ஜபம்-பதிவு-691
(சாவேயில்லாத
சிகண்டி-25)
அம்பை :
இல்லை
உடல் கவர்ச்சியினால்
ஏற்படும் காதல்
உடலின் தேவை
தீர்ந்தவுடன்
அழிந்து விடும்
ஆனால்
உயிர் எழுச்சியினால்
ஏற்படும்
காதல் உடலை
விட்டு உயிர்
பிரிந்த பின்னும்
நிலைத்து நிற்கும்
பீஷ்மர் :
திருமணத்திற்கு
முன்பு காதல்
செய்வதும் தப்பில்லை
காதல் செய்பவரைத்
தான் திருமணம்
செய்ய வேண்டும்
என்று நினைப்பதும்
தப்பில்லை
காதலித்தவரை
திருமணம் செய்ய
முடியாவிட்டால்
வேறொருவரை
திருமணம் செய்து
கொள்வதும் தப்பில்லை
ஆனால்
காதலித்தவரை
திருமணம் செய்ய
முடியாமல்
வேறு ஒருவரை
திருமணம்
செய்த பிறகு
காதலித்தவரை
நினைப்பது
தான் தவறு
அம்பை :
இத்தகைய
ஒரு தவறு என்
வாழ்க்கையில்
நடைபெற்று
விடக்கூடாது
என்பதற்காகத்
தான்
நான் சால்வனைக்
காதலிப்பதை
திருமணம்
நடைபெறுவதற்கு
முன்பாகவே
உங்களிடம்
சொல்கிறேன்
பீஷ்மர் :
நீங்கள் சால்வனை
மறந்து விட்டு
விசித்திர வீர்யனை
திருமணம் செய்து
கொள்வதற்கு
விருப்பம் என்றால்
திருமணத்திற்கு
தேவையான
ஏற்பாடுகளைச்
செய்கிறேன்
அம்பை :
சால்வனைத் தவிர்த்து
யாரை திருமணம்
செய்தாலும்
என் உயிர்
என் உடலில்
இருக்காது
பீஷ்மர் :
காதல் என்ற
திரை
உங்கள் கண்களை
மறைப்பதால்
இந்த உலகம்
உங்கள்
கண்களுக்குத்
தெரியவில்லை
இதனால் நீங்கள்
எடுத்த முடிவு
தான்
சரி என்று நினைத்துக்
கொண்டிருக்கிறீர்கள்
காதல் போதை
உங்கள் அறிவை
மயக்கி இருக்கிறது..
தப்பு தப்பாக
சிந்திக்கிறீர்கள்
காதல் திருமணத்தில்
முடிந்த பிறகு
வாழ்க்கை என்ற
ஒன்று ஆரம்பிக்கும்
என்பதை மறந்து
விட்டீர்கள்
வாழ்க்கையை
வாழும் போது
தான் தெரியும்
காதல் செய்து
தவறிழைத்திருக்கிறோம்
என்று
காதல் முடிந்து
ஆரம்பிக்கும்
வாழ்க்கை
எப்படி இருக்கும்
என்று நினைத்துப்
பார்த்தீர்களா
நல்ல வாழ்க்கை
மரியாதைக்குரிய
வாழ்க்கை
யாருக்கும்
கிடைக்காத வாழ்க்கை
உங்களுக்காகக்
காத்துக்
கொண்டிருக்கிறது
உங்களுக்காகக்
காத்துக் கொண்டிருக்கும்
வாழ்க்கையை
விட்டு விட்டு
ஏன் எதையோ
தேடி ஓடுகிறீர்கள்
நாங்கள் கொடுக்கும்
வாழ்க்கை
உங்களுடைய
நல்லதுக்குத்
தான்
இருக்கும்
அம்பை :
நீங்கள் கொடுக்கும்
வாழ்க்கை எனக்குத்
தேவையில்லை
நான் தேர்ந்தெடுத்து
வைத்திருக்கும்
வாழ்க்கையை
வாழ்வதற்கு
எனக்கு அனுமதி
கொடுங்கள்
அது போதும்
பீஷ்மர் :
அனுபவசாலிகள்
சொல்லும் அறிவுரையை
செவி கொடுத்து
கேட்க மாட்டேன்
என்கிறீர்கள்
அம்பை :
அனுபவசாலிகள்
என்ற முறையில்
அறிவுரை
சொல்வது தான்
இந்த உலகத்தின்
நடைமுறை
அதையே தான்
நீங்களும் செய்கிறீர்கள்
-----------
ஜபம் இன்னும் வரும்
-------------எழுத்தாளர்
-----------
K.பாலகங்காதரன்
-------------18-02-2022
-------------வெள்ளிக்
கிழமை
/////////////////////////////////
No comments:
Post a Comment