ஜபம்-பதிவு-694
(சாவேயில்லாத
சிகண்டி-28)
பீஷ்மர் :
திருமணத்திற்கு
முன்பு காதல்
செய்வது
இயல்பான ஒன்று
தான் அதில்
தவறில்லை
சால்வனை
மறந்துவிட்டு
விசித்திர வீர்யனை
திருமணம் செய்து
கொள்வதாக இருந்தால்
திருமணம் செய்து
கொள்ளுங்கள்
என்றேன்
சத்தியவதி :
சரியாகத்
தானே சொன்னாய்
பீஷ்மர் :
ஆனால்
அம்பை அதை
ஏற்றுக்
கொள்வதாக இல்லை
சத்தியவதி :
ஏன்
பீஷ்மர் :
காதலில்
விழுந்தவர்களுக்கு
யார் அறிவுரை
சொன்னாலும்
பிடிக்காது.
அறிவுரையை
கேட்கவும் மாட்டார்கள்
வாழ்க்கையை
வாழ்ந்து
அனுபவித்து
முடித்த பிறகு
தான்
காதல் எப்படிப்பட்டது
என்பதை புரிந்து
கொள்வார்கள்
சத்தியவதி :
சரியாகத் தான்
சொன்னாய்
பீஷ்மர் :
இப்போது என்ன
செய்யலாம் தாயே
சத்தியவதி :
சால்வனை மறந்து
விட்டு விசித்திர
வீர்யனை திருமணம்
செய்து கொள்ள
விரும்பினால்
திருமணம்
நடத்துவதற்கான
அனைத்து
செயல்களையும்
செய்யுங்கள்
சால்வனைத் தான்
திருமணம் செய்வேன்
என்று சொன்னால்
வெளியே செல்வதற்கு
அனுமதி அளியுங்கள்
இரண்டில் அம்பை
எதை விரும்புகிறாளோ
அதை செய்யுங்கள்
மற்ற இரு இளவரசிகள்
பீஷ்மர் :
விசித்திர வீர்யனை
திருமணம் செய்து
கொள்ள
சம்மதம் தெரிவித்து
விட்டார்கள்
சத்தியவதி :
நல்லது
நான் சொன்னதை
உடனடியாக
செயல்படுத்து
பீஷ்மர் :
அப்படியே ஆகட்டும்
தாயே
(பீஷ்மர் தாய்
சத்தியவதியிடம்
விடை பெற்றுக்
கொண்டு
அம்பையை
சந்திக்கச்
செல்கிறார்)
(அம்பை காத்துக்
கொண்டிருக்கும்
அறைக்குள்
பீஷ்மர் உள்ளே
நுழைகிறார்.
பீஷ்மரின் வருகைக்காக
காத்துக் கொண்டிருந்த
அம்பை,
பீஷ்மர் அறைக்குள்
நுழைந்ததும்
பீஷ்மரைப்
பார்க்கிறாள்.
பீஷ்மரை நோக்கி
அம்பை பேசத்
தொடங்குகிறார்)
அம்பை :
பார்த்தீர்களா
பேசினீர்களா
சொன்னீர்களா
என்ன சொன்னார்கள்
ஒத்துக் கொண்டார்களா
(அம்பை படபடத்தாள்)
பீஷ்மர் :
பொறுமை
அம்பை
பொறுமை
பொறுமையுடனும்
நிதானத்துடனும்
செய்யும்
செயல்கள் தான்
வெற்றியில்
முடியும்
ஏனென்றால்
அப்போது தான்
அறிவென்பது
செயல்படும்
அறிவு ஒருவரை
சரியாக வழி
நடத்தும்
ஆனால்
கோபத்தின் போதும்
உணர்ச்சி
வயப்படும் போதும்
செய்யும் செயல்கள்
வெற்றியில்
முடியாது
ஏனென்றால்
அப்போது தான்
மனமென்பது செயல்படும்
மனம் ஒருவரை
தவறாக வழி நடத்தும்
அறிவு நம்மை
வழி நடத்துகிறதா
அல்லது
மனம் நம்மை
வழி நடத்துகிறதா
என்பதை வேறுபடுத்தி
அறிந்து கொள்ளத்
தெரிந்தவர்கள்
தான்
அறிவு வழி
நின்று
செயல்களைச்
செய்து
வெற்றி பெறுகின்றனர்
-----------
ஜபம் இன்னும் வரும்
-------------எழுத்தாளர்
-----------
K.பாலகங்காதரன்
-------------18-02-2022
-------------வெள்ளிக்
கிழமை
/////////////////////////////////
No comments:
Post a Comment