ஜபம்-பதிவு-689
(சாவேயில்லாத
சிகண்டி-23)
காயத்தினால்
வழிந்த
இரத்தத்தின்
சுவடுகள் கூட
காய்வதற்குள்
உன்னை
எதிர்ப்பதற்கு
வந்திருக்கிறேன்
பீஷ்மா
இனிமேல் தான்
நீ ஒரு
உண்மையான வீரனைப்
பார்க்கப் போகிறாய்
வில்லை எடுத்துக்
கொள்
முடிந்தால்
உன்
உயிர் உன் உடலை
விட்டு போகாமல்
தடுத்துக் கொள்
பீஷ்மர் :
நான் யார்
என்று தெரியாமல்
என் முன்னால்
வந்து நிற்கிறாய்
என்னை எதிர்த்தவர்களை
இந்த உலகத்தில்
இல்லாமல்
செய்திருக்கிறேன்
என்பதை அறியாமல்
என் முன்னால்
வந்து நிற்கிறாய்
நான் விருப்பப்பட்டால்
மட்டுமே எனக்கு
மரணம் என்று
வரம் பெற்றவன்
இந்த பீஷ்மர்
என்பதை அறியாமல்
என் முன்னால்
வந்து நிற்கிறாய்
திருமணம் என்ற
நல்ல விஷயம்
நடைபெற வேண்டும்
என்பதற்காக
வந்திருக்கிறேன்
நான் உனக்கு
ஒரு வாய்ப்பு
தருகிறேன்
இங்கிருந்து
சென்று விடு
உன்னைக் கொன்று
தவறான விஷயம்
நடைபெறுவதற்கு
நான் காரணமாக
இருக்க மாட்டேன்
என்னை வழி
மறிக்காமல்
இங்கிருந்து
சென்று விடு
சால்வன் :
பேசியது
போதும் பீஷ்மா
உன்னுடைய
வில்லை எடு
பீஷ்மர் :
பேசியது
புரியவில்லை
என்றால்
செயலில் காட்ட
வேண்டியது தான்
உன்னிடம் பேசி
பயனில்லை
செயல் தான்
சிறந்தது
(என்று பீஷ்மர்
தன்னுடைய வில்லில்
இருந்து அம்பை
செலுத்துகிறார்
சால்வனுக்கும்
பீஷ்மருக்கும்
இடையே
கடுமையான
சண்டை நடைபெறுகிறது
சால்வன் வீழ்த்தப்பட்டு
காயம் பட்டு
எழுந்திருக்க
முடியாமல்
தரையில் படுத்துக்
கிடந்தான்.
அவனைப் பார்த்து
பீஷ்மர் பேசத்
தொடங்கினார்)
பீஷ்மர் :
நான் ஏற்கனவே
உன்னிடம்
சொன்னது போல
நான் திருமணம்
என்ற
நல்ல விஷயத்தை
நடத்துவதற்காக
வந்திருக்கிறேன்
தவறான
விஷயத்தை
செய்வதற்காக
நான் வரவில்லை
அதனால் உன்னை
உயிரோடு விட்டுச்
செல்கிறேன்
பிழைத்துக்
கொள்
(என்று சொல்லி
விட்டு
பீஷ்மர் காசி
நாட்டு
மூன்று
இளவரசிகளுடன்
அஸ்தினாபுரம்
நோக்கி
சென்று கொண்டிருந்தார்
தன்னுடைய
அழிவிற்கான
விதையை
பீஷ்மர்
காசி நாட்டில்
விதைத்து விட்டு
வந்திருக்கிறார்
என்பது
அப்போது அவருக்குத்
தெரியாது
பீஷ்மர் மூன்று
இளவரசிகளையும்
அஸ்தினாபுரம்
அழைத்துச் சென்று
தாய் சத்தியவதியிடம்
அவர்கள் மூவரையும்
ஆசிகள் பெறச்
செய்து
அவர்கள் தங்குவதற்கான
அனைத்து
ஏற்பாடுகளையும்
செய்து விட்டு
தன்னுடைய அறையில்
சென்று ஓய்வு
எடுத்துக் கொண்டு
இருந்தார் பீஷ்மர்
அப்போது பீஷ்மர்
இருக்கும் அறைக்குள்
அம்பை உள்ளே
நுழைகிறார்,
அம்பை வருவதைப்
பார்த்த பீஷ்மர்
அம்பையை நோக்கி
பேசத் தொடங்குகிறார்)
பீஷ்மர் :
உங்களுக்கு
என்ன
தேவை என்பதைச்
சொல்லி அனுப்பியிருந்தால்
நீங்கள் விருப்பப்பட்டது
உங்களைத் தேடி
வந்திருக்குமே
-----------
ஜபம் இன்னும் வரும்
-------------எழுத்தாளர்
-----------
K.பாலகங்காதரன்
-------------18-02-2022
-------------வெள்ளிக்
கிழமை
/////////////////////////////////
No comments:
Post a Comment