ஜபம்-பதிவு-804
(சாவேயில்லாத
சிகண்டி-138)
(ஸ்தூணாகர்ணனைக்
கண்டுபிடித்து சிகண்டினி
அவர் இருக்கும்
இடம் சென்றார்.
சிகண்டினியைக் கண்டதும்
ஸ்தூணாகர்ணன்
பேசத் தொடங்கினார்)
ஸ்தூணாகர்ணன் :
மனிதர்களுடன்
வாழப்பிடிக்காமல்
மனிதர்களையே
பார்க்கக் கூடாது
அவர்களுடைய
சுவாசக் காற்று கூட
என் மேல்
படக்கூடாது
என்று முடிவு எடுத்து
மனிதர்களை
விட்டு விலகி வந்து
நெடுந்தொலைவில்
இருக்கும்
இந்த வனத்தில்
தனிமையில் அமைதியாக
வாழ்ந்து கொண்டிருக்கும்
என்னுடைய அமைதியைக்
கெடுக்க வந்திருக்கிறாயா
சிகண்டினி :
உங்களுடைய
அமைதியைக்
கெடுக்க வரவில்லை
உங்களிடமிருந்து
அமைதியைப்
பெறுவதற்காகவே
வந்திருக்கிறேன்
ஸ்தூணாகர்ணன் :
இரக்கமற்ற மனிதர்களால்
கொடுஞ்செயல் புரியப்பட்டு
கஷ்டத்தினால்
வேதனையில் வாடிய
எனக்கே இன்னும்
அமைதி கிடைக்கவில்லை
என்னால் உனக்கு
எப்படி அமைதி
தர முடியும்
சிகண்டினி :
கஷ்டத்தை
அனுபவித்தவர்களுக்குத் தான்
மற்றவர்களுடைய
கஷ்டம் தெரியும்
உதவி செய்வார்கள்
கஷ்டத்தை
அனுபவிக்காதவர்களுக்கு
மற்றவர்களுடைய
கஷ்டம் தெரியாது
ஏளனம் மட்டுமே
செய்வார்கள்
உதவி செய்ய
மாட்டார்கள்
ஸ்தூணாகர்ணன் :
மனிதர்கள்
அறிவற்றவர்கள்
என்று நினைத்தேன்
அறிவுள்ளவர்களும்
மனிதர்களில்
இருக்கிறார்கள் என்பதை
உன்னைப்
பார்த்த பிறகு தான்
தெரிந்து கொண்டேன்
அறிவுடன் பேசுகிறாயே
யார் நீ
சிகண்டினி :
பாஞ்சால நாட்டு
மன்னன் துருபதனின்
மூத்த மகள்
என்னுடைய பெயர்
சிகண்டினி
ஸ்தூணாகர்ணன் :
நாட்டை ஆள
வேண்டியவள்
காட்டிற்கு
வரக் காரணம்
சிகண்டினி :
உங்களிடம் ஒரு
உதவியைப் பெறுவதற்காக
வந்திருக்கிறேன்
உங்களால் தான் அந்த
உதவியைச் செய்ய
முடியும் என்று நம்பி
வந்திருக்கிறேன்
அந்த உதவியை
நீங்கள் கண்டிப்பாக
செய்வீர்கள் என்ற
நம்பிக்கையுடன்
வந்திருக்கிறேன்
ஸ்தூணாகர்ணன் :
நீங்கள் கட்டளையிட்டால்
உதவி செய்வதற்கு
ஆயிரம் பேர் வருவார்களே
சிகண்டினி :
உதவி என்பது
கட்டளையிட்டுப்
பெறுவது கிடையாது
அடிபணிந்து பெறுவது
அடிமையாக
இருந்து பெறுவது
ஸ்தூணாகர்ணன் :
எந்த செல்வமும்
இல்லாமல்
இருக்கும் என்னால்
உனக்கு என்ன
உதவி செய்ய முடியும்
சிகண்டினி :
உதவி செய்வதற்கு
செல்வம் இருக்க
வேண்டும் என்ற
அவசியம் இல்லை
மனம் இருந்தால் போதும்
ஸ்தூணாகர்ணன் :
உன்னுடைய
வார்த்தைகள் என்னை
நெகிழ்ச்சியடையச்
செய்கிறது
நான் உனக்கு
என்ன செய்ய வேண்டும்
என்று எதிர்பார்க்கிறாய்
சிகண்டினி :
நீங்கள் எனக்கு
அன்னையாக இருந்து
வழிகாட்ட வேண்டும்
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழு.த்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----20-07-2022
-----புதன் கிழமை
No comments:
Post a Comment