ஜபம்-பதிவு-692
(சாவேயில்லாத
சிகண்டி-26)
பீஷ்மர் :
காதலிப்பவர்களுக்கு
அறிவுரை சொல்லி
பயனில்லை
என்பதை உணர்ந்து
கொண்டேன்
இறுதியாக
உங்கள் முடிவு
அம்பை :
என்னுடைய
முடிவு ஒன்று
தான்
சால்வனைத்
தவிர வேறு
யாரையும் திருமணம்
செய்து கொள்ள
மாட்டேன்
பீஷ்மர் :
நான் என்ன
செய்ய வேண்டும்
அம்பை :
என்னுடைய இரண்டு
கோரிக்கைகளை
நிறைவேற்றுங்கள்
போதும்
பீஷ்மர் :
என்ன கோரிக்கைகள்
அம்பை :
ஒன்று
விசித்திர
வீர்யனுக்கும்
எனக்கும்
நடைபெற இருக்கும்
திருமணத்தை
நிறுத்த வேண்டும்
இரண்டு
சால்வனை நேரில்
சந்தித்து திருமணம்
செய்து கொள்வதற்காக
வெளியே செல்ல
எனக்கு அனுமதி
அளிக்க வேண்டும்
பீஷ்மர் :
செயல்படுத்தும்
உரிமை தான்
எனக்கு உண்டு
முடிவு எடுக்கும்
உரிமை எனக்கு
கிடையாது
தாய் சத்தியவதி
என்ன
முடிவு எடுக்கிறார்
பார்ப்போம்
நான் தாய்
சத்தியவதியை
சந்தித்து விட்டு
வருகிறேன்
அம்பை :
அதுவரை
பீஷ்மர் :
காத்திருங்கள்
அம்பை :
எவ்வளவு காலம்
பீஷ்மர் :
நீங்கள் எது
நல்ல முடிவு
என்று
நினைக்கிறீர்களோ
அது கிடைக்கும்
வரை
அம்பை :
சரி
பீஷ்மர் :
காத்திருப்பீர்கள்
என்று நினைக்கிறேன்
(அம்பை
எதுவும் பேசவில்லை.
அமைதியாக இருந்தாள்.
பீஷ்மர் போவதையே
பார்த்துக்
கொண்டு
இருந்தாள்)
(தாய் சத்தியவதி
அறைக்குள்
பீஷ்மர் உள்ளே
நுழைகிறார்.
தாய் சத்தியவதியிடம்
பீஷ்மர் பேசத்
தொடங்குகிறார்)
பீஷ்மர் :
நான் தவறு
செய்து விட்டேன்
சத்தியவதி :
யார் சொன்னார்கள்
பீஷ்மர் :
அம்பை சொல்கிறாள்
சத்தியவதி :
ஏன் அவ்வாறு
சொல்கிறாள்
பீஷ்மர் :
அம்பை
சௌபால நாட்டின்
மன்னன் சால்வனை
காதலித்தாளாம்
அவனையே திருமணம்
செய்து கொள்வதற்கு
முடிவு எடுத்திருந்தாளாம்
அவனைத் தான்
தன்னுடைய கணவனாக
நினைத்திருந்தாளாம்
சுயம்வரத்தில்
அவனுக்கு
மாலையிட்டு
திருமணம்
செய்வதற்கு
திட்டமிட்டிருந்தாளாம்
சுயம்வரத்தில்
சால்வனுக்கு
மாலையிடும்
நேரத்தில் நான்
அம்பையைச்
சிறையெடுத்து
வந்துவிட்டேனாம்
அதனால்
நான் தவறு செய்து
விட்டேனாம்
தவறான செயலைச்
செய்து விட்டேனாம்
சொல்கிறாள்
அம்பை
சத்தியவதி :
அம்பையை சிறையெடுத்து
வரும் போது
சொன்னாளா
பீஷ்மர் :
சொல்லவில்லை
-----------
ஜபம் இன்னும் வரும்
-------------எழுத்தாளர்
-----------
K.பாலகங்காதரன்
-------------18-02-2022
-------------வெள்ளிக்
கிழமை
/////////////////////////////////
No comments:
Post a Comment