
கிருஷ்ணன்
: விதிக்கு உட்பட்டுத் தான் எதையுமே
செய்ய முடியும்
விதியை மீறி எந்த ஒன்றையும் செய்ய
முடியாது.
நான் விதிக்கு கட்டுப்பட்டுத்தான்
பாண்டவர்களை அழைத்துச்சென்றேன்
பாஞ்சாலி
: அதே விதிக்கு
கட்டுப்பட்டு என் பிள்ளைகளை அழைத்துச் சென்று இருக்கலாமே
கிருஷ்ணன்
: விதியை மீறிய செயலைச் செய்ய முடியாது.
ஒன்று வேண்டும் என்றால் ஒன்றை இழந்து
தான் ஆக வேண்டும் இரண்டுமே கிடைக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அது பிரபஞ்ச விதிகளுக்கு
மாறானது.
ஒன்றாவது இருக்கிறதே என்று சந்தோஷப்பட
வேண்டும்
மற்றொன்று இல்லையே என்று வருத்தப்படக்
கூடாது.
பாஞ்சாலி
: பாண்டவர்களின்
விதியை மாற்றீனீரகள்
ஏன் என் பிள்ளைகளின் விதியை மாற்றவில்லை
கிருஷ்ணன்
: பாண்டவர்களால் சில விஷயங்கள் நடக்க
வேண்டி இருக்கிறது
பாஞ்சாலி
: என் பிள்ளைகளால்
எந்தப் பயனும் இல்லையா?
அதனால் தான் அவர்கள் இறக்கட்டும்
என்று விட்டு விட்டீர்களா?
அஸ்வத்தாமன்
வருவான் என்று தெரிந்து இருக்கும் போது பாண்டவர்களை
விட்டு சென்றிருந்தால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டு இருக்காது
அல்லவா, என் பிள்ளைகளும் இறந்து இறக்க மாட்டார்கள் அல்லவா
ஏன் பாண்டவர்களை மட்டும் கூட்டிக்
கொண்டு சென்றீர்கள்
-----ஜபம் இன்னும் வரும்
-----K.பாலகங்காதரன்
-----எழுத்தாளர்
----18-08-2024
----ஞாயிற்றுக்
கிழமை
/////////////////////////////////
No comments:
Post a Comment