ஜபம்-பதிவு-688
(சாவேயில்லாத
சிகண்டி-22)
பீஷ்மரை
வீழ்த்துவதற்காக
செலுத்தப்பட்ட
அம்புகள் ஒன்று
கூட
பீஷ்மரை
துளைக்கவே இல்லை
காயத்தை
ஏற்படுத்தவே
இல்லை
பீஷ்மர் வாள்
எடுத்து சுழன்ற
போது
தான் வீரம்
என்றால்
என்ன என்பதை
அந்த சுயம்வர
மண்டபத்தில்
இருந்தவர்கள்
தெரிந்து கொண்டனர்
காசி மன்னர்
என்ன செய்வது
என்று தெரியாமல்
விழி பிதுங்கி
நின்று கொண்டிருந்தார்
அங்கு நடக்கும்
நிகழ்வுகளை
வைத்த கண்
வாங்காமல்
பார்த்துக்
கொண்டு
இருந்தார்
தன்னுடைய மூன்று
மகள்களுக்காகவே
இத்தகைய நிகழ்ச்சிகள்
நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது
என்ற
வருத்தத்துடன்
நடப்பவைகளை
உன்னிப்பாகக்
கவனித்துக்
கொண்டு இருந்தார்
தன்னை எதிர்ப்பவர்கள்
யாரும் இல்லை
என்று முடிவு
செய்த பிறகு
பீஷ்மர்
காசி நாட்டு
மன்னனை நோக்கி
பேசத் தொடங்கினார்)
பீஷ்மர்:
மன்னா
காசி நாட்டு
இளவரசிகளான
உன்னுடைய மூன்று
மகள்களை
நான் சிறையெடுத்துச்
செல்லப் போகிறேன்
நீயாக அவர்களை
அனுப்பி வைக்கப்
போகிறாயா
அல்லது
அவர்களை நான்
வலுக்கட்டாயமாக
சிறை
எடுத்து செல்லட்டுமா
பீமதேவன் :
தேவையில்லை
இதற்கு மேல்
இழப்புகள் ஏற்பட
நான் விரும்பவில்லை
விரும்பத்தகாத
விளைவுகள்
ஏற்பட நான்
விரும்பவில்லை
என் மகள்கள்
பொருட்டு இனி
மேலும் யாரும்
காயம்பட நான்
விரும்பவில்லை
காசி நாடு அழிவதையும்
காசி நாட்டு
மக்கள்
துன்பப்படுவதையும்
பார்த்துக்
கொண்டு
சும்மா இருக்க
நான்
விரும்பவில்லை
என்னுடைய மகள்களை
நானே வழியனுப்பி
வைக்கிறேன்
(என்று சொல்லி
விட்டு
தன் மகள்களை
நோக்கி பீஷ்மருடன்
செல்லுமாறு
கைகளால்
சைகை செய்தார்.
கைகளில் வைத்திருந்த
மணமாலைகளை
கீழே வைத்து
விட்டு
மூன்று இளவரசிகளும்
பீஷ்மருடன்
சென்று
அவருடன் தேரில்
ஏறி
அஸ்தினாபுரத்தை
நோக்கி சென்று
கொண்டிருந்தனர்.
சில அரசர்கள்
ஒன்று சேர்ந்து
ஆயுதங்களை
ஏந்திக் கொண்டு
தேரில் வந்து
அவரை எதிர்த்தனர்
பீஷ்மர் அவர்களுடைய
வில்லை உடைத்து
தேரை உடைத்து
அவர்களுக்கு
காயங்களை ஏற்படுத்தி
அவர்களை தரையில்
விழச் செய்து
எழுந்திருக்க
முடியாமல்
படுத்த
படுக்கையாக்கி
விட்டு
தேரில் ஏறி
மூன்று இளவரசிகளுடன்
அஸ்தினாபுரம்
நோக்கி
சென்று கொண்டிருந்தார்
அப்போது
பீஷ்மா எங்கே
ஓடுகிறாய்
என் அம்புகளுக்கு
பதில் சொல்லி
விட்டு போ
என்ற குரலைக்
கேட்டு
குரல் வந்த
திசையை
நோக்கி திரும்பினார்
பீஷ்மர்
அங்கு
சௌபால நாட்டு
மன்னன் சால்வன்
நின்று கொண்டிருந்தான்.)
சால்வன் :
எதிர்த்தவர்களை
வீழ்த்தி விட்டோம்
காயம் பட்டவர்கள்
ஓடி விட்டார்கள்
இனி திரும்பி
வர மாட்டார்கள்
என்று நினைத்தாயா
பீஷ்மா
-----------
ஜபம் இன்னும் வரும்
-------------எழுத்தாளர்
-----------
K.பாலகங்காதரன்
-------------18-02-2022
-------------வெள்ளிக்
கிழமை
/////////////////////////////////
No comments:
Post a Comment