ஜபம்-பதிவு-690
(சாவேயில்லாத
சிகண்டி-24)
அம்பை :
நான் தேடி வந்தது
உங்களைத் தான்
பீஷ்மர் :
எதற்காக
அம்பை :
உங்களைப்
பார்ப்பதற்காகத்
தான்
பீஷ்மர் :
என்னை பார்ப்பதற்காகவா
அம்பை :
ஆமாம்
உங்களை
பார்ப்பதற்காகத்
தான்
உங்களிடம் சில
விஷயங்களைச்
சொல்ல வேண்டும்
என்பதற்காகத்
தான்
பீஷ்மர் :
எதைப்பற்றி
அம்பை :
திருமணத்தைப்
பற்றி
பீஷ்மர் :
எந்த
திருமணத்தைப்
பற்றி
அம்பை :
எனக்கும் விசித்திர
வீர்யனுக்கும்
இடையே
நடக்கவிருக்கும்
திருமணத்தைப்
பற்றி
பீஷ்மர் :
சொல்லுங்கள்
அம்பை :
திருமணம் செய்யப்
போகும் இரண்டு
பேரும் விருப்பப்பட்டு
அதனால்
ஒத்துக் கொண்டால்
மட்டுமே செய்யப்படுவது
தானே திருமணம்
பீஷ்மர் :
ஆமாம்
அம்பை :
இரண்டு பேரில்
ஒருவர், விரும்பவில்லை
அதனால் ஒத்துக்
கொள்ளவில்லை
என்றால்
திருமணம் செய்வது
முறையாகுமா
பீஷ்மர் :
முறையாகாது
அம்பை :
ஏன் முறையாகாது
பீஷ்மர் :
ஏனென்றால்
இருவரில் ஒருவர்
விருப்பப்படாமல்
ஒத்துக் கொள்ளாமல்
இருக்கும் போது
வலுக்கட்டாயமாக
செய்யப்படும்
திருமண வாழ்க்கை
இனிக்காது
அதனால் தான்
அம்பை :
அப்படி என்றால்
எனக்கும் விசித்திர
வீர்யனுக்கும்
இடையே
நடக்கவிருக்கும்
திருமணத்தை
நிறுத்த வேண்டும்
பீஷ்மர் :
ஏன் நிறுத்த
வேண்டும்
அம்பை :
ஏனென்றால்
இந்த திருமணத்தில்
எனக்கு
விருப்பம் இல்லை
பீஷ்மர் :
ஏன்
விருப்பம் இல்லை
அம்பை :
ஏனென்றால்
நான் சௌபால
நாட்டின் மன்னன்
சால்வனைக்
காதலித்தேன்
அவரைத் தான்
என்னுடைய
கணவராக நினைத்தேன்
சுயம்வரத்தில்
அவருக்கு மாலையிட்டு
திருமணம் செய்து
அவருக்கு
மனைவியாக வேண்டும்
என்று முடிவெடுத்தேன்
என்னுடைய எண்ணம்
நிறைவேறும்
சமயத்தில் தான்
நீங்கள் என்னைக்
சிறையெடுத்து
வந்து விட்டீர்கள்
பீஷ்மர் :
பருவம் வரும்
போது காதல்
கொள்வது என்பது
இயல்பான
ஒன்று தானே
அதுமட்டுமல்ல
காதல் என்பது
உடல் கவர்ச்சியினால்
ஏற்படுவது தானே
அம்பை :
எல்லாக் காதலும்
உடல் கவர்ச்சியினால்
மட்டுமே ஏற்படுவது
அல்ல
உயிர் எழுச்சியினாலும்
ஏற்படுகிறது
எங்கள் காதலும்
உயிர் எழுச்சியினால்
ஏற்பட்டது
உடல் கவர்ச்சியினால்
ஏற்பட்டது அல்ல
பீஷ்மர் :
இரண்டும் ஒன்று
தான்
-----------
ஜபம் இன்னும் வரும்
-------------எழுத்தாளர்
-----------
K.பாலகங்காதரன்
-------------18-02-2022
-------------வெள்ளிக்
கிழமை
/////////////////////////////////
No comments:
Post a Comment