ஜபம்-பதிவு-681
(சாவேயில்லாத
சிகண்டி-15)
(காசி நாட்டில்
அரண்மனைக்கு
அருகில் உள்ள
மைதானத்தில்
அலங்காரம்
செய்யப்பட்ட
சுயம்வரம்
மண்டபம்
அமைக்கப்பட்டது.
அழைப்பிதழ்
பெறப்பட்டு
சுயம்வரத்தில்
கலந்து
கொள்ள வந்த
மன்னர்கள்,
காசி நாட்டு
மக்கள்
ஆகியோர் அந்த
சுயம்வர மண்டபத்தில்
கூடி இருந்தனர்
காலத்தை கணிக்கும்
கணியர் எழுந்து
நின்று பேசத்
தொடங்கினார்)
கணியர் :
விரத்தை
தன்னிடத்தே
கொண்டவராய்
வெற்றியை
அணிகலனாய்
அணிந்தவராய்
எளிமையின்
இலக்கணமாகத்
திகழ்பவராய்
ஏற்றத்திற்கு
உதாரணமாக
விளங்குபவராய்
அன்புக்கு
அடிபணியும்
நல்லவராய்
ஆளுமையில்
சிறந்து விளங்கும்
வல்லவராய்
உறவுக்கு கை
கொடுக்கும்
உத்தமராய்
உரிமைக்கு குரல்
கொடுக்கும்
காவலனாய்
வந்தாரை
வாழவைக்கும்
கருணை உள்ளம்
கொண்ட
கொடையாளியாய்
வாழ்பவர்களின்
வாழ்க்கைத்
தரத்தை
உயர்த்தும்
உயர்ந்த உள்ளம்
கொண்டவராய்
காலம் தந்த
தங்கப் புதையலாய்
வரலாறு காணாத
சாதனை நாயகனாய்
விளங்கிக்
கொண்டிருக்கும்
காசி நாட்டு
மன்னர்
பீமதேவன் உடன்
அவருடைய
மனைவி புராவதி
அவர்களும் இணைந்து
ஒன்றாய்
வருகிறார்கள்
வருகிறார்கள்
வருகிறார்கள்
(காசி நாட்டு
மன்னன் பீமதேவன்
தன்னுடைய மனைவி
புராவதியுடன்
இணைந்து
சுயம்வர
மண்டபத்திற்குள்
நுழைந்தான்.
இருவரும்
ஒன்றாக இணைந்து
அவையோரைப்
பார்த்து
இருகரம் கூப்பி
வணக்கம்
செலுத்தி விட்டு
மன்னன் பீமதேவன்
அரியணையில்
அமர்ந்தான்.
காசி மன்னர்
உள்ளே நுழைந்து
அரியணையில்
அமரும் வரை
அரசர் வாழ்க
அரசி வாழ்க
அமைச்சர் வாழ்க
இளவரசிகள் வாழ்க
என்ற வாழ்த்துக்கள்
அந்த சுயம்வர
மண்டபத்தில்
எதிரொலித்துக்
கொண்டிருந்தது
காசி மன்னரின்
வலப்பக்கம்
அமைச்சர்
பால்குனர் நின்று
கொண்டிருந்தார்.
காசி மன்னரின்
இடப்பக்கம்
அணுக்கச் சேவகன்
பாவகன் நின்று
கொண்டிருந்தான்.
கணியர் மீண்டும்
பேசத் தொடங்கினார்.)
கணியர் :
இந்த சிறப்புமிக்க
சுயம்வரம் விழாவில்
காசி நாட்டு
மன்னர்
பீமதேவன்
அவர்கள்
அனைவரையும்
வரவேற்று
பேசுவார்
(பீமதேவன்
தன்னுடைய
இருக்கையை விட்டு
எழுந்து அனைவரையும்
இருகரம் கூப்பி
வணங்கி விட்டு
அனைவரையும்
பார்த்து
பேசத் தொடங்குகினார்)
-----------
ஜபம் இன்னும் வரும்
-------------எழுத்தாளர்
-----------
K.பாலகங்காதரன்
-------------18-02-2022
-------------வெள்ளிக்
கிழமை
/////////////////////////////////
No comments:
Post a Comment